இட்லி

தேதி: April 14, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

புழுங்கல் அரிசி - 4 டம்ளர்,
பச்சரிசி - 1 கைப்பிடி,
உளுத்தம் பருப்பு - 3/4 டம்ளர்,
சின்ன ஜவ்வரிசி - 1 ஸ்பூன்,
வெந்தயம் - 3 டீஸ்பூன்,
வெள்ளை சோயா - 1/2 கைப்பிடி,
உப்பு - தேவையான அளவு.


 

புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒன்றாகவும், உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம்,சோயா ஒன்றாகவும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஊற வைத்த உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, சோயா, வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
அரைத்து எடுத்த பின் ஊற வைத்த புழுங்கல் அரிசி, பச்சரிசியை போட்டு நைசாக அரைக்கவும்.
உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.
புளித்த பின் இட்லியாக ஊற்றலாம்.


சோயா சேர்ப்பதால் புரதச்சத்து கிடைக்கிறது. தோசைக்கென்று தனியாக அரைக்க வேண்டியதில்லை, இதையே தோசைக்கும் உபயோகிக்கலாம். உளுந்து, மாவு காணுவதாக இருந்தால், இன்னும் கூட உளுந்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள செல்வி மேடம்,

சோயாவை எங்கு எதனுடன் அரைக்க வேண்டும்...

நன்றி...

நன்றி...

மன்னிக்கவும், தவறு தான். சோயாவை உளுந்துடன் சேர்த்து ஊற வைத்து அரைக்க வேண்டும். தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி.

அன்புடன்,
செல்வி.

நிங்கள் அறைக்கும் எதிலும் ஜவ்வரிசி சேக்கரீங்க.அதை சேர்ப்பதால் என்ன பயன் கிடைக்கும்.எனக்கு ஆப்பம் ரப்பர் போன்று வருகிரது.ஜவ்வரிசி சேர்த்தால் நன்றாக வருமோ என்று அறியத்தான் கேக்கிரேன்.வடையிலும் சேர்த்துயிருக்குரீங்க.ஏன் என்று சொல்ல முடியுமா

சோயாக்கு ஆங்கிலபெயர் என்ன.சோயா பச்சை நிறமாகத்தானே இருக்கும்.

ஜவ்வரிசி சேர்க்கும் போது மேல் பாகம் மொறு மொறுப்பாகவும், அதே சமயம் மிருதுவாகவும் இருக்கும். இட்லியில் சேர்க்கும் போது இட்லி பூப்போல் இருக்கும். ஆப்பம் பச்சரிசி அதிகம் சேர்த்தால் ரப்பர் போன்று வரும். என்னுடைய ஆப்பம் குறிப்பை பார்த்து செய்து, எப்படி வருகின்றது என்று சொல்லுங்கள்.
சோயாவுக்கு ஆங்கிலத்திலும் soya என்றே அழைக்கிறார்கள். சோயாவில் பல வகைகள் உள்ளன. இங்கு நான் குறிப்பிடும் சோயா வெள்ளை சோயா ஆகும். வெள்ளை சோயாவின் படத்தை குறிப்பின் கீழே இணைத்துள்ளேன், பார்க்கவும். எனக்கு தெரிந்த வரையில் பச்சை நிறத்தில் சோயாவே இல்லை. நன்றி.

அன்புடன்,
செல்வி.

டியர் செல்வி மேடம்,

இவ்வகையில் இட்லி செய்து பார்தேன்...இட்லி ரொம்ப நன்றாக இருந்தது...

நன்றி...

நன்றி...

டியர் செல்வி மேடம்
மிகவும் நன்றி படத்துடன் விளக்கியது.இனி நீங்கள் சொல்வது போல ஆப்பம் செய்துபார்க்கிரேன்.அப்பறம் மீன்டும் சொல்கிறேன்.

