டியர் மனோஹரி மேடம்

டியர் மனோஹரி மேடம் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா மேடம் ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி என்று சொல்லுங்களேன் .இங்கு ஜாப்பனீஸ் ரெஸ்டாரன்டில் அது நன்றாக இருக்கும் செய்முறை தெரிந்தால் சொல்லவும்.எனது குழந்தைக்கு கார்ன் சூப் கொடுக்கலாமா எனது குழந்தை மலச்சிக்கலால் கஷ்டபடுகிறான் அவனுக்கு இப்பொழுது வயது 2.7 ஆகிறது. டாக்டரிடம் காமித்ததற்க்கு (இந்தியாவிலும்,ஜப்பானிலும்)பயப்பட தேவை இல்லை நிறைய ஜூஸ்,சூப் கொடுங்கள் என்று சொல்கிறார்கள் எந்த வகையான சூப்,ஜூஸுமே குடிக்க மாட்டிகிறான் ஆனால் ரெஸ்டாரன்ட் போனால் இந்த சூப் கொஞ்சம் சாப்பிடுகிறான்.அதனால் செய்முறை தெரிந்தால் வீட்டிலேயே பண்ணிக்கொடுக்கலாமே மேலும் உங்களது கருத்தையும் எனக்கு சொல்லுங்கள் எது கொடுக்கலாம் எது கொடுக்கக் கூடாது என்றும் சொல்லுங்கள் நான் அதே போல் செய்து பார்க்கிறேன். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி.

ஹலோ மிஸஸ் செய்யத், நான் நலமாக இருக்கின்றேன்.நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.தங்களின் செல்லபிள்ளை மலச்சிக்களால் அவதிப்படுகின்றார் என்று எழுதியிருந்தீர்கள்,கவலைவேண்டாம்.அதற்கு வைத்தியமாக, ஒரு கைப்பிடியளவு உலர்ந்த திராட்ச்சையை நன்கு டார்க் கலரிலுள்ள திராட்சையாக இருக்க வேண்டும்.ஒரு கோப்பை நீரில் போட்டு அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவைக்கவும்.தண்ணீர் பாதியளவு சுண்டியவுடன் இறக்கி வைத்து நன்கு ஆறவைத்து விடவும். இரவில் குழந்தைய்யை தூங்கவைக்கும் முன்போ அல்லது பகலிலும் கூட் பரவாயில்லை. இந்த ஜூஸிலிருந்து ஒரு பாலாடையின் அளவிற்க்கு குடிக்க வைத்து விடவும். நல்ல பலன் கிடைக்கும்.இரண்டு அல்லது மூன்று நாள் தொடர்ந்து இந்த ஜூஸை தரவும். அதற்க்கு மேல் தேவையில்லை.ஒரு வேளை ஜூஸ் குடிக்க விருப்பமில்லையென்றால் திரட்ச்சைய்யை மட்டும் சாப்பிட வைத்து விடுங்கள். தினமும் அவர் கையில் கொள்ளுமளவிற்க்கு கொடுத்து விடுங்கள்.

பொதுவாக குழந்தைகளுக்கு மலசிக்கல் வராமல் இருக்க மருத்துவர் கூறியுள்ளதுப் போல் ஜூஸ், சூப் கொடுக்கலாம்.
அதனுடன் நார்சத்து அதிகமுள்ள திடப் பொருட்களையும் சேர்த்து கொடுக்கலாம்.அதாவது whole grains,oats கொண்டு தயாரித்த bread,cereal,cookies,biscuit,muffin மற்றும் வீட்டில் தயாரித்த கஞ்சி,கூழ் போன்ற உணவையும் கொடுக்கலாம்.
காய்கறிகளின் தோலை நீக்காமல் வேகவைத்து அரைத்து சூப் செய்துக் கொடுக்கலாம். பழங்களில் எல்லாப் சீசனில் வரும் பழங்களையும் முக்கியமாக பெர்ரி வகைகளை அதிகம் கொடுத்தால் மலசிக்கல் வராது.
பீன்ஸ் வகைகளை ஒரு நாளைக்கு ஒன்றாக ஊறவைத்து வேகவைத்து தரவும்.

பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு கூட மலசிக்கல் வரும். அவ்வாறன குழந்தைகளுக்கு skimmed milk அல்லது fat free மில்க் கொடுக்கலாம்.அது கூட ஒரு நாளைக்கு இரண்டு கோப்பை போதுமானதாக இருக்கும்.
வாழைப்பழத்தால் நல்ல பவுல் மூவ்மன்ட்ஸ் கிடைத்தாலும் மலசிக்கல் வராமல் தடுக்கத்தான் அந்த பழம் உதவும். மலசிக்கல் வந்த பிறகு அந்த பழம் எவ்வளவு சாப்பிட்டாலும் பலன் இருக்காது. ஆகவே இந்த பழத்தை குழந்தைகளுக்கு ஒரு துண்டாவது உணவில் தினமும் சேர்த்துக் கொள்வது நல்லது.

முக்கியமாக இந்த திராட்சை ஜூஸ் கொடுக்கும் பொழுது, சீஸ், பீனட் பட்டர்,வாழைப்பழம்,போன்ற பொருட்களை தவிர்த்து விடவும்.வயிறு சரியான நிலைக்கு வந்த பிறகு இவைகளை கொடுக்கலாம்.முயர்ச்சி செய்துப் பார்க்கவும்.கார்ன் சூப்பை எனது பக்கத்தில் எழுதிவிட்டு தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்,நன்றி.

உங்களுக்கு நடுவில் நான் வருவதர்க்கு மன்னிக்கவும்
என் பிள்ளைக்கும் இதே பிரச்சனை தான்
இது டாக்டர் அறிவுரை
வாழைப்பழம்,அரிசி சோறு ,ஆப்பில் ஆகியவற்றை தவிர்க்கவும் இது மலத்தை இறுக்கவைக்கும்
புருன்ஸ் பழத்தை ஜூஸ் ஆகவோ மசித்தோ கொடுக்கவும் உடனடி பலன் கிடைக்கும்
கேரட் கான் இதனை மசித்து கொடுக்கவும்
ஓட்ஸ்சில் கஞ்சி,கூழ் போன்ற உணவையும் கொடுக்கவும்
கேரட் மசித்து கொடுக்கவும்
காலையில் எழுந்தவுடன் சூடான தன்னீரில் சீனீப்போட்டு தினமும் கொடுக்கவும்

டியர் மனோஹரி மேடம் அவர்களுக்கு,
எனது கேள்விக்கு உடனடியாக பதில் தந்ததற்க்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்னது போல் செய்கிறேன். அவன் தினமும் 2 வேளைதான் பால் குடிக்கிறான் அதுவும் 120 மில்லிதான் அதுக்கு மேல் குடிக்க மாட்டிக்கிறான் நானும் விட்டுவிடுவேன்.மற்றபடி சாப்பாடு என்று பார்த்தால் நாங்கள் சாப்பிடும் சாப்பாட்டை தான் நான் அவனுக்கு ஊட்டிவிடுவேன் அவனுக்கு என்று தனியாக சமைத்தால் சாப்பிடமாட்டிகிறான் அதனால் நான் சாப்பிடும் சாப்பாட்டை கொடுத்து பார்த்தேன் கொஞ்சமாவது சாப்பிடுகிறான்.அதனால் நான் இப்பொழுது அவனுக்கு தனியாக சமைப்பது இல்லை.பிஸ்கட் என்று பார்த்தால் வேபர்ஸ்தான் அவனுக்கு பிடிக்கிறது மற்ற எந்தவகை பிஸ்கட்டும் சாப்பிட மாட்டிகிறான்.நீங்கள் சொன்ன மாதிரி திராட்சை ஜூஸ் கொடுத்துப்பார்க்கிறேன். உங்கள் அன்புக்கும் ஆலேசனைக்கும் மிக்க நன்றி.

சகோதரி ஹவ்வா அவர்களுக்கு
நலமாக இருக்கிறீர்களா.உங்களுடன் சேட் பண்ணி நிறைய நாள் ஆகிறது முடிந்தால் இந்த நைட் சேட் பண்ணுகிறேன் இன்ஷா அல்லாஹ். நீங்கள் சொன்னது போலும் எனது குழந்தைக்கு செய்து பார்க்கிறேன்.கருத்துக் கூறியதற்க்கு மிக்க நன்றி.

ஹலோ மிஸஸ் செய்யத், தாமதமாக தொடர்பு கொள்வதற்க்கு மன்னிக்கவும். வார இறுதி நாட்களில் நானும் பிஸியாக இருப்பதால் தளத்தில் அதிக நேரம் செலவிட முடிவதில்லை. அதுதான் தாமதத்திற்க்கு காரணம். தாங்கள் தங்களின் செல்லத்திற்க்காக கேட்டிருந்த கார்ன் சூப்பை இன்று எனது பக்கத்தில் இணைத்துள்ளேன் பார்வையிடும் படி கேட்டுக் கொள்கின்றேன். அதே முறையில் கேரட், புரோக்கலி, காலிஃபிளவர் போன்ற மற்ற காய்கறிகளையும் ஒவ்வொன்றாக சேர்த்தும் செய்து குழந்தைக்கு கொடுத்துப் பாருங்கள். அவரின் சுவைக்கு ஏற்றமாதிரி பொருட்களை கூட்டியோ குறைத்தோ செய்துக் கொடுக்கவும்.நன்றி.

