கேள்வி

பிரியாணி தம் போடுவது எப்படி? நான் குக்கர்ல தான் செய் வேன் அடி பிடி த்துக்கொள்கிறது பக்குவம் சொல்லுங்கள்

அரிசி முக்கால் பதம் வெந்ததும் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து மூடி மேலே ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைக்கவும். அவ்வப்போது கிளறவும். குக்கரில் அடி பிடிக்கிறதென்றால் தண்ணீரும், எண்ணெயும் போதவில்லை என்று அர்த்தம்.

அன்புடன்,
செல்வி.

எனக்கும் அப்படிதான் அடிப்பிடித்துவிடுகிறது.அதும் மின்சாரத்தில் இயங்கும் அடுப்பு என்பதால் அடியில் மட்டும் நன்கு வெந்துவிடும்.மேலே அரைவேக்காட்டுடன் இருக்கிறது.மேலே வேகனும் என்று இன்னும் சிறிது தம் விட்டால் அடியில் குழைந்து விடுகிறது.இதர்க்கு ஒரு வழி சொல்லுங்கலேன்.பிரியானிக்கு தம் விடும் போதெல்லாம் ஒரே டென்ஷன் தான்..!

நான் gas ovenல் தான் பலமுறை செய்திறுக்கிறேன்.அடி பிடித்ததே இல்லை.pre heated oven ல்20 நிமிடங்கள் வைத்தால் போதும்.மூடி வைக்கவும்

தம் விட வெந்த பின்பு
பிரீஹிட் செய்து அவனில் வைக்கனுமா.???

பிரியாணியை 'தம்' வைப்பதற்கு சுலபமான வழிமுறைகளை கீழே திருமதி. பர்வீனுக்கான பதிலில் எழுதியுள்ளேன். மேலும் சந்தேகங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

பிரியாணியை சாதாரன தோசைக்கல் மூலமாகவும் காஸ் அவன் மூலமாகவும் சுலபமாக 'தம்' செய்யலாம். சாதாரணமாக ஒரு கப் அரிசிக்கு முக்கால் கப் நீர் சேர்த்து பிரியாணியை முக்கால் பதத்துக்கு சமைத்துக்கொள்ளவும். பிரியாணி இந்த முக்கால் பதம் வரும்போது தண்ணீர் வற்றியிருக்க வேண்டும். அடுப்பில் ஒரு தோசைக்கலலை் வைத்து சூடாக்கவும். அது நன்கு சூடானதும் அடுப்பை 'சிம்'மில் வைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து ஒரு தட்டால் மூடி அதன் மேல் ஒரு சிறிய பாத்திரத்தில் சாதாரண நீர் ஊற்றி வைக்கவும். அது கிட்டத்தட்ட 10 நிமிடங்களில் வெது வெதுப்பாக மாறும். அப்போது பிரியாணியை ஒரு முறை கிளறி விடவும். மறுபடியும் அதே மாதிரி மூடி வைத்து மேலே தண்ணீர் வைத்து மேலும் 10 நிமிடங்கள் சமைக்கவும். இப்போது பிரியாணி சரியான பதத்தில் இருக்கும். காஸ் அவனில் 160 டிகிரியில் அதை சூடாக்கி பிரியாணி பாத்திரத்தை வைத்து மூடி வைத்தால் 20 நிமிடங்களில் பிரியாணி பதமாகி விடும். நடுவே ஒரு முறை கிளறி விடவும். மேலும் சந்தேகங்கள் இருந்தால் தெரிவியுங்கள்.

டியர் மனோ மேடம் கேஸ் அடுப்பாக இருந்தால் தீ பாத்திரம் முலுவதும் சீராக பரவும்.இங்கு மின்சாரத்தினால் இயங்கும் அடுப்பு அதனால ஒரு படி செய்யும் போது மேலே எப்போதும் அரிசியாக நின்றுவிடுகிறது.தோசைக்கல் வைத்து தம் செய்யும் போது அடியில் வெந்து மேலே அப்படியே இருக்கிறது.பின்பு மேலே இருக்கும் சாதத்தை எடுத்து தனியாக மைக்ரோவேவில் வேக வைத்து எடுப்போன்.நீங்கள் சொல்வது போல மூடி வைத்து அதன் மேலே தண்ணீரும் வைத்து தம் விட்டு இருக்கிறேன்.ஆன்னாலும் அடுப்பின் சூடு மேலே வரை சீராக செல்வது இல்லை என்று நினைக்கிறேன்.நீங்கள் சொல்லும் வேறு முறை பிரீஹிட் செய்து அவனில் தம் விட்டு பார்க்கிறேன். செய்து பார்த்து மீன்டும் எப்படி வந்தது என்று எலுதுகிறேன்.மிகவும் நன்றி மேடம்.

அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் பிரியாணிக்கு தம் போட ரொம்ப கஷ்டபடுகிறீர்கள் என்று நினைக்கிறேன் நான் செய்யும் ஒரு வழியை சொல்லுகிறேன் முயற்சி பண்ணி பாருங்கள் ரைஸ்குக்கரில் ஒன்றுக்கு ஒன்று தண்ணீர் ஊற்றி சாதத்தை உதிரியாக வேகவைத்துக்கொள்ளுங்கள் மின்சார அடுப்பில் தனியாக குருமா போட்டு அதில் சாதத்தை போட்டு கிளறி ஒரு பத்து நிமிடம் கல்லைவைத்து தம் போடுங்கள் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் சரியாக வரும்
europe-ல நிறைய கடைகளில் தம் போட தட்டு விற்கிறது அதை வாங்கி கல்லுக்கு பதில் அதில் செய்யுங்கள் உங்களுக்கு பிரச்சனையே இல்லை

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

DEAR PARVEEN என்னுடைய செய்முறை
பட்டை,கிராம்பு,பி.இலை,அன்னசிபூ இவற்றை நெய்யில் வதக்கி தண்ணிர் ஊற்றி கொதித்ததும் அரிசி போட்டு முக்கால் அளவு வேக வைத்து கறியை தனியாக பிரியாணிக்கு செய்வதுபோல் செய்து பின்னர் இரண்டைம் layers வைத்து ovenல் தம் போட வைக்கவும்.தேவையானால் recipe தருகிறேன்.Typing in tamil is time consuming.This is the reason to limit my reply in few lines.

டியர் ஜுலைஹா வாலைக்கும் ஸலாம்.பிஸியாக இருந்தேன் அதான் உடன் பதில் எலுத முடியவில்லை.நிறைய்ய செய்வதாக இருந்தால் மிக்ஸிங் தான் செய்வேன் ஜுலைஹா.ஆனால் எனக்கு ஒன்றாக செய்தும் பழகிக் கொள்ளனும் என்று ஆவல் அதான் முயற்ச்சிக்கிறேன்.மிகவும் நன்றி

மேலும் சில பதிவுகள்