புடவையை எவ்வாறு பாதுக்காக வேன்டும்

நான் வெளிநாட்டில் இருக்கின்றேன்.கல்யாண கூரை புடவையையும் இதர புடவைகளையும் ஒரு முறை உடுத்திய பிறகு சுயிட்கேஸில்(suitcase) 3 வருடங்கலாக அப்படியே வைத்துள்ளேன்.இது சரியா? இல்லையில் தயவு செய்து உதவவும்.நன்றி

3 வருடங்களாக புடவைகளை அப்படியே வைத்திருக்கக் கூடாது தான். பரவாயில்லை, இப்போதாவது புடவைகளை விரித்து, முடிந்தால் இளம் வெய்யிலில் சிறிது நேரம் (30 நிமிடங்கள்) போட்டு, எடுத்து, மடிப்புகளை மாற்றி, மடித்து, சின்ன சின்ன துவாலைகளால் சுற்றி, பெட்டியில் வைக்கவும். இளம் வெய்யிலில் போட முடியவில்லையெனில் ஃபேன் காற்றிலேயே 1 மணி நேரம் விரித்து, உலர விட்டு, முன் சொன்னது போல் வைக்கவும். இனியாவது முடிந்தவரை 3 மாதத்திற்கு 1 முறை இதுபோல் செய்யவும். பூச்சி வராமலிருக்க அந்துருண்டைகளை (நாஃப்தலின் பால்ஸ்) பயன்படுத்தாமல், வசம்பை சிறிது ஒரு துணியில் கட்டி, புடவைகளின் நடுவே வைத்தால் நல்லது. நன்றி.

அன்புடன்,
செல்வி.

நலமா இருக்கிறீர்களா?உடல் இயலாமை என்று படித்தேன் இப்போழுது எப்படி இருக்கு?.மிகவும் நன்றி அக்கா.சில தினங்களாகவே மனதில் புடவையின் நினைப்புதான் நல்ல வேலை இந்த கேள்வியை எழுதினேன்.இனி நீங்கள் தந்த டிப்சை கன்டிப்பாக 3 மாதத்திற்க்கு 1 முறை செய்வேன்.நன்றி.

நான் நலமாக உள்ளேன். உங்களின் அன்பு விசாரிப்புக்கு மிக்க நன்றி. இப்போது என் உடல் நிலை ஓரளவு தேறி வருகிறது. அதிக விலை கொடுத்து வாங்கிய, மிக பிடித்தமான புடவைகளை பத்திரமாக பாதுகாத்து வையுங்கள், என்ன கொஞ்சம் மெனக்கெட வேண்டும். அதனாலென்ன, அதுபோன்ற புடவைகளை விரித்து, மடித்து வைக்கும் பொழுது, மனதிற்குள் அந்த புடவைகளை எந்த நிகழ்ச்சிக்காக எடுத்தோம், உடுத்தினோம் என்பது நினைவிற்கு வரும். அப்போது நடந்த அந்த இனிமையான நிகழ்வுகள் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும், இல்லையா? அழகாக என்னை 'அக்கா' என விளித்தது மனதிற்கு இதமாகவுள்ளது, இதுவரையில் யாரும், ஏன் என் சொந்த சகோதரிகளே என்னை அக்கா என்றழைத்ததில்லை. உண்மையிலேயே நான் பறப்பது போல் உணர்கிறேன். மிக்க நன்றி, ஷ்வ்.
அன்புடன் செல்வி.

அன்புடன்,
செல்வி.

நான் இப்போழுதுதான் உங்களின் கருத்தைப்பார்த்தேன்.படித்ததும் அழுத்துவிட்டேன்.நான் ரொம்ப சென்சிடிவ்.20 வயதிலியே பெற்றோர்களையும் கூட பிறந்த சகோதர்களையும் விட்டுவிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டேன்.UK வந்த பிறகு பிரிவை தாங்க முடியாமல் மனகஷ்டத்தால் ரொம்பவும் கஷ்டப்பட்டேன்.தெரியாத மற்றும் இல்லாத எல்லா நோய்களும் வந்துட்டு இப்பொதுதான் அறுசுவையினால் எல்லாம் தேறி வருகின்றது.என்னுடைய கதையை சொல்லி உங்களை நான் குழப்ப விரும்பவில்லை.நீங்கள் சொன்னது போல புடவையை பார்க்கும் போது எல்லாமே ஞாபகம் வரும்.அதிலும் ஒரு சந்தோசம்தான்.எனக்கு புடவையின்ன நல்ல விருப்பம் ஆனால் வடிவாக கட்ட தெறியாது.மிகவும் நன்றி உங்களின் அன்புக்கு.

