பீட்ரூட் டிலைட்

தேதி: April 18, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பீட்ரூட் - ஒன்று
தேங்காய் - ஒரு மூடி
பொட்டுக்கடலை - 100 கிராம்
கசகசா - ஒரு ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
சோம்பு - ஒரு ஸ்பூன்


 

பீட்ரூடை துருவிக்கொள்ளவும். பொட்டுக்கடலை பொடி செய்து கொள்ளவும்.
மற்ற பொருட்களை அரைத்து கொள்ளவும். இதனுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, பீட்ரூட் சேர்த்து பிசைந்து விரும்பிய வடிவங்களில் தட்டிக் கொள்ளவும்.
தோசை கல்லில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு தட்டி வைத்துள்ள கட்லெட்களை போட்டு பொரிக்கவும். சாஸுடன் சாப்பிடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹலோ சாந்தி எப்படி இருக்கின்றீர்கள். மேற்கூறியுள்ள பீட்ரூட் குறிப்பில் shallow ஃபிரை செய்யும் படி கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் என்ன? என்னைப் போல் அரைகுறை ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும் புரியும் படியாக இது போன்ற டெக்னிக்ஸ்ஸையும் முடிந்தவரையில் தமிழ் மொழியிலேயே எழுதினீர்களானால், தங்களின் குறிப்புகளை செய்துப் பார்க்க உதவியாக இருக்கும். ஒகேவா,நன்றி.

உங்களுக்கு போய் நான் சொல்லி கொடுப்பதா?! எப்படியோ உங்கள் ஆலோசனைக்கு நன்றி.
நான் என் குறிப்பில் சரி செய்கிரேன்.

மனோஹரி மேடம்,
இப்பொழுது சரியாக இருக்கிரதா என்று பார்த்து தவறு இருந்தால் சொல்கிறீர்களா?
தமிழில் எழுதி நிரைய நாள் ஆனதால் தெரியவில்லை.

மிக்க நன்றி சாந்தி, எனது வேண்டுகோளை இவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றியதற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதென்ன உங்களுக்கு போய் நான் சொல்லி கொடுப்பதா?என்று எழுதியிருக்கின்றீர்கள்.நானும் உங்களில் ஒருத்தி தான், அவ்வாறெல்லாம் எழுதி, என்னை தனிமைப் படுத்தி விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். நன்றி டியர்.