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. இந்த முறையில் தான் நான் எப்போதும் இட்லி செய்வேன். அளவும், அரைக்கும் பதமும் சரியாக இருந்தால் கிட்டத்தட்ட குஷ்பூ இட்லி போல் பூ மாதிரி வரும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம்
அவர்களுக்கு உங்கள் ரெசிப்பி செய்தேன் ஆனால் சோயா இல்லாமல் தான் செய்தேன்.தோசை மிகவும் முறுகலுடனும் இட்லி மிருதுவாகவும் இருந்தது.மிகவும் நன்றி

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. சோயா சேர்த்து ஒரு முறை செய்து பார்த்து வித்தியாசத்தைக் கூறுங்கள். நன்றி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம்,
எனக்கு இட்லி சூடாக இருக்கும் போது நன்றாக உள்ளது. ஆறிய பின் மிருதுவாக இல்லை. மாவு அரைக்கும் பதத்தை கூறுங்கள். அதோடு இரண்டு நாள் கழித்து செய்யும் இட்லி முதல் நாள் செய்தது போல் மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்? சோயா லேசான மஞ்சள் நிறத்தில் உள்ளது. அதை உபயோகிக்கலாமா?

அன்புடன்
திவ்யா

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

இது போல் செய்து பாருங்கள்.

இட்லி புழுங்கல் அரிசி - 4 பங்கு
முழு உளுத்தம் பருப்பு - 1 பங்கு
உப்பு - தேவையான அளவு.
அவல் - 50 கிராம்

புழுங்கல் அரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்தால் போதும்.
அவலைத் தனியாக ஊற வைக்கவும்.
முதலில் உளுந்தை அரைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை சேர்த்து நன்கு குடையக் குடைய அரைக்க வேண்டும்.
அரைத்த மாவு வெண்ணை போல், பந்து போல் உருட்ட வர வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போடவும்.
பிறகு அரிசியைக் களைந்து, கல் இருந்தால் அரித்து கிரைண்டரில் போட்டு, ஊற வைத்த அவலையும் போட்டு அரைக்கவும்.
அரிசியை மிகவும் நைசாக அரைக்ககூடாது.
சன்ன ரவை பதத்தில் மாவை எடுத்து அரைத்த உளுந்துமாவுடன் உப்பு போட்டு கலந்து வைக்கவும்.
மாவு பொங்கி வந்ததும் நன்கு கரண்டியால் ஒத்தாற்போல் கலந்து இட்லித்தட்டில் ஊற்றவும்.
மாவு பொங்கி வருவதற்கு முன் பிரிட்ஜில் வைக்கக்கூடாது.

இது போல் செய்து பார்த்து எழுதுங்கள் திவ்யா.
அன்புடன்
ஜெயந்தி

மிக்க நன்றி. எனக்கு முன்பே பதில் கொடுத்து விட்டீர்கள். ரொம்ப நாளா அறுசுவைக்கு வராததால் எல்லாம் புதிதாகவுள்ளது. உங்கள் பெயரையும் இப்போது தான் பார்க்கிறேன். தாங்கள் எந்த ஊரில் வேலை செய்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா? விருப்பமிருந்தால் சொல்லுங்கள், கட்டாயமில்லை. நமக்குள் ஒரு சின்ன ஒற்றுமையுள்ளது, அதை பிறகு சொல்கிறேனே!
நன்றி,
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் செல்வி
இப்ப தான் உங்கள் இந்தப்பதிவைப்பார்த்தேன். நான் உங்களுக்கு மிகவும் அருகில் தான் இருக்கிறேன். சென்னை வண்டலூர் அருகில் வீடு. அலுவலகம் எக்மோரில் எதிராஜ் கல்லூரி அருகில். பாண்டிச்சேரிக்கு நிறைய முறை வந்திருக்கிறேன், அன்னையை தரிசிக்க. நமக்குள் உள்ள ஒற்றுமையைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நன்றி
ஜெயந்தி

