முதலுதவி பொருட்களும் மருந்துகளும்.

நோய்யட்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது, உண்மை தான் அதற்க்காக தலைவலி, காய்ச்சல், மூக்குசலி,போன்ற சிறு சிறு உபாதைகளுக்கெல்லாம் மருத்துவரை தேடி ஓடாமல், வீட்டிலேயே நமக்கு நாமே செய்துக் கொள்ளும் உதவி தான் முதலுதவி என்பது. சிறிய குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இது கட்டாயமாக கவனிக்க வேண்டிய விசயம்.இவை உடலில் ஏற்ப்படும் சிறு சிறு உபாதைகளாகவும் இருக்கலாம், சிறிய காயங்களாகவும் இருக்கலாம்.ஆகவே இவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவருக்கும் எதிர்பாராத நேரத்தில் ஏற்ப்படும் அசெளகரியங்களை சமாளிக்க, ஒவ்வொறுவீட்டிலும் அத்தியாவசியமாக வைத்திருக்க வேண்டிய, முதலுதவிக்கு தேவைப்படும் பொருட்கள், மருந்துக்கள், என்னவென்று பார்க்கலாம்.

1.தெர்மாமீட்டர்(Thermometer)- காய்ச்சலை துல்லியமாக தெரிந்துக் கொள்வதற்க்கு.
2.பேன்டெஜெஸ்( Bandaids)- காயங்களின் மீது போடப்படும் மருந்து பட்டிகள்.பலவித அளவுகளில் இருப்பது நல்லது.
3.காஸ்பேட்ஸ் (gauze pads) - சுகாதார முறையில் தனித்தனியாக பேக் செய்யப்பட்டதாக இருப்பது நல்லது.
4.காஸ் பேன்டேஜ்(rolled gauze bandage)- கட்டுபோடுவதற்க்கு, பல்வேறு அளவுகளில் இருப்பது நல்லது.
5.காட்டன் பால்ஸ்(cooton balls -கையாளுவதற்க்கு சுலபமாக உருட்டி வைத்திருக்கும் பஞ்சு.எதையும் துடைப்பதற்க்கு பயன்படும்.
6.காட்டன் டிப் அப்லிகேட்டர்( cotton tip applicators)- மருந்தை தொட்டு காயத்தில் சுகாதார முறைப்படி தடவ, அல்லது எதையும் துடைப்பதற்க்கு பயன்படும்.
7.கத்தரிக்கோல்( Scissor)-கூர்மைய்யாக இருக்காமல் பேன்டேஜை வெட்ட மட்டும் பயன்படுவதாக இருப்பது நல்லது. காரணம் அதனால் கூட விபத்து நேரிடலாம்.
8.டுவீஸர்ஸ்(Tweezers)- ஏதாவது செதில்கள், முள் போன்று ஏதாவது கை, கால்களில் ஏறிவிட்டால் எடுப்பதற்க்கு பயன்படும்.
9.ஹாட் வாட்டர் பேட்(Hot water pad)- சூடான ஒத்தடம் கொடுக்க, வலி நிவாரணியாக பயன்படும்.
10.ஐஸ் பேக்(Ice bag)- சுலுக்கு போன்ற சிறி விபத்துகளின் போது வலிநிவாரணியாக பயன்படும்.
11.மெஷர்மன்ட் கப்( calibrated cup)- மருந்துக்களை அளந்து உபயோகிக்க பயன்படும்.
12.சிறிய ஃபிளாஷ் லைட்- துல்லியமாக பார்வையிட பயன்படும்.
13.ஆன்டிசெப்டிக்( Antiseptic solution)-காயத்தை சுகாதாரமாக துடைத்தெடுக்க உபயோகைப்படும்.
14.ஆன்டிபையாட்டிக் கிரீம்( Antibiotic oinment)-காயங்களின் மீது போடுவதற்க்கு கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
15.அடெசிவ் டேப்(Adhesive tape)-காயங்களின் மீதுள்ள கட்டு பிரியாமல் இருக்க ஒட்ட பயன்படும்.
16.கேலமைன் லோஷன் அல்லது ஸ்பிரே- பூச்சிகடி, அரிப்பு போன்ற அசெளகரியங்களுக்கு மேல் பூச்சாக உபயோகப்படும்.

