திடீர் ஜிலேபி

தேதி: May 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

மைதா - அரை கப்
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
சமையல் சோடா உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - ஒரு கப்
எண்ணெய் - பொரிக்க


 

ஒரு பாத்திரத்தில், ஒரு கப் சர்க்கரை மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு நூல் பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.
மைதா, தயிர், சமையல் சோடாவை ஒரு பாத்திரத்தில் போட்டு முறுக்கு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும். முறுக்கு குழாயில் மாவினை போட்டு எண்ணெயில் பிழியவும்.
எண்ணெயில் நுரை நின்றவுடன் ஜிலேபியை எடுத்து சர்க்கரை பாகுவில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து எடுத்து தனியாக அடுக்கவும்.
அனைத்து மாவினையும் இது போல செய்து முடித்தவுடன் எடுத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்