ஒற்றுமை !
ஹலோ ஜெயந்தி மேடம்,
நலமாயிருக்கீங்களா? ரொம்ப நாள் 6சுவை பக்கம் வராத மாதிரி இருக்கு. உங்க பதிவையே காணோம். நானும் நீங்கள் பணியாற்றும் அதே நிறுவனத்தில் தான் உள்ளேன். முதலில் அது தெரிந்ததும் மிகவும் மகிழ்வுற்றேன். பாண்டிச்சேரி வந்தால் சந்திக்க முயற்சிக்கவும். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செல்வி அக்கா,

நீங்கள் விருந்துக்கு எப்போது வேண்டுமானாலும் எங்கள் அலுவலகத்திற்கு வரலாம். சென்னை அலுவலகம் தி.நகரில் உள்ளது. காடாறு மாதம் நாடாறு மாதம் என்பதுபோல், நான் நாகையில் பாதி நாட்களும், சென்னையில் மீதி நாட்களுமாய் ஓ(ட்)டிக் கொண்டிருக்கின்றேன். சென்னைக்கு வந்தால் ஹோட்டல் விருந்துதான். நாகைக்கு வந்தால் வீட்டில் ஏற்பாடு பண்ணலாம். அம்மா நன்றாகவே சமைப்பார்கள்.

மாதத்திற்கு குறைந்தது நான்கு முறை பாண்டிச்சேரியை கடக்கின்றேன். புதிய வீடு பிரவேசத்திற்கு அழைப்பு விடுங்கள். வந்துவிடுகின்றேன்.

அலுவலகம் எங்கே இருந்தால் என்ன. எங்கோ மதுரையில் ஒரு கிராமத்தில் இருந்து சின்னப்பிள்ளை அவர்கள் சாதிக்கவில்லையா? நீங்களும் சாதனையாளராக எங்கள் அனைவரின் (அறுசுவை நண்பிகள்) சார்பில் வாழ்த்துகிறேன்.

நான் இந்த தளத்தில் சேர்ந்த பிறகு பதிவேட்டில் எழுதியதை மீண்டும் இங்கு கொடுத்திருக்கிறேன். இவ்வளவு அருகில் இருக்கிறீர்கள். எங்கள் வீட்டிற்கு வாருங்கள். ஆனால் முழு சைவம் தான். முகவரி கொடுத்தால் நானும் வருகிறேன்.
நன்றி
அன்புடன்
ஜெயந்தி

"பாபு, ஒரு மனிதனுடைய மனதிற்குள் நுழைய வாயில் வயிறு என்று சொல்வார்கள். இப்படி எத்தனையோ பேர் மற்ற மனிதர்களின் மனதிற்குள் நுழைய நீங்கள் ஒரு கருவியாக இருக்கிறீர்கள். நும் பணி வெற்றிகரமாகத் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புடன் ஜெயந்தி"

அன்பு தம்பி பாபு அவர்களுக்கு,
முக்கியமான வேலைகள் சில உள்ளன, அவைகள் முடிந்தவுடன் கண்டிப்பாக ஒரு முறை அங்கு குடும்பத்துடன் வந்து தொந்தரவு கொடுக்கலாமென்றுள்ளேன். ஹோட்டல் சாப்பாடெல்லாம் வேண்டாம், போரடித்து விட்டது, மேலும் எங்கள் ருசிக்கும் ஒத்து வருவதே இல்லை. அம்மா கையால் சாப்பிட்டு வெகு நாட்களாயிற்று (வருடங்கள்?), இனி அந்த பாக்கியமும் இல்லை, அதனால் உங்கள் (நம்) அம்மாவின் கையால் சாப்பிடலாமே என்று தான் கேட்டேன். புது வீடு பிரவேசத்திற்கு இன்னும் பல மாதங்களுள்ளன, எனவே இப்பொழுதே, என்று வேண்டுமானாலும் இங்கு வரலாம், ஆவலுடன் காத்திருக்கிறோம். சென்னை முகவரியை முடிந்தால் எனக்கு மெயிலில் தெரியப்படுத்தவும். முடிந்தால் அங்கு வந்து உங்களை சந்திக்கிறோம் (ஜெயந்தி மேடத்துடன்!). உங்கள் அன்புக்கு நன்றி பல.
அன்புடன்,
செல்வி அக்கா.

