மனமார்ந்த வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ஹவ்வா மேடம் எப்படி இருக்கிறிர்கள் நலமா முன் போல அடிக்கடி நெட்டுக்கு வரமுடியவில்லை இப்பொழுதுதான் கூட்டாஞ்சோறு பகுதியில் பார்த்தேன் முதலில் வாழ்த்தனும் என்று வாழ்த்துகிறேன் மிகவிரைவில் குறிப்பு கொடுத்து அசத்திவிட்டீர்கள் சந்தோஷம் 200குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

அன்பு சகோதரி ஹவ்வா,

வாழ்த்துக்கள்... அதிவேகமாக 100 குறிப்புகள் கொடுத்துள்ளீர்கள்... அனைத்துமே அரிய குறிப்புகள்... மேலும் இதுபோல நிறைய குறிப்புகள் தர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!

நன்றி...

நன்றி...

அஸ்ஸலாமு அலைக்கும் ஹவ்வா,
அன்புள்ள ஹவ்வா மேடம் அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்களா. மிக விரைவில் 100 குறிப்புகள் கொடுத்து இருக்கிறீர்கள் எல்லாம் அழகான குறிப்புகள் கூடிய சீக்கிரம் 200வது குறிப்புகள் கொடுக்க மனதார வாழ்த்துகிறேன் .
நன்றி.

சலாம் சகோதரி ஹவ்வா
உங்கள் குறிப்புகள் எல்லாம் அருமை.குறுகிய காலத்தில் 100 குறிப்புகள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள், மிக அருமையான, எளிமையான குறிப்புக்கள் கொடுத்து அசத்தி விட்டீர்கள். சீக்கிரமே 200-ம் தொட வாழ்த்துகின்றேன்.
அன்புடன் செல்வி.

அன்புடன்,
செல்வி.

நலமாக இருக்குறீர்களா?இப்பொழுதுதான் அருசுவையில் குறிப்புகள் குடுக்க ஆரம்பித்தீர்கள் அதர்க்குள் 100ஐ தொட்டுவிட்டீர்கள்,ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது தங்கள் எல்லொருடைய முயற்ச்சியாலும் அருசுவையை பார்வை இடுபவர்களுக்கு நிறைய குறிப்புகள் கிடைக்கிறது,இதே வேகத்துடன் இன்னும் பல 100 குறிப்புகள் தரவேண்டி,உளமார வாழ்த்துகிறேன்

சகோதரி ஹவ்வா,

வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள் திருமதி ஹவ்வா அலியார் அவர்களுக்கு. அறுசுவைக்கு இன்னுமொரு சாதனையாளர் கிடைத்துள்ளார் மிக்க மகிழ்ச்சி. மிகவும் எளிதாக சமைக்கக்கூடிய நிறைய்ய டிபன் குறிப்புகளை கொடுத்துள்ளீர்கள், பாராட்டுக்கள். இதைப்போலவே மேலும் மேலும் தங்களின் பங்களிப்பைத் தொடர வேண்டி மனமார வாழ்த்துகின்றேன்.வாழ்க வளமுடன், வளர்க அறுசுவையுடன் நன்றி.

என்னை வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு எனது மனம் கனிந்த நன்றி

டியர் ஹவ்வா மேடம்! நலமா? பலவித அருமையான குறிப்புகளை வழங்கிய தங்களுக்கு என் வாழ்த்துக்கள்! தொடரட்டும் தங்கள் குறிப்புகள்!

ஹலோ டியர் ஹவ்வா, எப்படி இருக்கின்றீர்கள்? சந்தோசத்தை கொண்டாகிக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.இதற்க்கிடையில் நமக்குள் ஒரு அன்பு வேண்டுகோளை விடுக்க ஆசைப்படுகின்றேன்.அது என்னவென்றால் அறுசுவையில் தங்களின் பங்களிப்பையும், சாதனைய்யையும் பாராட்டி நானும் மற்ற நேயர்களும் எங்களின் மகிழ்ச்சியை வாழ்த்துக்களாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதற்க்கு தாங்கள் அளித்த பதில் ஏமாற்றத்தை அளித்தது.

நமக்காக மற்றவர் செலவுச் செய்த ஒரு சில நிமிடங்களைக் கூட நாம் மதிக்க வேண்டும் என்பது என்னுடைய்ய கருத்து. ஆகவே தங்களுக்கு பாராட்டை தெரிவித்த நேயர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நன்றியை கூறுவது தான் நல்ல முறையான பண்பாடு என்று நினைக்கின்றேன்.மேலும் உங்களுக்காக ஏற்ப்படுத்தப்பட்ட இந்த இதழை நீங்கள் தான் அதை முழுமைப்படுத்த வேண்டும். பதில் எழுதாமல் அரைகுறையாக விடுவது பார்க்க மகிழ்ச்சியைத் தராது என்பது என் கருத்து.

நாம் எல்லோருமே ஏதாவது ஒருவித நேர நெருக்கடியில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம். இருந்தாலும் இதைக் காரணம் காட்டி எந்த விசயத்திலும் நமக்குரிய கடமைகளை சிறிது தள்ளிப்போடலாமே தவிர, ஒதுக்குவது முறையல்ல. திருமதி ஃபாயிஜா காதர் அவர்களும், அவர்களின் பாராட்டை ஏற்றுக் கொண்டிருக்கும் பதிலிலேயே இதைக் குறிப்பிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தாங்களும் அந்த வழக்கத்தை கடைப்பிடித்துள்ளதைப் பார்த்த பிறகு மேலும் தாமதிக்க வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

தங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியதற்க்கு மன்னிக்கவும். நம்முடைய தோழியோ அல்லது நம்முடைய்ய நலம் விரும்பியோ கூறினால் எப்படி இருக்குமோ அதைப் போலவே என்னுடைய்ய வேண்டுகோளையும் பாவித்து ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். இவ்வாறு இந்த சிறிய விசயத்தைக் கூட பெரிதாக பாவித்து எனது கருத்தைக் கூற வாய்ப்பு கொடுத்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

மேலும் சில பதிவுகள்