இனி உட்கொள்ளும் மருந்துப் பொருட்கள் என்று பார்த்தோமானால், மருந்துக்களின் பெயர்களை குறிப்பிட வேண்டாம் என்று நினைக்கின்றேன்,மன்னிக்கவும். காரணம் ஒவ்வொறு ஊரில், அல்லது நாட்டில் மருந்துகளின் செயல்திறன் ஒன்றாக இருந்தாலும்,பிரான்டுகள் வேறுபடும்.ஆகவே எதையும் குறிப்பிட்டு எழுத வேண்டாம் என்று நினைக்கின்றேன்.

பொதுவாக தலைவலி காய்ச்சலைக் குறைக்க பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றவாறு மருந்து, மாத்திரைகளை Acetaminophen வாங்கிவைத்துக்கொள்ளவேண்டும்.
சலி அல்லது அலர்ஜிக்கான decongestant டை அனைனருக்கும் ஏற்றவாறு எப்பொழுதும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
இருப்பல் மருந்து எக்ஷ்பெக்டொரன்ட் expectorant ஆகவும் வைத்திருக்க வேண்டும்.
வயிறு சப்பந்தமான மலசிக்கல் போன்ற கோளாறுகளுக்கு ஏற்றவாறு ஏதாவது laxatives லாக்ஸாட்டிவ்ஸ் வீட்டிலுள்ளவர்களின் வயதிற்க்கு ஏற்றவாறு வைத்திருக்க வேண்டும்.
மேலும் இதேபோல் மற்றொரு வயிரு கோளாரான பேதியை தடுக்க ஆன்டிடைரீயல் Antidiarrheal மருந்தையும் தயாராக எல்லா வயதினறுக்கும் ஏற்றவாறு வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
அஜீரணகோளாறுகளுக்கேற்றவாறு ஆன்டாசிட்ஸ் Antacids சை தயாராக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக பெரியவர்களுக்கு இது எந்த நேரத்திலும் பயன்படும்.
அதைப்போல் வாந்தி போன்ற உபாதைகளை தடுக்கவும், அதற்கேற்றவாறு ஏற்றவாறு மருந்தை கேட்டு வாங்கி வைத்துக்கொள்ளவும்.

மேற்கூறியுள்ள உபாதைகள் யாவும் ஓரளவிற்க்கு அதற்குரிய மருந்துகளின் மூலமாக மூன்று அல்லது நான்கு நாளில் குணம் தெரிந்து விடும். ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துக்களால் உபாதைகள் கட்டுப்படாமல் அதிகரித்துக் கொண்டு போனால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி மாற்று மருந்தை எடுத்துக் கொள்ளவேண்டும்.இல்லையென்றால் பிரச்சனை பெரிதாகிவிட வாய்ப்பிருக்கும்.

நமக்கு எந்த நேரத்திலும் தேவைப்படும் இந்த அடிப்படையான மருந்துக்களை வாங்கி வைப்பதோடு மட்டும் நம் கடமை முடிந்து விடவில்லை.
அந்த மருந்துக்களை காலாவதியான தேதிகளையும் Expiery date அடிக்கடி பார்த்து அதை அப்புறப்படுத்திவிட்டு, மீண்டும் வாங்கி வைத்துவிட வேண்டும்.
வீட்டில் இதற்கென்று சரியான ஒரு இடத்தை தேர்வுச் செய்து வீட்டிலுள்ள அனைவரும் முக்கியமாக பெரியவர்கள் எளிதில் கையாளக் கூடிய இடத்தில் அனைத்தையும் வைக்க வேண்டும். இதனால் தேவைப்படும் பொழுது நாம் இங்கும் அங்கும் ஓடி மேலும் டென்ஷனை அதிகரித்துக் கொள்ளாமல் நிதானமாக செயல்பட ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு வாழ்க்கையில் நோய் வருவதைக்குட, எதிர் நோக்கி இருக்க பழகிக் கொள்வதோடு அதற்க்கு தயாராகவும் இருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து என்று கூறி முடிக்கின்றேன்.
அன்பு சகோதரிகளே இந்த குறிப்புகள் உங்களுக்கு நிச்சயமாக பயம்படும் என்ற நம்பிக்கையுடன் எழுதியுள்ளேன். இதில் மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள், நிச்சயமாக எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள என்றுமே ஆவலாய்யிருப்பேன். நன்றி.