அன்புடன்,
செல்வி.

சகோதரிகள் இருவருக்கும் வணக்கம். இருவரும் (நேயர்கள் யார் வேண்டுமானாலும்) சென்னை அலுவலகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். முகவரி ரகசியமானது அல்ல. இன்னும் சில நாட்கள் கழித்து நானே வெளியிடலாம் என்று இருந்தேன்.

தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு உஸ்மான் சாலையில் பனகல் பூங்கா நோக்கி நடந்தீர்கள் என்றால் வலப்பக்கத்தில் இரண்டாவது தெரு. மோதிலால் தெரு என்று பெயர். தெரு முனையில் இருக்கும் நோ எண்ட்ரி போர்டை கடந்து எல்லா வாகனங்களும் உள்ளே நுழைந்து கொண்டிருக்கும். தெருவின் தொடக்கத்தில் நோ பார்க்கிங் போர்டை சுற்றி வாகனங்கள் வரிசையாக இரண்டு பக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டு, தெருவில் நடப்பதற்கு கொஞ்சம் இடம் கொடுக்கப்பட்டிருக்கும். அதனுள் நுழைந்து வரும் தட்டு வண்டியிலும், வண்டிக்காரன் துப்பும் எச்சிலிலும் படாமல் தப்பித்து உள்ளே நுழைந்தீர்கள் என்றால், தெரு கடைசியில்(கிட்டத்திட்ட), வலப்பக்கம் ஒரு கட்டிட முகப்பில் ராஜேஸ்வரி பப்ளிகேஷன் என்ற பெயர் பலகை இருக்கும். அந்த கட்டிடம்தான். உள்ளே நுழைந்து இரண்டாவது படிக்கட்டில் ஏறி, இரண்டாவது மாடிக்கு வரவேண்டும். மூட்டு வலி பிரச்சனை இருந்தால் வரும்போதே தைலம் எடுத்து வந்துவிடுங்கள்.

சில குழப்பங்களால் இன்னமும் பெயர்ப்பலகை வைக்கவில்லை. தற்போது நாகையில் இருக்கின்றேன். அடுத்த வாரத்தில் சென்னை வருவேன். அடுத்த வார இறுதியில் பெயர்ப்பலகை இருக்கும்.

முகவரி
21/3, மோதிலால் தெரு
ராஜேஸ்வரி பப்ளிகேஷன் பில்டிங்
தி. நகர். சென்னை - 17
தொ.பே: 42128898

ஹலோ செல்வி மேடம் எப்படி இருக்கிறீர்கள் உங்கள் பதிவை இப்பொழுதான் பார்த்தேன் நேற்று நீங்க பேச ஆரம்பிக்கும் பொழுது மகள் தூங்கி எழுந்தால் போய் விட்டேன் நானும் பேசி ரொம்ப நாள் ஆச்சு பேசலாம்னுதான் இருந்தேன் ....ஒகே எப்படி நடக்கிறது உங்கள் வீட்டு வேலையெல்லாம் ....உங்கள் உடல்நிலை இப்போ ஒகேவா

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அன்பு சகோதரி ஜுலைகா,
நான் நலம். உங்கள் மகன் நலமா? உடல்நிலை தற்போது பரவாயில்லை. (ஹீமோகுளோபின்தான் குறைவாக 6% உள்ளது)வீட்டு வேலை நடந்து கொண்டே உள்ளது. தினமும் ஆபீஸ் முடிந்து அங்கும் செல்வதால் நேரம் ஆகிவிடுகிறது. மேலும் வீட்டில் யாரும் இல்லாமல், வீட்டிற்கு வருவதற்கும் பிடிக்கவில்லை.
ஒவ்வொருவரும் ஒரு பக்கம் உள்ளனர். கஷ்டம்தான். ஆனால், இதுதான் நிஜம். இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கொஞ்சம் டைம் எடுக்கும்.
நேரம் கிடைக்கும் போது பேசுவோம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விம்மா,

