சீயக்காய் தூள்

சீயக்காய் தூள் வீட்டில் செய்வது எப்படி????

மிகவும் நல்ல கேள்வி எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது யாராவது தெளிவாக தமிழில் பதில் கூறினால் நன்றாக இருக்கும்.

ஹலோ சுஜாத்தா எப்படி இருக்கின்றீர்கள்? நீங்கள் இந்தியாவில் இருப்பதால் சுலபமாக இந்த தூளை தயாரித்துக் கொள்ளலாம். இன்னும் தமிழ் நாட்டில் என்றால் இன்னும் சுலபமாக செய்துக் கொள்ளலாம். காரணம் மற்ற மாநிலங்களில் இதை அரைத்துக் கொடுக்கும் மிஷின்கள் இருக்கின்றதா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரையில் கேரளாவில் கிடையாது.
நீங்கள் சீயக்காய் அரைக்கிலோ, பச்சைப் பயிறு ஒரு கையளவு, வெந்தயம் ஒரு கையளவு ஆகியவற்றை எடுத்து வெய்யிலில் நன்கு காயவைத்து மெஷினில் கொடுத்து தூளாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தலை குளிக்கும் பொழுது தேவையானதை எடுத்து அதில் சோறு வடித்த தண்ணீரை ஊற்றி நன்கு கரைத்து தலைக்கு போடுங்கள்.
சோறை வடிக்கும் பழக்கம் இல்லாவிட்டால் சீயக்காயுடன் சிறிது பச்சரிசியையும் சேர்த்து அரைத்துக் கொண்டு தண்ணீரில் தூளை கரைத்து உபயோகிக்கலாம். நன்றி.

நான் நலமாக இருக்கிறேன்.நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் மனோகரி மேடம். நான் தமிழ் நாட்டில் தான் உள்ளேன். மிகவும் நன்றி மேடம். பூந்திக் கொட்டை எதற்கு உபயோகப் படுத்துவார்கள்? அதையும் சீயக்காய் தூள் அரைக்க பயன்படுத்தலாமா?

Dear Mrs.Sujatha,

Am new to this page. still i want to give some tips.

Yes, Boonthi kottayum seeyakayil serthu araikalam. Boonthi kottai serthal seeyakai nalla nurai kodukkum. Thalayil theikumboluthu shampoo pola elithaga irukkum.

Cheers
Malar

Cheers
Malar

நன்றி மலர் மேடம். பூந்திக் கொட்டை கொலுசு போன்ற வெள்ளிப் பொருள்களை தூய்மைப் படுத்த உபயோகம் செய்வார்கள் எனக் கேள்விப் பட்டேன். சீயக்காய்த் தூள் அரைக்க எவ்வளவு பூந்திக் கொட்டை வேண்டும்.

Neengal Malar madam endrellam azhaika vendam, Malar ena azhaithal santhosapaduven. Seyakai alavil 10 il irandu pangu podalam.

Bondhi kottai pean thollayayum ozhikum.

I have a doubt, how you all manage to write it in Tamil, wher as i cannot find the tamil font.

Cheers
Malar

Cheers
Malar

ஒகே நான் உங்களை மலர் என்றே அழைக்கிறேன். நீங்களும் என்னை சுஜா என்று அழைத்தால் சந்தோஷப் படுவேன். நீங்கள் எழுத்துதவிப் பக்கத்திற்குப் போய் தமிழில் சொல்ல நினைப்பதை அபப்டியே ஆங்கிலத்தில் டைப் செய்யவும். அப்புறம் அதை காப்பி செய்து வேண்டும் இடத்தில் பேஸ்ட் செய்யவும்.

அன்புள்ள சுஜாதா!

சீயக்காய்ப்பொடி பற்றி கேட்டிருந்தீர்கள். ஒரு அருமையான சீயக்காய்ப்பொடி தயாரிக்கும் விதம் பற்றி உங்களுக்காக இங்கே எழுதுகிறேன். நீங்கள் தமிழ்நாட்டில் இருப்பதால் இதிலுள்ள அனைத்துப் பொருள்களும் தங்களுக்கு கிடைக்கும்.

சீயக்காய்ப்பொடி:

கறிவேப்பிலை-ஒருகை
துளசி இலை- ஒரு கைப்பிடி
பூந்திக்கொட்டை-10[உள்ளே இருக்கும் கொட்டையை நீக்கி விட்டு தோலை மட்டும் உபயோகிக்கவும்]
கரிசலாங்கண்ணி- ஒரு கை
அடுக்கு செம்பருத்தி பூ-6
பொடுதலை சமூலம்- 6 கிராம்[நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்]
ஓரிதழ் செம்பருத்தி இலை-10
ஆவாரம்பூ- 5 பிடி
உலர்ந்த ரோஜா-20
எலுமிச்சை தோல்- 10 மூடி
ஆரஞ்சு தோல்- 4
நன்னாரி வெர்- 25 கிராம்
அரைத்து உலர்த்திய சந்தனம்- 5 கிராம்
பச்சைப்பயிறு- 50 கிராம்
கார்போக அரிசி- 10 கிராம்
மரிக்கொழுந்து - சிறிது
நெல்லி முள்ளி- அரை கப்
வெந்தயம்- 50 கிராம்
வெட்டி வேர்- 25 கிராம்
சீயக்காய்- ஒன்றரை கிலோ
இவைகளை நல்ல வெய்யிலில் காயவைத்து ஒன்றாக அரைக்கவும். நாட்டு மருந்து கடையில் அல்லது காதி கடைகளில் உசிலம்பொடி என்ற ஒரு மூலிகைப் பொடி கிடைக்கும். இது நுரையும் குளிர்ச்சியும் தரக்கூடியது. 2 ஸ்பூன் சீயக்காய்ப்பொடிக்கு அரை ஸ்பூன் உசிலம்பொடி என்ற அளவு கலந்து குளித்தால் தலைமுடிக்கு நல்லது.

அருமையான குறிப்பு.மிகவும் நன்றி

நலமாக இருக்கிறீர்களா? தங்களுடைய சீயக்காய் செய்முறை அருமையாக இருக்கிறது,இது அதிக நாட்க்கள் வைத்திருந்து பயன் படுத்தலாமா?ஏனெனில் நான் இந்தியா போய் வரும்போது செய்து வரலாம் என்றுதான் கேட்க்கிறேன்.நன்றி!

மேலும் சில பதிவுகள்