அன்புள்ள மனோஹரி மேடம் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா. உஙகளுடைய திராட்ச்சை ஜூஸ் முறையை எனது குழந்தைக்கு செய்ய தொடங்கி விட்டேன் இன்று நைட்டோடு 3 நாள் முடிகிறது இப்பொழுது பரவாயில்லை அவனுக்கு அழாமல் அவனாகவே கஷ்டம் இல்லாமல் மோஷன் வந்துவிடுகிறது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

ஊரில் இருக்கும் அம்மாவிடம் குழந்தை கஷ்டபடுவதை பற்றிக்கூறி ஆலோசனை கேட்டால் பதறிப்போய் விடுவார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன் உங்களிடம் கேட்டு பார்க்கலாம் என்று தான் உங்களிடம் கேட்டேன். அதற்க்கு நீங்கள் ஒரு நல்ல பதிலையும் எனது குழந்தைக்காக தந்து இருக்கிறீர்கள்.யாரும் இல்லாமல் இங்கு தனியாக இருக்கும் எனக்கு உங்களின் ஆதரவும்,ஆலோசனையும் ஒரு சகோதரியாக எனக்கு உதவியது என்றும் என்னால் மறக்க முடியாது.உங்களுடைய கார்ன் சூப் குறிப்புக்கும் மிக்க நன்றி. உங்களுடைய அன்புக்கும்,ஆதரவுக்கும் மிகவும் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன் நன்றி என்று வார்த்தையால் சொல்லிவிட முடியாது ஏன் என்றால் எனது குழந்தை மோஷன் போகும் போது அப்படி அழுவுவான் நான் அவனை பார்த்து அழுவேன் எனது கணவர் எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவர் தனியாக அழுது இருக்கிறார் ஏன் நம்ம குழந்தைக்கு இப்படி என்று எத்தனை டாக்டரிடம் காமித்துவிட்டேன் மருந்து, மாத்திரைகள் கூட வைத்துவிட்டேன் அந்த சமயம் சரியாக இருக்கும் திரும்பவும் இந்த பிரச்சனை வந்துவிடும் உங்களது இந்த வயித்திய முறை எனக்கு பலன் தந்து இருக்கிறது மிகவும் நன்றி.

dear manohari madam......
again its me mam..
this time i want to ask u abt my kid..

doctor said not to give milk more..
i give him abt 500 ml daily ..water mixed in milk..

since doctor said like that i started to give him apple...but he didnt have after its cooked..
moreover he became dull since i reduced his milk intake...

so i tried to give apple juice..which made him to have cold ..i am very much worried..

i dont know what to do..medicines are not doing him good..

he is 10 months old..

my queries are:-
1. the quatity of milk i can give him..
either whole milk or not.

2. can vegetables be cooked in microwave to give him.

3. mashing is needed for him or not..
shall i just do in hand or in mixie

4.pls give me some kashayam tips to afford him daily
so that he wont get infected by cold again.

5.is it ok to give it daily..as it may hurt his stomach..

6.isit good to give soy milk with chocolate flavour.

mam..so many queries.. pls be free to reply me..
i and my husband are shedding tears on seeing him coughing..what to do we cant say to our parents as it may make them sick..

normally in india..more than medicines herbs treated him well
like vethalai with vicks..

so only i ask u more tips..

pls reply me mam

அன்பு தங்கை balammu எப்படி இருக்கீங்க? தங்கள் குழந்தைக்கு பத்துமாதம் ஆகிவிட்டதால் நீங்கள் நிறைய்ய சாலிட் ஃபூட் கொடுக்கலாம்.ஆகவே தண்ணீர் சேர்க்காத பாலை குழந்தை தூங்கி எழும் போது மட்டும் (குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு முறை) கொடுத்து பசியாத்தி விட்டு, பிறகு மற்ற நேரத்தில் திட உணவுகளை கொடுக்கலாம்.