யுவராணி எப்படி இருக்கங்க? ரொம்ப நாளாச்சு வரவேல்ல. ஹைதராபத் போனப்ப அவங்களுக்கு ஒன்னும் ஃப்ராப்லெம்ஸ் இல்லையே.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

யுவராணி கொஞ்சம் நல்லாயிருக்காங்க, அவரிருக்குமிடமே ஹைதராபாத் தான். குண்டு வெடிப்பினால் ஒன்றும் ப்ரசனையில்லை, மிகவும் தொலைவிலுள்ளார்கள். ஆனால் பைக்கில் வீட்டிற்கு வரும்பொழுது ஒரு சிறிய விபத்தில் சிக்கி கால், கையெல்லாம் காயம். சிகிச்சைக்குப் பின் இப்போது ஓய்விலுள்ளார். கூடிய சீக்கிரமே அவர் அறுசுவைக்கு வர கடவுளைப் பிரார்த்திப்போமாக. மறக்காமல் விசாரித்ததற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி, உங்கள் ஸ்வீட் ஹோம் விரைவில் கட்டி முடிக்கப்பட வாழ்த்துக்கள். ஹீமோக்ளோபின் அதிகரிக்க பீட்ரூட், நன்கு பழுத்த பப்பாளிப் பழம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி

அன்பு சகோதரி ஜெயந்தி,
மிக்க நன்றி, உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கும், ஆலோசனைகளுக்கும். பீட்ரூட், பப்பாளி தவிர வேறு ஏதேனுமிருக்கா? (நான் சரியான சோம்பேறி, என்னைக் கவனித்துக் கொள்வதில், ஹி,ஹி அதனால் தான்...)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விம்மா,

பசலைக்கீரை(ஸ்பினாச்) சாப்பிடுங்க. டேட்ஸ் சாப்பிடுங்க. தினம் ஒரு கீரை சாப்பிடாலே போதும். முறுங்கைக்கீரையில் கூட இரும்புச்சத்து நிறைய இருக்கும். நல்லா சாப்பிட்டு உடம்ப பார்த்துகோங்க.

யுவராணிக்கு சீக்கிரமா உடல்நிலை சரியாகிவிடும்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹாய் ஹர்ஷினி,
எப்படியிருக்கே? உன்னோட படிப்பு எப்படி போகுது? குழந்தை எப்படி உள்ளது?
இரும்பு சத்துள்ளதாக சாப்பிட்டு எங்கே துரு பிடித்து விடுமோன்னு பயமா கூட இருக்கு! ஆனா சில காரணங்களுக்காக டாக்டர் என்னை கீரை சாப்பிட வேண்டாம் என கூறியுள்ளார். எப்படியோ எதையோ எதையோ சாப்பிட்டு நானும் ஹீமோகுளோபின் அதிகரிக்கத்தான் நினைக்கிறேன், முடியல(வடிவேலு மாதிரி)
ஆமா ஹர்ஷ், யுவராணிக்காக நாம எல்லோருமே கடவுள்கிட்ட பிரார்த்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் செல்வியம்மா,
(என்னோட அம்மா பேரு கூட செல்விதான் நான் மட்டும் செல்வாம்பிகை அப்படின்னு கூப்பிடுவேன்)

புடலங்காயில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது என் நான் கன்சீவாக இருக்கும் போது என்னை செக் செய்த டாக்டர் கூறி என்னை அதிகமாக சேர்க்குமாறு கூறினார். நீங்களும் முயன்று பாருங்களே!( இது சூடான நாடு(அபுதாபி) எனவே பேரிச்சை அதிகம் சேர்க்கவேண்டாம் எனவும் கூறினார்)

ஹாய் சுபா,
ஒரே ஆச்சச்சரியமாயிருக்கே. என்ன ஒற்றுமை. நீ(ங்க) சொன்ன மாதிரியே புடலங்காயைச் சேர்த்துக் கொள்கிறேன். நன்றிமா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் செல்வி மேடம்