நலமாக இருக்கிரீர்களா?தங்களுடன் உரையாடி வெகு நாட்க்கள் ஆகிவிட்டது!எப்படி இருக்குறீர்கள்?தங்களை பார்க்கும்போது மிக்க வியப்பாக இருக்கிரது,தங்களுடைய அனைத்து ஆலோசனைகளும் மிக்க பயனுள்ளதாகவும்,உபயோகமானதாகவும் இருக்கிறது,இந்த மறுத்துவ ஆலோசனையும் அப்படித்தான்,நானும் கிட்ட தட்ட தங்கள் அலோசனைப்போல்தான் வைத்துள்ளேன்,புதிதாக குடும்பம் செய்பவர்களுக்கு மிக்க பயனளிப்பதாகவே இருக்கிறது தங்கள் அனைத்து ஆலோசணைகளும்,பெரியவர்களைப்பிரிந்து வெளிநாட்டில் வாழும் எங்களைப்போன்றோருக்கு நீங்கள் கிடைத்தது அம்மாவே அருகில் இருப்பதுப்போல் ஒரு உணர்வு,தங்கள் அனுபவம் எங்களுக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கிரது தங்களிடம் பேச ஆவலாக இருக்கிறது,(போன் நம்பர் கேட்க்க ஆசைதான் தவறாக எண்ணி விடுவீர்களோ)தங்கள் அலோசனைகளை என்றென்றும் வேண்டும் அன்பு
ரஸியா

ஹலோ ரஸியா, எப்படி இருக்கின்றீர்கள்?நான் நலமாக இருக்கின்றேன். நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.தங்களின் பதில் சந்தோசத்தை கொடுத்தது.ஆமாம் இந்த முதலுதவி சாதனங்கள் நமக்கு தேவைப்படாதவரை அதன் அருமை தெரிவதில்லை.ஆகவே இதன் அருமைய்யை நன்கு உணர்ந்துள்ளதால் தான் இதுகூட யாருக்காவது பயன்படும் என்ற கணிப்பில் தான் எழுதினேன். அம்மாவே அருகில் இருப்பதுப் போல் என்று அநியாயமாக எழுதுயுள்ளீர்கள், அதற்க்கு நன்றி கூற கடமைபட்டுள்ளேன். என்னயிருந்தாலும் அம்மா அம்மா தான். கடவுளைக் கூட அவர்களுக்கு ஒப்பிட்டு கூற முடியாத போது நான் ஒன்றுமேயில்லை, இருந்தாலும் தங்களின் அன்பை முழுமனதாக ஏற்றுக்கொள்கின்றேன்.
தொலைப்பேசி எண்ணை கேட்டுள்ளீர்கள். இதில் தவறு ஒன்றுமில்லை.தவறாக எண்ணிவிடுவீர்களோ என்று கூறுவது தான் தவறு.அதைக் கொடுப்பதும், கொடுக்காததும் அவரவர் விருப்பம் தானே, எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை, ஆனால் இங்கு மன்றத்தில் உடையாடுவதே கூட நல்ல பயனுள்ளதாக இருக்கின்றது என்று நினைக்கின்றேன.மேலும் தொலைப் பேசியால் வீணாக பணத்தையும் செலவுச் செய்யநேரிடும், காரணம் போனை கையில் எடுத்தால் அவ்வளவு சீக்கிரத்தில் கீழ வைப்பதில்லை என்று உறுதிபூண்டுள்ளேன். ஆகவே மன்றத்திலேயே உரையாடலாம் என்றே பரிந்துரைக்கின்றேன்.ஒகேவா நன்றி.