திட உணவுகளான பருப்பு சாதம், சைவ, அசைய சூப் சாதம், தயிர் சாதம், இட்லி சப்பாத்தி போன்று வீட்டில் சமைத்த உணவுகளை நன்கு கைகளால் குழைத்து கொடுக்கலாம். மிக்ஸியில் அடிக்க வேண்டாம். அதைப் போல் காய்கறிகளை நன்கு வேகவைத்து சாதத்தோடு பிசைந்து கொடுக்கலாம். பழ ஜூஸுக்கு பதில் பழங்களை பொடியாக அரிந்து கொடுக்கலாம். அவித்த முட்டை, சீஸ் போன்றவற்றையும் பொடியாக நறுக்கி ஊட்டலாம். கோதுமை மாவையும், கேழ்வரகு மாவையும் சம அளவில் கரைத்து கெட்டியான கஞ்சியாக செய்து தினமும் ஒரு வேளை கொடுத்தால் குழந்தைக்கு நல்ல நோய் எதிர்ப்பு சத்து கிடைக்கும். அல்லது ரெடி மேட் உணவுகளான செரிலாக் போன்ற சீரியலை ஒரு வேளையாவது கொடுப்பது நல்லது.இடையிடையே தண்ணீரையும் அடிக்கடி குடிக்க வைக்கவும்.

மற்றபடி வைட்டமின் டிராப்ஸ்ஸை தினமும் கொடுக்கலாம். இதனால் குழந்தைக்கு நல்ல பசியைத் தூண்டும். இதை மருத்துவரிடம் நீங்களே கேட்டு அந்த டிராப்ஸ்ஸின் பெயரை தெரிந்துக் கொள்ளவும்,சாதாரணமாக அவர்களே இதைப் பரிந்துரைக்க மாட்டார்கள்.மற்றபடி கஷாயம் எதுவும் குழந்தைகளுக்கு தேவையில்லை என்றே கருதுகின்றேன்.நான் குழந்தைகளுக்கு எப்போழுதும் பரிந்துரைப்பது வசம்பு என்ற வேரைத்தான். இதை சுட்டு அதன் கரியை, ஒரு சில சொட்டு பாலில் அல்லது நீரில் குழைத்து தினமும் கூட குழந்தைக்கு கொடுக்கலாம். இது பெரியவர்களுக்கு கூட, ஜீரண சக்திக்கு ஏற்ற நல்ல நாட்டு மருந்து.

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் பசும்பாலிலேயே கிடைப்பதால் சோயா மில்க் தேவையில்லை என்று தான் கருதுகின்றேன். மற்றபடி குழந்தைக்கு இரும்பலோ, காய்ச்சலோ எது வந்தாலும் பயப்படத் தேவையில்லை. அதற்குரிய மருந்துக்களை கொடுத்தாலே போதும் சரியாகிவிடும். சற்று காலதாமதமானாலும் சரியாகிவிடும்.

ஆகவே ஆகாரத்தை மட்டும் குழந்தைக்கு என்ன உடல் உபாதை ஏற்ப்பட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாகவாது கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும். ஆகவே பயப்படாமல் வீட்டில் சமைக்கும் எல்லா ஆகாரத்தையும் கூட, காரத்தை மட்டும் குறைத்து கொடுக்க பழக்க படுத்திவிடுங்கள். முக்கியமாக இதில் நீங்களும் உங்கள் கணவரும் பயப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. ஆகவே சந்தோசமுடன் குழந்தையை வளர்க்கும் படி கேட்டுக் கொள்கின்றேன். மேலும் உங்களுக்கு ஏற்ப்படும் சந்தேகங்களை தயங்காமல் அனுப்பிக் கொண்டிருங்கள் சரியா நன்றி டியர்.

thank u akka..

i have a doubt..if i give vegetables semi-solidly
it comes the same shape in motion..

my amma said then it means it is undigested..

then wat abt giving whole milk..
u said cow's milk but where to buy in US???

usually i give him jeeragam,milaku kashayam.
is it ok???

அன்பு தங்கை balammu காய்கறிகளில் நார்ச் சத்து அதிகம் என்பதால் அவைகளை நன்கு வேகவைத்து கட்டிகள் இல்லாமல் நன்கு மசித்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் இல்லையென்றால் ஜீரணமாகாமல் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி வெளியில் வந்துவிடும். ஆகவே எதைக் கொடுத்தாலும் நன்கு கைகளில் மசித்து ஊட்டவும். ஹோல் மில்க்கை தான் பசும்பால் என்று கூறினேன். மற்றபடி கஷாயங்களின் மேல் எனக்கு நாட்டமில்லை என்பதால், எனது அனுபவத்தில் குழந்தைகளுக்கு எந்த கஷாயங்களையும் நான் பயன்படுத்தியதில்லை.

மேலும் சில பதிவுகள்