பொருள் விளங்கா உருண்டை

தேதி: April 24, 2007

பரிமாறும் அளவு: 40 உருண்டைகள் கிடைக்கும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புழுங்கலரிசி - 1/2 கிலோ,
பாசிப்பருப்பு - 1/4 கிலோ,
வெல்லம் - 1/2 கிலோ,
தேங்காய் - 1 மூடி,
ஏலக்காய் - 3,
பொட்டுக்கடலை - 1 கைப்பிடி,
வறுத்த நிலக்கடலை - 1 கைப்பிடி,
முந்திரி - 10,
உப்பு - 1 சிட்டிகை,
நெய் - 1 ஸ்பூன்.


 

பாசிப்பருப்பை சிவக்க வறுக்கவும்.
அரிசியை சிறிது சிறிதாக வாணலியில் போட்டு, பொரி அரிசி போல் வறுத்தெடுக்கவும்.
வறுத்த அரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, மெஷினில் நைசாக அரைக்கவும்.
தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி வைக்கவும்.
1 ஸ்பூன் நெய்யில், ஒடித்த முந்திரி, தேங்காய், பொட்டுக்கடலை, நிலக்கடலை எல்லாவற்றையும் வறுத்து, மாவில் கொட்டவும்.
ஏலக்காய்தூள், உப்பு சேர்க்கவும்.
வெல்லத்தைத் தூள் செய்து, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, கம்பி பாகு காய்ச்சவும்.
காய்ச்சிய பாகை மாவில் சிறிது சிறிதாக கலந்து, சூடாக இருக்கும்போதே எழுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக பிடிக்கவும்.


ஒரு மாதமானாலும் இந்த உருண்டை கெடவே கெடாது. பயணங்களின் போது இந்த உருண்டைகளை சாப்பிட்டால் பசியே எடுக்காது.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள அக்கா,

பொரிவிளங்கா உருண்டையின் ஒரிஜினல் பெயரையும் பெயர் காரணத்தையும் அழகாக விளக்கி என் போன்றவர்களுக்கு பொருள் விளங்க வைத்ததற்கு மிக்க நன்றி. இதை செய்து பார்த்தேன். ருசி நன்றாக இருந்தது. ஆனால் கடிப்பதற்கு மிகவும் கஷ்டமாக ரொம்ப கெட்டியாக இருந்தது. அப்படிதான் இருக்குமா, இல்லை நான் எதாவது தவறு செய்துவிட்டேனா..

நலமா? வாழ்த்துக்கள். மிக சரியாகத் தான் செய்துள்ளீர்கள். அப்படித்தான் கெட்டியாகத் தானிருக்கும். நீங்கள் தவறேதும் செய்யவில்லை. கெட்டியாக இருந்தால் தான் நீண்ட நாட்களுக்குக் கெடாமலிருக்கும்(மாதக் கணக்கில் கூட வைத்திருப்பார்கள்). உருண்டை கொஞசம் இலகுவாக வேண்டுமெனில், பாகை கம்பி பதத்திற்கு முன்பாகவே எடுத்து உருண்டை செய்தால் சரியாக இருக்கும், ஆனால் உருண்டை வெகு நாடகளுக்கு வராது, கெட்டு விடும் (15 நாட்கள் தாங்கும்). நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.