தங்களின் உடனடியான பதிலை பார்த்து மிக்க மகிழ்ச்சி,தாங்கள் கூறியதைபோல் பெற்றவர்களுடன் மற்றவர்களை ஒப்பிட முடியாதுதான் ஆனால் பெற்றவர்களையும் உறவினர்களையும் பிரிந்து வாழும் எங்களைப்போன்ரோருக்கு தாயை போல் நல்ல ஆலோசனைகளை வழங்கிவருகிறீர்கள் தகுந்த நேரத்தில் கைகொடுக்கிரது இந்தியாவில் இருக்கும் அம்மாவிர்க்கு போன் செய்து விசாரித்தால் போன் பில் தான் எகிறும்(கனடாவுக்கு எனக்கு ஃபிரீயாக்கும்) தொடரட்டும் உங்கள் பயனுள்ள ஆலோசனைகள்,நன்றி!

அனைத்தும் பயனுள்ள குறிப்புகள். எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தொடர வேண்டும் உங்கள் குறிப்புகள்.

அன்புள்ள மனோஹரி மேடம் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா. உங்களின் முதலுதவி ஆலோசனை நன்றாக உள்ளது.குறிப்பாக குழந்தைகள் உள்ள வீட்டில் கண்டிப்பாக எல்லா வித முதலுதவி சாமான்களும் (மருந்து,மாத்திரைகளும்)அதற்க்குரிய இடத்தில் வைத்திருப்பது அவசியம் தேவை ஏற்பட்டால் உடனே எடுப்பதற்க்கும் வீணான டென்ஷனை குறைக்கவும் நீங்கள் சொல்வது போல் வைத்திருந்தால் பிரச்சனை இருக்காது.

நானும் உங்களை போலதான் குழந்தைக்கு உள்ளவற்றை தனியாகவும், எங்களுக்கு உள்ளவற்றை தனியாகதான் எப்பொழுதும் வைத்து இருக்கிறேன்.

பிறருக்கு தன்னால் முடிந்த எல்லா ஆலோசனைகளையும் பகிர்ந்துக்கொள்ளும் உங்களை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்களின் ஆலோசனைகள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கும் சேர்த்துதான் எப்பொழுதும் உங்களின் ஆலோசனைகள் இந்த அறுசுவைக்கு தேவை உங்கள் வாழ்வில் எந்த குறையும் இல்லாமல் நீண்ட ஆயுளோடு சந்தோஷமாக வாழ்வதற்க்கு நான் மனதார வாழ்த்துகிறேன்.
நன்றி.

ஹலோ வினோதா இந்த முதலுதவி குறிப்பு தங்களுக்கு உதவுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். நிச்சயமாக இன்னும் குழந்தைகளுக்கு வேண்டிய சிறிய குறிப்புகளையும் தொடர்ந்து எழுதுவேன்.நன்றி.

ஹலோ கதிஜா டியர், தங்களின் விசாரிப்பே தனியழகு தான்! நான் நன்றாக இருக்கின்றேன் நீங்களும் அவ்வாறே இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். இந்த முதலுதவி விசயத்தை நீங்கள் கடைபிடித்து வருவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
நிச்சயமாக இது போலவே இன்னும் நிறைய்ய குடும்ப விசயங்கள் கூட மனதில் இருக்கின்றது. எதை எழுதுவது எதை விடுவது என்ற போராட்டத்திற்க்கு இடையில் இருக்கின்றேன். நிச்சயமாக சமையம் வரும்போது வாழ்க்கைக்கு வேண்டிய எனக்கு தெரிந்த எல்லா விசயங்களையும் ஆலோசனையாக உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்ள நானும் ஆவலாய் இருக்கின்றேன். தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

டியர் மனோஹரி மேடம் அவர்களுக்கு,
நாங்கள் இங்கு நலமாக உள்ளோம் அதுபோல் நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்க்கைக்கு வேண்டிய உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆவலாக உள்ளதாக சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் சந்தோஷமக உள்ளது. உங்களின் உபயோகமான ஆலோசனைகளை பெறுவதற்க்கு நானும் ஆர்வமாக உள்ளேன். உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.