தக்காளி ஜுஸ், தக்காளி சூப், தக்காளி ரசம் போன்றவை சாப்பிடலம்

ஜலீலா

Jaleelakamal

டியர் ஜலீலா பானு,
மிக்க நன்றி. நீங்க சொன்ன படியே தக்காளி சூப், ரசம், ஜூஸ் சாப்பிட முயற்சிக்கின்றேன். தங்களின் அன்புக்கு நன்றி. இனிய ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

Dear Selvi Madam,

எனக்கு சில நாட்களாக நெஞ்சு கரிப்பு அதிகமாக உள்ளது. என்ன செய்யலாம் என்று வழி சொல்லுங்களேன்.

டியர் உஷா,
1) நீங்கள் சாப்பிடும் உணவில் துவரம்பருப்பு, எண்ணெய் பதார்த்தம், கொழுப்பு அதிகமுள்ள பொருட்கள், இவற்றை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
2) பூண்டு, இஞ்சி, பெருங்காயம் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
3) பெருஞ்சீரகம் (சோம்பு) செரிமானத்திற்கு நல்ல மருந்து. 1 ஸ்பூன் சோம்பை லேசாக வறுத்து, ஒன்றரை தம்ளர் தண்ணீர் ஊற்றி, அது 1 தம்ளராக குறையும் வரை அதை கொதிக்க விட்டு, பின் வடிகட்டி, சிறிது கருப்பட்டி (பனை வெல்லம்) சேர்த்து, சூடாக இருக்கும் பொழுதே குடிக்கவும். நெஞ்சு கரிப்பு சட்டென நீங்கும்.
4) சோம்பை லேசாக வறுத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். உணவிற்குப் பின் சிறிது சோம்பை எடுத்து வாயில் அடக்கிக் கொள்ளவும். நெஞ்சு கரிக்காது.
5) அதே போல் சீரகத்தையும் கஷாயம் போட்டுக் குடிக்கலாம். குடிக்கும் நீரில் சிறிது சீரகம் போட்டு, கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் இந்த சீரகத் தண்ணீரைக் குடித்தால் நன்றாக இதமாக இருக்கும்.
வேறு ஏதேனும் மாற்று வழிகளிருப்பின் பின்னர் தெரிவிக்கிறேன். இப்போதைக்கு இவற்றை செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் செல்விம்மா

வணக்கம். உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன்.

என்னுடைய பிரதர் ஒருவருக்கு வாரத்தில் இரண்டு முறையாவது சளி பிடித்து அவஸ்தை படுகிறார். அவருக்கு நல்ல மருந்து சொல்லுங்களேன்

மிகவும் அன்புடன்
உஷா

அன்புள்ள உமா,
நலமா? தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன், நேரம் இல்லை, மன்னிக்கவும். சளித்தொந்தரவுக்கு 1 ஸ்பூன் தேனை லேசாக சூடாக்கி 1/4 ஸ்பூன் பட்டைத்தூளுடன் கலந்து 3 நாட்கள் சாப்பிட்டால் சளி நீங்கும், சைனஸ் தொல்லை இருந்தாலும் சரியாகும்.
முட்டைக்கோஸை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் சளி பிடிக்காது.
குளிர்ச்சியான பதார்த்தங்களை தவிர்க்கவும்.
தயிர், நெய், தக்காளியை குறைத்துக்கொள்ளவும்.
தலைக்கு குளித்த பின், சாம்பிராணியுடன், சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து புகை பிடித்தால் நீர் கோர்த்து சளி பிடிக்காது.
சிலருக்கு மினரல் வாட்டர் கூட ஒத்துக்கொள்ளாது(கவனித்து விலக்கி விடவும்).
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செல்விம்மா

வணக்கம். உங்கள் பதிலுக்கு நன்றி.

