ஷாம்பு போட்டு குளிப்பது நல்லதா

என் பெயர் நளினி. நான் இப்போ 3 மாதம் கர்ப்பமாக உள்ளேன். சமீபத்தில் ஒரு நாளிதழில் கர்ப்பிணி பெண்கள் ஷாம்பு பொட்டு குளித்தால் அது குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் என்று படித்தேன். இது உண்மையா. எனது குழப்பத்தை தீர்த்து வைக்கவும்.

ஹலோ நளினி எப்படி இருக்கின்றீர்கள்? தாயாகப் போகும் தங்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களை கூறிக் கொள்கின்றேன். கர்ப்பிணிகள் ஷாம்பு போட்டுக் குளிப்பதால் வயிற்றிலுள்ள குழந்தையின் மூளைவளர்ச்சி பாதிக்கபடும் என்பது எந்த அளவிற்க்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதைப் போன்ற செய்திகளால் அவர்களின் முடிக்கு பிரச்சனை வரும் என்பது மட்டும் உறுதி. காரணம் கர்ப்பிணிகள் ஷாம்புவின் மூலமாக யார் உதவியும்மில்லாமல் எளிதாக தலையைதேய்த்து குளித்து சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் வேறு எதைப் போட்டு குளித்தாலும் அதிக நேரமெடுக்கும். ஆகவே தாங்கள் இதுப் போன்ற செய்திகளில் கவனம் செலுத்துவதை தவிர்த்து விட்டு நல்ல தரமான ஷாம்புக்கள் ரோஜா, மல்லிகை, போன்ற மன்னன் மயங்கும் நறுமணத்துடனான ஷாம்பூகள் கிடைக்கின்றன. வாங்கி பயமில்லமல் உபயோகித்து தலைய்யை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் மனதுக்கு பிடித்த இனிமையான இசைய்யைக் கேட்டுக் கொண்டு, மகிழ்ச்சி தரக்கூடிய திரைப்படங்களை பார்த்துக் கொண்டு, பொழுதுப் போக்கான புத்தகங்களை வாசித்துக் கொண்டும், பிடித்த உணவை சமைத்துக்கொண்டும், பிறக்கப்போகின்ற குழந்தைக்கு தேவையானவைகளை தயார்படுத்துவதை திட்டமிட்டுக் கொண்டும், கணவருடனும் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடனும் மகிழ்சியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். காரணம் இவ்வாறு மனதை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதனால் கூட வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உபகாரமாக இருக்கும். இது உண்மையும் கூட. ஆகவே எதற்க்கும் பயப்படாமல் இயல்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி.

மிக்க நன்றி மனோகரி மேடம். தங்கள் அறிவுரைபடி நடக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்