வடவம் சம்பால்

தேதி: April 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வடவம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - பாதி மூடி
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 5
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடவத்தை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.
காய்ந்த மிளகாயை நெருப்பில் சுட்டுக் கொள்ளவும், தேங்காயை துருவி எண்ணெயில்லாமல் லேசாக சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் முதலில் புளியையும், சுட்ட மிளகாயையும் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.
பின்பு தேங்காய் போட்டு சிறிது நீர் விட்டு அரைக்கவும். பின்பு தோல் நீக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்