AM I PREGNENT or NOT ? Please பதில் சொல்லுங்க.

எனக்கு உடனே பதில் சொல்லமுடியுமா?
உங்கள் அநுபவங்களில் இவ்வாறு ஏதாவது நடந்ததுண்டா ?
எனது problem என்னவென்றால்,March 17 சாதாரணமான period date .
ஆனால், இன்னும் Menses வரவில்லை. 3 வாரங்களுக்குப் பிறகு என்னால்சில மாற்றங்கள் உணரமுடிந்தது.PREGNENT போல ,(vormitting ,breast pain ,sickness,& many hungry ) ஆனால் அது கிட்டத்தட்ட 2 வாரங்கள் கூடுதலாக இருந்தது ,பின்பு மெதுமெதுவாக இல்லாமல் போய்விட்டது.நான் நிச்சயமாக pregnentஎன்று நினைத்தேன். home pegnencytest 25-04 , 02-05, 07-05 என 3 தடவைகள் செய்து பார்த்தேன். எல்லாமே NEGATIV, 08-05 doctor இடம் போயிருந்தேன்,சரியாக எதுவும் சொல்லவில்லை.ஏனென்றால் IRREGULAR PERIOD இருந்தது.TABLETஎடுத்திருந்தேன். (1YEAR க்கு முதல் )அந்த Problem ஆகவும் இருக்கலாம் என்று சொன்னார்.அப்படியென்றால் ஏன் vormitting ,breast pain ,sickness & hungry )இருந்தது.? ஒரு வருடத்திற்கு முதல் 2 மாதத்தில் Abortion ஆகியது .அதன் பிறகு ஒழுங்கான Period ஆக இருந்தது.நான் சின்ன பொண்ணு . யாரிடம் எப்படி கேட்பது என்று எதுவுமே தெரியவில்லை.விரைவில் உங்களிடமிருந்து கட்டாயம் பயனுள்ள தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.நான் கர்ப்பமா இல்லையா? ஏன் இப்படி இருக்கிறது? யாருக்காவது இப்படி நடந்திருக்கிறதா ? please பதில் சொல்லுங்க.

ஹலோ சகி எப்படி இருக்கின்றீர்கள்? தாங்கள் கர்பிணியா இல்லையா என்று பதட்டத்துடன் இந்த பதிவைப் பதித்துள்ளீர்கள், கூடிய விரைவில் உங்கள் கனவு நினைவாக மனதார வாழ்த்துகின்றேன். என்னுடைய்ய தனிப்பட்ட அனுபவத்திலிருந்து கட்டாயம் உங்களுக்கு உதவ முடியும் என்று நம்பிக்கையில், உங்கள் கேள்வியிலிருந்தே விடையளிக்கின்றேன்.

முதலில் தாங்கள் நினைப்பதுப் போல் பொதுவாக கர்ப்பம் அடைந்தவுடன் எல்லா பெண்களுக்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் தோன்றாது. தாங்கள் குறிப்பிட்ட அறிகுறிகள் உங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

பீரியட்ஸ்ஸை வைத்து மட்டும் கர்ப்பம் தரித்துள்ளதை நம்மால் துல்லியமாக கணக்கிட முடியாது, அதிலும் உங்களுக்கு ஏற்ப்பட்டதுப் போல் மாதவிலக்கு கோளாறுகள் இருந்தால் மருத்துவரைத் தவிர நம்மால் சுத்தமாக கணக்கிடவோ, தெரிந்துக் கொள்ளவோ முடியாது.

மேலும் தாங்கள் கூறியுள்ள சிம்டம்ஸ்ஸை பார்க்கும் பொழுது இவையனைத்தும் ஒரே கர்பிணிக்கு ஏற்ப்படுமா என்று சந்தேகமாக இருக்கின்றது. ஏன்னென்றால் வாந்தி எடுப்பவர்களுக்கு பசியே தெரியாது. அதுப் போல் மார்பகங்களில் வலி, பசி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்ப்படுவது கூட, நீங்கள் கூறியுள்ள குறுகியகாலகட்டத்தில் அவ்வாறு நிகழுமா என்பது சந்தேகமே.

இந்த மாதிரியான சிம்டம்ஸ் சில நேரங்களில் மற்ற உடல் உபாதைகளினாலோ அல்லது மனபிரம்மையால் கூட நிகழக்கூடும் என்று நினைக்கின்றேன், அல்லது உண்மையாகவே நீங்கள் சந்தேகிப்பதுப் போல் நீங்கள் கர்ப்பம் தரித்திருக்கலாம்.

ஆகவே உங்களுகுள்ள சந்தேகங்களை போக்க ஒரே வழி, மருத்துவரின் ஆலோசனைப்படி கேட்டு நடப்பது தான்.அதிலும் தாங்கள் இது சம்பந்தமாக மேற்கொண்டு பதட்டமடைவதை நிறுத்திவிட்டு நிதானமாக செயல் படுவது தான், மிகச் சிறந்த பாதுகாப்பான வழி என்று கூறுவேன்.
முக்கியமாக நீங்களாக டெஸ்ட் செய்துக் கொள்வதையும் நிறுத்தி விடும்படி கேட்டுக் கொள்கின்றேன். காரணம் இதனால்கூட மனஉலைச்சல்கள் ஏற்ப்பட காரணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

நிச்சயமாக நீங்கள் ஒரு நாளைக்கு தாயாகி நல்ல ஆரோகியமான பிள்ளைகளை பெறத்தான் போகின்றீர்கள்,அந்த நல்ல செய்தியை, மருத்துவரின் மூலமாகவே கேட்டு பயனடைவீர்கள் என்று நம்புகின்றேன். தங்களுக்கு என்னுடைய பதிலில் மேலும் சந்தேகமிருந்தாலும் இதைப் போலவே தயங்காமல் கேட்கவும், அறுசுவையில் நிச்சயமாக உங்கள் எதிப்பார்ப்பும்,நம்பிக்கையும் வீண் போகாது. நன்றி.

உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி
சீக்கிரமாவே பதில் அனுப்பியிருந்திங்கள் நன்றி.
நிறைய குழப்பமாக இருப்பதால், தொடர்ந்தும்
கருத்துக்கள் எதிர்பார்க்கிறேன்.

ஹெல்லொ சகி வணக்கம்
எனக்கும் irregualar periods இருந்தது. doctor அலோசனை படி treatment எடுத்து கொண்டான் இப்போழுது எனக்கு 2வயது மகன் இருக்கிறான்.

என்னுடைய கருத்து நீங்கள் மருத்துவரை அணுகி irregular periods மற்றும் உங்களது problem என்ன என்பதை கூறி மருத்துவரின் அலோசனை படி tablet எடுத்து கொள்ளுங்கள்.

irrugular periods காரணமாக இருப்பது . hormone imbalance கருமுட்டை வளர்ச்சிக்கு தவையான ஹர்மொன் சரியான அளவு கிடைகாமல் உண்டாகிறது.
நீங்கள் பயபடுவதை விடுத்து doctor kodugum tablet எடுத்துகொண்டு கூட மனத்திற்கு இனிமையான music katpathu எப்பொழுதும் HAPPYAGA irrupathu,சத்தான உணவு எடுத்து கொள்வது, இவ்வாறு இருந்தாள் போதும்.
viraivil ningal santhosamana saithiyai katgapogirgal,vazhthugakkal.
நன்றி

உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி.

நீங்கள் கூறிய அதே பிரச்சனை எனக்கும் உள்ளது.மாதவிலக்கு சீராக இல்லாவிட்டாலும் நமது உடலின் உள்ளே நடக்கும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தானிருக்கும்.இதனால் தான் நீங்கள் கூறியுள்ள அறிகுறிகள் தென்படுகின்றன.ஆனால் உணவில் சிறிது கவனம் தேவை,ஏனெனில் அதிகம் பசி எடுக்க எடுக்க சாப்பிட்டால் நமது நிறை கூடிவிடும். சீரற்ற மாதவிலக்கோடு உடல் நிறை அதிகரித்தால் மிகவும் கடினம். எனக்கும் இதே பிரச்சினை தான் திருமணத்திற்கு முன் மருந்து எடுத்து ,சிகிச்சை முடியும் முன்னரே நாடு விட்டு வந்து ,குழந்தை பிறந்தபின் இப்போது மீண்டும் அதே பிரச்சனை.கவலை வேண்டாம்,மனதி போட்டு அலட்டி கொள்ளாதீர்கள்.வைத்தியரை ஆலோசித்து மருந்துகளை எடுங்கள்.நடப்பது நல்லதாகவே அமையும்.நானும் இதே பிரச்சனையில் மாட்டியுள்ளதால் ஆறுதல் சொல்ல முடிந்ததே அன்றி தீர்வு சொல்ல முடியவில்லை. மன்னிக்கவும்.சீக்கிரமே நல்ல செய்தி சொல்லுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

உங்களுக்கு இருக்கிற மாதிரி தான் எனக்கும் உள்ளது சகோதரி. உங்கள் எண்ணங்கள் கேள்விகள் யாவும் எனக்கு எழுதியது மாதிரியே உள்ளது. உங்களை மாதிரியே தான் எல்லாம் எனக்கும் உள்ளது, உங்களுக்கு நடந்தது போன வருடம் 2 மாதத்தில் Miscarriage, இப்போது நடப்பது எல்லாம் தங்களுக்கு நடப்பது மாதிரி. உங்கள் கேள்வியை படித்தவுடன் அதிர்ச்சியடைந்துவிட்டேன் எப்படி எனக்கு ஏற்பட்டது மாதிரி இந்த சகோதரிக்கும் நடக்கிறது நடந்து உள்ளது என்று வேதனை அடைந்தேன். என்னை மாதிரி எவ்வளவு ஆவலாகவும், ஏமாற்றம் அடைகிறீர்கள் என்பதை நான் அறிவேன். நானும் அப்படித் தான் இருக்கிறேன். எனக்கு வயது 27. மற்ற சகோதரிகள் கூறிய மாதிரி நீங்களும் கூடிய விரைவில் சந்தோசமான செய்தியை கேட்பீர்கள் என்று இறைவனை வேண்டுகிறேன். கவலைப் பட வேண்டாம் சகோதரி.

நன்றி

உங்கள் ஆலோசனைக்குக்கும் ஆறுதலான
வார்த்தைக்கும் நன்றி

நீங்கள் எழுதியவற்றை பார்த்தேன் . எனக்கும் நிறைய ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியென்றால் நான் Pregnant இல்லையா?
உங்களுக்கும் இதே பிரச்சினை இருப்பதாக கூறியிருந்தீர்கள் Doctor இடம் போயிருந்தீர்களா ? என்ன கூறினார்கள் ? (முடிந்தால் கூறுங்கள் உங்களை நான் கஷ்டப்படுத்தவில்லை ) எனக்கும் அடுத்தகிழமை தான் Doctor இடம் Appoinment
கடவுளைத்தான் மன்றாடிக்கொண்டிருக்கிறேன் எல்லாம் கடவுள் சித்தம் தானே.

நான் அடுத்த கிழமை தான் Doctor இடம் போகவுள்ளேன். போனால் தான் தெரியும்.

ok Tharani,

நீங்கள் எதிர்பார்க்கிறபடி நிகழ வாழ்த்துகிறேன்.

மேலும் சில பதிவுகள்