புழுங்கல் அரிசி தட்டல்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கல் அரிசி - 4 கப்
உளுந்தம் பருப்பு - 2 கப்
கடலைப்பருப்பு - 3 மேசைக்கரண்டி
துருவிய தேங்காய் - ஒரு கப்
மிளகாய்வற்றல் - 20
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சுடுவதற்கு


 

உளுத்தம் பருப்பை வறுத்து பொடித்து வைக்கவும்.
கடலைப்பருப்பையும், அரிசியையும் தனி தனியாக ஊறவைத்துக் கொள்ளவும்.
ஊறவைத்த அரிசியை சுத்தம் செய்து நன்கு நைசாக ஆட்டி வைத்துக் கொள்ளவும்.
அதனுடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு, கருவேப்பிலை சேர்த்து கட்டியாக ஆட்டவும்.
அரைத்த மாவுடன் உளுந்தமாவு, ஊறவைத்துள்ள கடலைப்பருப்பு, தேங்காய்ப்பூ சேர்த்து நன்றாக பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி துணியில் மெல்லியதாக உள்ளங்கை அளவு தட்டிவைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயய் விட்டு நன்கு காயவிடவும்.
அதில் தட்டலைப் போட்டு நன்கு வெந்தது பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்