ஃபிஷ் ஃபிங்கர்ஸ் (Fish Fingers)

தேதி: April 5, 2007

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

விரல் நீள மீன் துண்டுகள் - 20
மைதா - ஒரு கப்
உப்பு - 1 1/2 ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 1/4 கப்
ப்ரெட் க்ரம்ப்ஸ் அல்லது ரஸ்க் தூள் - ஒரு கப்
எலுமிச்சை - 1/2 மூடி
எண்ணெய் - 250 மி.லி. அல்லது 8 மேஜைக்கரண்டி


 

மீன் துண்டுகளை எலுமிச்சை சாறு, உப்பு 1/2 ஸ்பூன் போட்டு பிரட்டி வைக்கவும்.
மைதா மாவு, கார்ன் ஃப்ளார், உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவுக்கு கரைப்பது போல் கரைத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
மீன் துண்டங்களை மாவில் நனைத்து உடனே ப்ரெட் க்ரம்ப்ஸ் அல்லது ரஸ்க் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட்டு மேலும் ஒரு நிமிடம் வைத்திருந்து பொரித்து எடுக்கவும்.
இதை சாஸுடனோ அல்லது பச்சை வெங்காயத்தை மெலிதான ஸ்லைஸ்களாக வைத்தோ பரிமாறவும்.


மீன் பிடிக்காத, சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தேவை முள்ளில்லாத மீன். வெளிநாடுகளில் Fish Fillets என்று கிடைக்கும். இந்தியாவில் உள்ளவர்கள் வஞ்சிரம்(Macquarel), Tuna(மகர மீன்), கெண்டை மீன், கானாங்கெலுத்தி முதலிய அதிகம் முள்ளில்லாத வகை மீன்களை உபயோகிக்கலாம். மீனை வாங்கி அதன் தலையை முதலில் நறுக்கி பிறகு வால் பக்கத்தில் வெட்டி அங்கிருந்து மீன் தோலை பிடித்து இழுத்தால் சுலபமாக வந்துவிடும். எளிதாக வர சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைக்கலாம். பிறகு முள்ளிற்கு மேல் புறம் உள்ள சதைப்பகுதியை தனியாக வெட்டி எடுக்கவும். பிறகு முள் பகுதியை திருப்பி போட்டு அடுத்த பக்கம் உள்ள சதைப் பகுதியை தனியாக வெட்டி எடுத்து விரல் நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

hi deva akka,
how r u? akka yennakku oru doubt pls help me, fish finger ikku hotel la white colour la oru sauce tharuvanga, athu yenna sauce? yeppadi seiyarathu? yenakku solluvingala?

thanks&regards,
deepa

hi,
thanks for your reply, yeppa yennakku senju kamippinga akka?..

அந்த சாஸுக்கு பேர் மயோனைஸ்,முட்டையின் மஞ்சள் கருவுடன் எண்ணெய் சேர்த்து செய்வது,அதை எப்படி செய்வது என்று என் குறிப்பில் பின் செய்து காட்டுகிறேன்!

Eat healthy

how r u deva mam? இந்த fish fingers பார்த்தேன் செய்யலாம் என்று தோன்றியது. அதற்குள் எனக்கு ஒரு சந்தேகம். தெளிவு செய்வீர்களா? காரத்திற்கு, இதில் தனி மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாமா? எங்கு சேர்ப்பது மாவு கரைக்கும் போது அதனுடன் சேர்த்து கரைத்துக் கொள்ளலாமா? சந்தேகம் தெளிந்த பிறகு செய்யலாம் என்று விட்டுவிட்டேன். இப்போது உங்களின் குறிப்பில் மலாய் முட்டை சம்பல் செய்ய போகிறேன் செய்து விட்டு நாளை எப்படி இருந்தது என்று சொல்கிறேன்.நன்றி bye bye.

மிளகாய்த்தூளை மாவு கரைக்கும் போது சேர்க்கலாம்.பெரியவர்களுக்கு செய்வதாக இருந்தால் மீனில் மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள்,எலுமிச்சை சாறு,உப்பு போட்டு பிரட்டி ஊறவைத்து பிறகு மாவில் நனைத்து செய்யலாம்.