அன்புடன்

usha

செல்வி கூறியது:
2 டேபிள் ஸ்பூன் தேன், 200மில்லி டீ டிகாஷன், 3 ஸ்பூன் பட்டைதூள் கலந்து குடிக்க 2 மணி நேரத்திலேயே 10%கொலஸ்ட்ரால் குறையும் என ஒருவர் சொன்னார். தினமும் பருகிவர உடம்பில் கொலஸ்ட்ராலே சேராது என்றும் சொன்னார்

தேன் + இலவங்கப் பட்டையின் மற்ற உபயோகங்கள்:
1. மூட்டு வலி - ஒரு பங்கு தேன், 2 பங்கு வெது வெதுப்பான நீர், ஒரு பங்கு இலவங்கப் பட்டைப்பொடிகலந்து பேஸ்ட் போல் குழைத்து வலி இருக்கும் இடத்தில் மெதுவாகத் தேய்த்து விடவும்.
தினமும் காலை, இரவு ஒரு கப் வெது வெதுப்பான நீரில் 2 ஸ்பூன் தேன், ஒரு 1/2 டீஸ்பூன் இலவங்கப் பட்டைப் பொடி சேர்த்து தினமும் பருகி வந்தால் மூட்டு வலி குணமாகும்.
2. பல்வலி - தேன் + பட்டைப் பொடி கலந்து வலி உள்ள பல்லின் மேல் ஒரு நாளைக்கு 3 தடவை தடவவும்.
3. கொலஸ்ட்ரால் - டீ டிகாக்ஷனில் சேர்த்து குடிக்க கொலஸ்ட்ரால் குறையும்.
4. ஜலதோஷம் - 1 டேபிள் ஸ்பூன் தேனை சுட வைத்து 1/4 டீஸ்பூன் பட்டைப் பொடி சேர்த்து சாப்பிட ஜலதோஷம், சயனஸ் குறையும்.
5. சோர்வு நீங்கி புத்துணர்வு பெற, உடல் எடை குறைய - தேன் _ பட்டைப்பொடி வெது வெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.
6. இதய நோய் - தேன் + பட்டைப்பொடியைய்க் குழைத்து ப்ரெட் மற்றும் சப்பாத்தியில் ஜாம், ஜெல்லிக்கு பதிலாகத் தடவி உட்கொண்டால் கொலஸ்ட்ரால் சேருவதை தடுக்கிறது. ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் கூட உட்கொள்ளலாம்.
7. வாய் நாற்றம் - காலையில் பல் தேய்த்ததும் வெந்நீரில் தேன் + பட்டைப்பொடி சேர்த்து வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் போகுமாம்.

இயற்கை நமக்கு தந்துள்ள ஏராளமான பொருட்களை நாம் உபயோகிக்காமல் இருக்கிறோம். இனி தேடித் தேடி உபயோகிப்போம்.

அன்புடன்
ஜெயந்தி

ர்

இலவங்கப் பட்டைப் பொடி என்றால் பட்டையை சுருட்டி வைத்ததுபோல் ஒரு பட்டை இருக்கு. அதன் பொடியா?

அன்புடன்
ஜெயா

வணக்கம் ஜெயந்தி மேடம்,

டீ டிகாஷன்-னா டீ தூளா.

அன்புடன்
ரீஹா :-)

டீ டிகாக்ஷன் - ப்ளாக் டீ தான்
அன்புடன்
ஜெயந்தி

ஹாய் ஹர்ஷ்,
நலமா? குழந்தைகள் நலமா? என்னோட ரெசிபியை பாராட்டியதற்கு நன்றிம்மா. பல வருட கண்டுபிடிப்பாயிற்றே!
ஹர்ஷ், உன்னுடைய இன்னொரு பதிவில் கொலஸ்ட்ரால் அதிகமாகி இருப்பதாக சொல்லியிருந்தாய். இந்த வயதில் அதிகமாவது தவறு. உடம்பை பார்துக்கொள். 2 டேபிள் ஸ்பூன் தேன், 200மில்லி டீ டிகாஷன், 3 ஸ்பூன் பட்டைதூள் கலந்து குடிக்க 2 மணி நேரத்திலேயே 10%கொலஸ்ட்ரால் குறையும் என ஒருவர் சொன்னார். தினமும் பருகிவர உடம்பில் கொலஸ்ட்ராலே சேராது என்றும் சொன்னார், முயற்சித்துப்பாரேன்.
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விம்மா,