நலமா? இத்தனை நாள் நான் தான் ரொம்ப சென்சிடிவ் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், நீங்க என்னை விட மோசம் போலுள்ளதே! எனக்கு 17 வயதிலேயே திருமணமாகி விட்டது, ஆனால் பெற்றோரை பிரிந்த கஷ்டங்கள் எதுவுமில்லை. இரு கோடுகள் தத்துவம் தெரியுமென்று நினைக்கின்றேன். ஒரு பெரிய கஷ்டம் வரும் பொழுது சிறிய கஷ்டம் தானாகவே மறைந்து விடும். பைபிள் சொல்வது போல் 'துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்', ஆகவே வரும் துன்பங்கள் யாவும் நன்மைக்கே. உங்கள் உடல்நலம் முழுதும் குணமாகி விட்டதா? உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்களுடைய கதையைக் கேட்டு நான் குழப்பமடைய மாட்டேன் ஏனெனில் நானே ஒரு குழப்பவாதி தான். என் கணவர் கூட என்னை ஒரு சில காரியங்களுக்கு சொல்லிக் கொண்டே இருப்பார் 'எதற்கு இப்படி குழப்பிக் கொள்ளுகிறாய்?' என்று. எனவே கவலை வேண்டாம். என்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமென்று நீங்கள் நினைத்தால் சொல்லுங்கள் கண்டிப்பாக நான் செய்கிறேன். எனது மகளும் அடுத்த மாதம் லண்டன் வர போகிறாள். நீங்கள் விருப்பப்பட்டால், அவளை உங்களை வந்து பார்க்க சொல்கிறேன். புடவை கட்டுவது என்பதொன்றும் பெரிய விஷயமேயில்லை, கொஞ்சம் முயற்சி செய்தால் போதுமானது. சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் தானே கைவரப் பெறும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

,
உங்கள் இருவருக்கும் இடையில் வருவதற்கு மன்னிக்கவும்.நீங்கள் இலண்டனில் வசிப்பதாக எழுதியிருந்தீர்கள்.இலண்டனில் எங்கு இருக்கிறீர்கள்.விருப்பமிருந்தால் அறியத் தாருங்கள்.

ஹலோ செந்தமிழ் செல்வி மேடம் நலமாக இருக்கின்றீர்களா?.மேடம் பட்டு புடவையை Hanger-ல் மாட்டி வைக்கலமா?நன்றி.

நான் நல்ல நலம்."ஒரு பெரிய கஷ்டம் வரும் பொழுது சிறிய கஷ்டம் தானாகவே மறைந்து விடும். பைபிள் சொல்வது போல் 'துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்'".இவையேல்லாமே முற்றிலும் உன்மையே.துன்பம் என்பது ஒரு அனுபவம்.இப்ப நாங்கள் துன்பப்பட்டாலும் கன்டிப்பாக வருங்காலத்தில் நல்ல சந்தோசமாக இருப்போம்.உங்களின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் மிகவும் நன்றி.என் உடல் இப்போழுது ஒகே.மருந்து எடுத்து வருக்கிறேன்.உங்கள் மகள் என்னை வந்து பார்க்கலாம்.நான் இருப்பது கிழக்கு லண்டன்.நன்றி.

நலமா?.நான் இருப்பது கிழக்கு லண்டன்.நன்றி.

நான் இருப்பதும் கிழக்கு இல்ண்டனில் தான் ஈஸ்தாம் பகுதியில்.தவிர என் கேள்விக்கு பதிலளித்தமைக்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்