உதிரி வேர்க்கடலை பக்கோடா

தேதி: April 10, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 75 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

வேர்க்கடலையை வறுத்துக் கொள்ளவும்
கடலைமாவை சலித்துக் கொள்ளவும்.
சலித்த மாவோடு வேர்க்கடலை, கறிவேப்பிலை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும். 10 நிமிடம் ஊறவிடவும்
வாணலியில் எண்ணெயை காயவைக்கவும். பின் சிறுசிறுத் துண்டுகளாக கிள்ளி போடவும்.
நன்கு சிவந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்