ஆம்பூர் பிரியாணி - 2

தேதி: April 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

 

பாசுமதி அரிசி - ஒரு கிலோ
ஆட்டுக்கறி - ஒன்றரை கிலோ
தக்காளி - அரை கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பச்சைமிளகாய் - 200 கிராம்
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
ரம்பைஇலை - துண்டு
அன்னாசிப்பூ - ஒன்று
ஜாதிப்பூ - ஒன்று
மல்லி - ஒரு கட்டு
புதினா - ஒரு கட்டு
எண்ணெய் - 100 கிராம்
நெய் - 100 கிராம்
தயிர் - 250 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 300 கிராம்
எலுமிச்சைப்பழம் - இரண்டு
உப்பு - ஒரு கரண்டி


 

வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
கறியை சுத்தம் செய்து துண்டுகள் போட்டு தயிரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்.
அரிசியை ஒன்றுக்கு ஒன்று தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், இலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி கறியை போட்டு கிளறி இஞ்சி பூண்டு விழுது, புதினா, மல்லிக்கீரையை போட்டு கிளறி இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கறியை நன்கு வேக வைக்கவும்.
கறி வெந்ததும் வேகவைத்த அரிசியை போட்டுக்கிளறி பத்து நிமிடம் தம்மில் போட்டு வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு சகோதரி ஜுலைஹா அவர்களுக்கு,
நலமா? ரொம்ப நாளா காணோம்? நோன்பு எப்படி போகுது? இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.
உங்களோட ஆம்பூர் பிரியாணி இன்று செய்தேன். மிகவும் நன்றாகவும், செய்வதற்கும் எளிதாக இருந்தது. நல்ல எளிதான குறிப்புக்கு பாராட்டுக்கள்.
நன்றி.

நான் தயாரித்த பிரியாணி:

<img src="/contrib/ambur_biriyani.jpg" alt="ambur biriyani" />

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செல்வி மேடம்

நான் நலம்... நீங்க நலமா?ஆபிஸில் வேலைகள் எப்படி போகுது?நோன்பு நல்லவிதமாக போகிறது இன்னும் 5 நோன்பு இருக்கு அப்புறம் முடிந்துவிடும்....நோன்பிலாம்தான் அதிகமாக அறுசுவைக்கு வரமுடியவில்லை அதனால்தான் கூட்டாஞ்சோறு வார சமையலில் கூட கலந்துக்கொள்ள முடியவில்லை நோன்பு முடிந்துதான் அதில் நானும் சேரனும்.. என் குறிப்பை செய்து பார்த்து பின்னுட்டம் எழுதியதற்கு ரொம்ப நன்றி மேடம் மிகவும் எளிதாக இதை செய்துவிடலாம் மிகவும் சுவையாகவும் இருக்கும்.... உங்களை போல அனுபவசாலிகளிடமிருந்து பாராட்டு பெரும்பொழுது சந்தோஷமாக இருக்கிறது ரொம்ப நன்றி

உங்கள் ரமலான் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அன்புள்ள ஜுலைஹா, இதை நான் சிக்கன் போட்டு செய்தேன். செய்வதற்கு மிகவும் எளிதாகவும் அதே சமயம் நல்ல மணமாகவும் சூப்பராக இருந்தது பிரியாணி. நன்றி உங்களுக்கு.

அன்புள்ள வானதி
எனது குறிப்பை செய்து பார்த்து பின்னூட்டம் எழுதியதற்கு ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

Dear madam,
Can we do the same biriyani with chicken also? If so then the measurements are same or different for chicken biriyani. Will it give the same taste like mutton biriyani?Please tell me madam and i want to try this out.Thanks.

ஹலோ நிருபமா
நான் இப்பொழுதுதான் உங்கள் பதிவுகளை பார்த்தேன் சிக்கனிலும் செய்யலாம் சுவை கொஞ்சம் மாறுபடும் ஆனால் நன்றாகவே இருக்கும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

மேடம் தங்களின் குறிப்பிலுள்ள ரம்பை இலை என்பது ப்ரிஞ்ஜி இலையா?.மற்றும் அன்னாசிப்பூ என்பது ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் அனிசீட் என்பதா?.மேலும் ஜாதி பூ என்பது என்ன?. தயவுசெய்து விளக்கவும்.

நன்றி
ஜோவிட்டா.

Dear madam,thanks for your quick reply for clearing me the doubt.If i do the same recipe with chicken,the measurements are same or different.

Thanks,
Nirupama

Dear madam,
When we have to add lemon juice and green chillies? How to cut green chillies for this biriyani as it is more and spicy?