சூப்பர். அருமையான, மிகவும் தேவையான குறிப்புகள் கொடுத்துள்ளீர்கள். நானும் இதுபோல் முதலுதவி பெட்டி வைத்துள்ளேன். இருந்தாலும் உங்கள் குறிப்புகள் அதை மேலும் மேம்படுத்த உதவுகிறது. உண்மையிலேயே உங்களைப் பார்க்கும்போது ஆச்சரியமாகவுள்ளது, எப்படித்தான் பொறுமையாக, அழகாக, கோர்வையாக, அனைவருக்கும் விளங்கும் வண்ணம் எழுத முடிகிறது. உங்களின் அர்பணிப்பையும், நகைச்சுவையுணர்வையும் கண்டு நான் எப்போதும் வியப்பதுண்டு. மேலும் இதுபோல் அநேக குறிப்புகள் கொடுங்கள். உங்கள் செல்லத்தையும் கேட்டதாக சொல்லவும். நன்றி.
அன்புடன் செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹலோ செல்வி எப்படி இருக்கின்றீர்கள்? சாரீங்க உங்களுக்கு பதில் அப்பொழுதே எழுத வேண்டும் என்று நினைத்தேன். இதற்க்கிடையில் கொஞ்சம் பிஸியாகி விட்டேன். மேலும் எங்களின் சீதோஷ்ண நிலையும் மாறிக்கொண்டு வருவதால் வீட்டை விட ஊர்சுற்றுவதில் தான் நாட்டம் அதிகமாய் இருக்கும்.

நீங்களும் இந்த முதலுதவிப் பெட்டி வீட்டில் வைத்துபராமரித்து வருகின்றீகள் என்பதை அறிந்து சந்தோசப்பட்டேன். நான் இந்தியாவில் இருக்கும் வரை இதுப் போன்ற விசயங்களில் அக்கரை காட்டவில்லை. காரணம் முதலுதவிப் பொருட்களையும் மருந்தையும் ஸ்டாக் வைப்பதற்க்கு பதிலாக அதை உபயோகிப்பதிலே காலம் சென்றது. என் குழந்தைகளும் சிறு பிள்ளைகளாக இருந்ததால் மாதா மாதம் யாராவது ஸிக்காகி கொண்டே இருப்பார்கள். ஆகவே மருந்தை ஸ்டாக் வைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது.

நீங்கள் வியக்கும் வண்ணம் நான் என்ன பிரமாதமாக எழுதுகின்றேன் என்று தெரியவில்லை. மனதில் பட்டதை ஃபில்டர் செய்யாமல் அப்படியே கூறுவேன். மற்றபடி எதுவுமில்லை என்று தான் நினைக்கின்றேன். உங்களை பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக உள்ளது. எத்தனை விதவிதமான குறிப்புகளை கொடுத்து வருகின்றீர்கள். சமையல் அனுபவம் இல்லாதவரும் கூட தங்களின் குறிப்பை பார்த்தவுடன் சமைக்க கற்றுக் கொள்வார்கள், அவ்வளவு தெளிவாகவும், துல்லியமான அளவுகளோடும் கொடுத்து வருகின்றீர்கள்.இவ்வளவு திறமை வாய்ந்த உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய அறுசுவைக்கு தான் எங்களின் நன்றியை கூற வேண்டும்.

டைகருக்கு தங்களின் விசாரிப்பைக் அப்பொழுதே கூறிவிட்டேன்.தலையை சாய்த்து உன்னிப்பாக கேட்டபடியே தனது மொட்டை வாலை ஆட்டி நன்றியை கூறினான் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.ஓகே டியர், மீண்டும் சந்திப்போம் நன்றி.

மேலும் சில பதிவுகள்