இன்னைக்கு உங்க குறிப்பின் படி இட்லி மாவு ரெடி பண்ணி இட்லி பண்ணென். ரொம்ப நல்லா வந்தது. மாவே ரொம்ப சாஃப்டா இருந்தது காலைல. இட்லியும் சாஃப்டா டேஸ்டியா இருந்தது. ரொம்ப நன்றிம்மா.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

idlee,,vadayam poodaablack aa varruthu y?

ஹாய் 222333,
நீங்க என்ன கேட்கறீங்கன்னு புரியல. முடிஞ்சா தமிழில் கேளுங்க. புரியுதா பார்க்கறேன். அப்ப தான் என்னால் விளக்கமா பதில் சொல்ல முடியும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அவருக்கு இட்லி வடகம் போல கருப்பா வருதாம்...

ஆனா எனக்கு வரவேண்டிய குஷ்பு இட்லி .. அட்லீஸ்ட் என்ன போலவாவது வரலாமில்லியா... ஒரு நண்பர் "என்னாங்க.. இட்லி கேட்டா..பெட்ஷீட் தாரீங்க " இன்னைக்கு மாவு அரைச்சு இருக்கேன்...

1 உளுந்து ( கருப்பு நல்லா கழுவியது) .. 3 அரிசி...
அதனால... தப்பகிவிட்டது என்றால்.. எப்படி பிக்ஸ் செய்வது

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு இலா,
கருப்பு உளுந்து எப்போதும் நல்லா மாவு காணும். அளவில் குறைக்கணும்.
நான் 4 டம்ளர் அரிசி போட்டால் 3/4 டம்ளர் உளுந்து தான் போடுவேன். 2 தேக்கரண்டி வெந்தயம், 2 தேக்கரண்டி சோயா, 1 தேக்கரண்டி ஜவ்வரிசி போடுவேன்.
நீ சொல்லியிருப்பதை பார்த்தால் உளுந்து மாவு அளவு அதிகம். 1/2 டம்ளர் அரிசி ஊற வைத்து அரைத்து சேர்த்தால் சரியாகும். நான் சொன்ன முறையில் முயற்சிக்கவும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ரொம்ப, ரொம்ப, ரொம்ப சந்தோஷம். நீங்களும் சென்னைக்கு வரும் போது எங்க வீட்டுக்கு வாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து நம்ப அறு சுவை அலுவலகத்துக்குப் போகலாம்.
அன்புடன்
ஜெயந்தி

டியர் ஜெயந்தி

எனக்கும் அன்னையை மிகவும் பிடிக்கும். நான் கடந்த 10வருடமாக பாண்டிச்சேரி போய் வருகிறேன். நீங்களும் அன்னை என்று சொன்னவுடன் ஆச்சரியபட்டேன். நன்றி.

எப்படியிருக்கீங்க? உங்கள் எல்லோரையும் பார்த்து (!) ரொம்ப நாளாச்சு.
இட்லி ஊற்றும் போது 2 ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஊற்றினால் ஆறிய பின்னும் மிருதுவாக இருக்கும்.
நல்லெண்ணெய் கலந்து வைத்த மாவை 2 நாள் கழித்து ஊற்றினாலும் இட்லி மிருதுவாக இருக்கும். மாவு அதிகம் புளித்திருக்கக் கூடாது.
கையினால் மாவை தொடாமல் கரண்டியை உபயோகிக்கவும்.
சில சோயா பழுப்பு நிறமாக இருக்கும், அதனால் தவறில்லை, உபயோகிக்கலாம்.
வாழ்த்துக்கள், நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

dear friend, i did idli same as u said.it is soft.but it sticks to the idli vessel.i applied oil.but it still sticks.could u please give me any tips to take it easily.

geetha