gas trouble

enathu kanavarukku gas trouble ullathu.please help me how to control this problem.arusuvai thalathil ithirkku oru solution sollunga please..................

எப்படி இருக்கிறீர்கள்?க்யாஸ் ப்ராப்ளம் உள்ளவர்கள் தினம் இரவில் ஒரு முழு பூண்டை உரித்து அதை நன்கு வேக வைக்கவும் பின்பு பாலில் கலந்து சாப்பிடலாம்,தினம் ஒரு பூண்டு சாப்பிடுவது நல்லது,பூண்டை அடுப்பில் கான்பித்து சூட்டும் சாப்பிடலாம்!இந்த பிரச்சினைக்கு பூண்டு நல்ல மருந்து!

thank u very much madam.i will reply u, about the result soon.

ஹலோ லக்ஷ்மி எப்படி இருக்கீங்க? தங்களின் கேள்விக்கு விடையாக திருமதி ரஸியா அவர்களின் ஆலோசனை நல்ல பயனைதரும் என்று நானும் நம்புகின்றேன். மேலும் இந்த வாயுக் கோளாறுகள் நாம் உண்ணும் உணவு சரியான விகிதத்தில் செரிமானம் அடையாவிட்டாலும் கூட ஏற்படும் என்று நினைக்கின்றேன். ஆகவே நீங்கள் சமைக்கும் பொழுது இஞ்சி பூண்டை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பெருங்காயத்தையும் பருப்புவகைகளில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். பீன்ஸ் வகைகளில் சற்று அதிகமாகவே இஞ்சியை சேர்த்து சமையுங்கள். இதனால் எந்த வித பக்க விளைவும் ஏற்ப்படாது. புதினா சட்னியை தயார் செய்து வைத்துக் கொண்டு தினமும் உணவில் சேர்த்து கொடுங்கள். டீ தினமும் அறுந்துபவரானால் இஞ்சியை ஒரு துண்டு நசுக்கிப் போட்டு தயார் செய்து கொடுங்கள்.

கிழங்கு வகைகள் மற்றும் கேபேஜ் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளால் கூட இந்த தொந்தரவு வரும் என்று கூறுவார்கள், ஆனால் அது எந்த அளவிற்க்கு உண்மை என்று தெரியவில்லை காரணம் இதுப் போன்ற உணவைச் சாப்பிடும் அனைவருக்கும் இந்த தொந்தரவு வருமா என்பது சந்தேகமே. என்னைப் பொருத்தவரையில் வயிற்றை காலிப் போடாமல் நேரத்தோடு அளவாக சாப்பிட்டு, நம் உடல்நிலைக்கு ஏற்றவாறு உடற்பயிர்ச்சி செய்தாலே போதும் இதுப் போன்ற உபாதைகளிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறுவேன். நன்றி.

gas trouble

thank u very much. i will follow ur tips.

if you drink a lot of water you can get rid of gas problem

மேலும் சில பதிவுகள்