தேதி: March 30, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கடலைப்பருப்பு - 2 1/2 கப்
முந்திரிப்பருப்பு - 10 கிராம்
வற்றல்தூள் - இரண்டு தேக்கரண்டி
உப்புத்தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய் - சுடுவதற்கு
கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பருப்பு நன்றாக ஊறியதும் அதை சுத்தம் செய்து கண்தட்டில் தண்ணீர் வடிய வைக்கவும்.
தண்ணீர் வடிந்ததும் வெள்ளைத்துண்டில் தட்டி ஈரத்தைத் துடைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கை பருப்பை அள்ளிப் போட்டு நன்றாக பொரிந்து மேலே வந்து சத்தம் அடங்கியதும் கண்கரண்டியால் அரித்து எண்ணெய் வடிய பேப்பரில் எடுத்து வைக்கவும்.
மீதி கடலையையும் சுட்டு எடுத்த பின் வற்றல் தூள், அல்லது மிளகுத்தூள், உப்புத்தூள் கலந்து ஒரு தேக்கரண்டி நெய்யில் ஒடித்த முந்திரிப்பருப்பு, கருவேப்பிலை வறுத்து கலந்து உபயோகிக்கவும்.