மிக்ஸர்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஓமப் பொடி - 500 மில்லி
காராப் பொடி - 500 மில்லி
வேர்க்கடலை - 100 மில்லி(வாணலியில் வறுத்துத் தோல் நீக்கியது)
முந்திரிப் பருப்பு - 100 மில்லி(சிறு துண்டுகளாக ஒடித்தது)
பயறு - ஒரு கையளாவு வறுத்தது
உளுந்து - ஒரு படி வறுத்தது
அவல் - 100 மில்லி நெய்யில் வறுத்தது
வாழைக்காய் - சின்னதாக வெட்டி வறுத்தது அல்லது உருளைக்கிழங்கு வறுவல் ஒரு கை நிறைய
கறிவேப்பிலை - நெய்யில் பொரித்தது
பொட்டுக் கடலை - ஒரு பிடி
உப்புத் தூள்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி


 

ஓமப் பொடியும், காராப் பூந்தியும் அரை உப்புப் போட்டுச் செய்யவும்.
எல்லாப் பொருட்களையும் கலந்து உப்பு, மிளகாய்த் தூளையும் கலந்து எடுத்துக் காற்றுப் புகாத டப்பாவில் மூடி வைக்கவும்.
இந்தப் பொருட்களில் ஓமப் பொடி, காராப் பூந்தி, கறிவேப்பிலை, வேர்க்கடலை, அவல் முதலியவைதான் முக்கியமாகத் தேவைப்படுவை.
மற்றவை எல்லாம் சேர்க்கச் சேர்க்க ருசியும் அழகும் கூடுதலாகும்.


மேலும் சில குறிப்புகள்