பிளாஸ்டிக் ஜக் (Plastic Jug)

பிளாஸ்டிக் ஜக் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களில் தண்ணிர் ஊற்றி வைத்து குடிக்க பயண்படுத்தலாமா கூடாதா?.தெரிந்தவர்கள் பதில் அளித்தால் பயண்னுள்ளதாக இருக்கும்.நன்றி.

ஹலோ பானு எப்படி இருக்கீங்க? பிளாஸ்டிக் ஜக்கில் அல்லது டம்ளர்களில் தண்ணீரை ஊற்றி வைத்து அருந்துவதில் பிரச்சனை எதுவுமிருக்காது என்று தான் என்னைப் பொருத்தவரையில் நினைக்கின்றேன். மற்றபடி தங்களுக்கு ஏன் இந்த சந்தேகம் வந்தது என்று தெரிந்துக் கொள்ளலாமா?நன்றி.

ஹலோ மனோகரி மேடம் நான் நலமாக இருக்கின்றேன், அதுப் போலவே நீங்களும் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். தாங்கள் அளித்த பதிலுக்கு மிக்க நன்றி.நாம் கடைகளில் வாங்கும் Mineral Water பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணிர் ஊற்றி அடிக்கடி குடித்தால் அதிகமாக நோய்கள் வரும் என்று ஒரு பேப்பர்ல படித்தேன். அதேபோல் பிளாஸ்டிக் ஜக்கில் சுடுதண்ணிர் ஊற்றி குடித்தாலும் நோய்கள் வரும் என்று எழுதியிருந்தது அதனால் தான் பிளாஸ்டிக் ஜக் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களில் தண்ணிர் ஊற்றி அருந்தலாமா என்று கேட்டேன்.எங்கள் வீட்டில் எப்பொழுதும் பிளாஸ்டிக் ஜக்கில் தண்ணீர் ஊற்றி வைத்து தான் அருந்துவோம் அதனால் தான் இந்த சந்தேகம் வந்தது.நன்றி.

ஹலோ டியர், பதில் எழுதியதற்க்கு நன்றி. காலியான மினரல் வாட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி வைத்து குடிக்கலாம் தவறில்லை. மேலும் பிளாஸ்டிக் ஜக்கில் அது உருகாதவரையில் சுடு தண்ணீரென்ன சூப்பே கூட ஊற்றி வைத்து குடிக்கலாம். ஆனால் ஒன்று இதுப் போன்ற செய்திகளால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்க்கு எந்த உத்திரவாதமுமில்லை என்று தான் தோன்றுகின்றது. இருந்தாலும் தொடர்ந்து இதுப் போன்ற சந்தேகத்துக்குறிய, பயனுள்ள செய்திகளை எழுதும் படி கேட்டுக் கொள்கின்றேன் நன்றி.

ஹலோ மனோகரி மேடம்,பதில் எழுதியதற்க்கு மிகக் நன்றி.கண்டிப்பாக சந்தேகத்துக்குறிய, பயனுள்ள செய்திகளை எழுதுகிறேன்.நான் படித்த மினரல் வாட்டர் பிளாஸ்டிக் பாட்டில் பற்றிய செய்தி இது. ஆங்கிலத்தில் எழுதுவதற்க்கு மன்னிக்கவும்.

Do Not Re-Use Mineral Water Bottles!

Many are unaware of poisoning caused by re-using plastic bottles.

Some of you may be in the habit of using and re-using your disposable mineral water bottles (E.g. Nestle, Bisleri, Aquafina, Kinley, Evian, etc....),keeping them in tour car or at work. Not a good idea.

It happened in Dubai, When a 12 year old girl died after a long usage ( 16 Months ) of SAFA mineral water bottle, as she used to carry the same fancy ( Painted by her self ) bottle to her school daily.

In a nutshell, the plastik (Called polyethylene terephthalate or PET ) used in these bottles contains a potentially carcinogenic element ( Something called diethylhydroxylamine or DEHA ). the bottles are safe for One-Time us only. if you must keep them longer, it should be or no more than a few days,week max, and keep them away from heat as well. Repeated wasing and rinsing can cause the plastic to break down and the carcinogens (Cancer-causing chemical agents ) can leak into the water that YOU are drinking. Better to invest in water bottles that are really meant for multiple uses.

this is not something we should be scrimping on. Those of you with family do please advise them, especially Children.

How to avoid:
Check on the bottom of the bottle there is a triangle sign and there will be a number on it.

If the number is higher than or equal to 5 --> then this bottle is safe to use.

Whatever number under 5 will release the chemical. For most bottle water, the number is 1.

Did you know chemical released by plastic water bottles can cause cancer (It is not the water that affecting you but the chemical releasing from the bottle) .நன்றி.

ஹலோ பானு, நல்ல பயனுள்ள செய்தியைத்தான் பதித்துள்ளீர்கள். ஆங்கிலத்தில் பதிக்கலாமா என்று அட்மினிடம் தான் தாங்கள் கேட்க வேண்டும். மேலும் இதுப் போன்ற ஆபத்தான விசயம் அடங்கியச் செய்தியைக் கையில் வைத்துக் கொண்டு மிகவும் இலகுவான கேள்வியாக கேள்வி எழுப்பியுருந்தீர்கள். நானும் மிகவும் எதார்த்தமாக எனது கருத்தை கூறியிருந்தேன். அதற்க்கு பதிலாக தாங்கள் நேரிடையாகவே இந்த தகவலைப் பதித்திருந்தால் அனைவருக்கும் எந்த குழப்பமும் இல்லாமல் உதவுமல்லவா.

ஆகவே தாங்கள் இனிவரும் இதுப் போன்ற செய்திகளால் தங்களுக்கு ஏற்ப்படும் சந்தேகங்களை பூர்த்தி செய்ய அதிலுள்ள சங்கதியை முதலில் எழுதி விட்டு, பிறகு அதிலுள்ள சந்தேகத்தை கேட்டீர்களானால் விடைத் தெரிந்தநேயர்கள் அதற்க்கு விடையளிக்க, அல்லது அதைப் பற்றி மேலும் கலந்துரையாடி விவரங்களை தெரிந்துக் கொள்ளவசதியாக இருக்கும். ஆகவே இதுப்போன்ற சீரியஸ்ஸான விசயங்களுக்கு வேண்டாம் இந்த கேள்வி பதில் விளையாட்டு என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். இந்த நல்ல பயனுள்ள செய்தியை எங்களுக்கு அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

ஹலோ மனோகரி மேடம்,இந்த மினரல் வாட்டர் பாட்டில் பற்றிய செய்தியை முதலிலே எழுதாதற்க்கு மன்னிக்கவும்.இந்த செய்தியை படித்து விட்டு தான் பிளாஸ்டிக் ஜக்,பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தலாமா கூடாதா என்று கேட்டேன்.பிளாஸ்டிக் ஜக்கிற்க்கு பதிலாக என்ன மாதிரி ஜக் பயன்படுத்தலாம் என்று உங்கள் ஆலோசனையை கூறுங்கள் மேடம் நன்றி.

மேலும் சில பதிவுகள்