Ending_breastfeeding

Hi Everyone

Im new to this site. Im Devinathan from United Kingdom. I've 22months old little angle. . Im in breastfeeding. I'd like to stop breastfeeding. Because she is refusing food. She is always thinking my milk. So she didn't like anykind of food. So me and my husband decided to stop breastfeeding. "Can anyone tell me How to stop b/f? , will she forget mother's milk ? and how to distract from breastfeeding to our food?.

" Can anyone have got idea, please tell me. It'll more helpfull for me. Pleaseeeeeeeeeee...
Thanks for reading

devinathan

உங்கள் வரவு நல்வரவாகுக. நலமா? நீங்கள் இவ்வளவு நாட்கள் தாய்ப்பால் கொடுத்ததே பெரிய விஷயம். மகிழ்ச்சியாகவுள்ளது. குட்டி தேவதைக்கு திட உணவு நிறைய கொடுங்கள். வழக்கமாக நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் குழந்தையின் கண்ணில் படாமல் மறைந்திருந்து மற்றவர்களிடம் குழந்தைக்கான வேறு உணவை கொடுக்க சொல்லி பழக்குங்கள். கொஞ்சம் குழந்தைக்கு விவரம் தெரிந்த பிறகு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிகவும் கடினம். முடிந்த வரை குழந்தையின் கண்களில் அதிகம் படாமலிருப்பது நலம். அம்மாவை பார்க்கும் பொழுது தான் குழந்தைக்கு தாய்ப்பால் ஞாபகம் வரும். காலையில் இட்லி, 10 மணிக்கு பால் அல்லது ஜூஸ், மதியத்திற்கு பருப்பு, காய்கள் சேர்த்து மசித்த சாதம், மாலையில் சத்து மாவு, இரவில் இட்லி என பழக்கப் படுத்தி விட்டீர்களானால், குழந்தைக்கு பசியும் தாங்கும், சத்தும் கிடைக்கும். குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தும் போது உங்களுக்கும் மிகவும் கஷ்டமாக தானிருக்கும். அரை உப்புடன் சாதம் சாப்பிட்டுக் கொண்டு, கீரை, பூண்டு, நெய், மீன் முதலியவற்றை தவிர்க்கவும். தாய்ப்பால் சுரப்பதை தவிர்க்க, மல்லிகைப்பூக்களை மேல் உள்ளாடையில் வைத்து அணிந்து கொண்டால், 2 அல்லது 3 நாட்களுக்குள் தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். மாத்திரைகள் சாப்பிட்டால், அடுத்த குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்காது என்று சொல்வார்கள். நன்றி.
அன்புடன் செல்வி.

அன்புடன்,
செல்வி.

Thank you very much for ur ideas/advice. Im really happy from your ideas. I'll try.

with luv
devinathan

மேலும் சில பதிவுகள்