உடல் நலம்

மனோகரி மேடம்,

தங்களது குறிப்புகள் அனைத்தும் அருமை.
நான் மிகவும் ஒல்லியாக உள்ளேன் குண்டாக எதாவது ஆலோசனை சொல்லவும்

நன்றி

ஹலோ லிங்கேஸ்வரி எப்படி இருக்கீங்க? எனது குறிப்புகளை பற்றி கருத்து கூறியதற்க்கு மிக்க நன்றி. உடல் எடையை எவ்வாறு கூட்டுவது என்று கேட்டிருக்கின்றீர்கள். அதற்க்கு நிறைய புரதச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுடன், போதுமான உடற்பயிற்சி, போதுமான ஓய்வு, இருந்தால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு எடைய்யை கூட்டிக் கொள்ளலாம்.

உணவுகள் என்று பார்த்தோமானால் பால்,தயிர், சீஸ், ஐஸ்கிரீம்,மில்க்ஷேக், மற்றும் முட்டை, கோழி,மீன், ரெட் மீட்,பீன்ஸ், பருப்புவகைகள், வேர்க்கடலை, போன்ற உணவை அதிக அளவில் தினப்படி பேலன்ஸ்ஸாக சேர்த்துக் கொள்ளலாம்.

காய்கறிகளில் நீர்சத்தான காய்களை தவிர்த்து விட்டு கிழங்குவகைகள்,பட்டாணி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். மேலும் அரிசி, பாஸ்தா போன்ற ஸ்டார்ச் அதிகமாக உள்ள உணவையும் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம்

பழங்களில் கூட வாழைப்பழம், மாம்பழம்,ஆப்பிள், பைனாப்பிள்,பேரிச்சம்பழம் போன்ற பழங்களை மட்டும் சேர்த்துக் கொண்டு ஆரஞ்சு,பெர்ரி வகைகளை தவிர்த்துவிடலாம்.

நொருக்கு தீனியைத் தவிர்த்து விடுவது நல்லது, இதனால் சாப்பிடும் பொழுது அதிக பசிஎடுத்து அதிக அளவில் உணவை எடுத்துக் கொள்ளமுடியும். மூன்று வேளை முழு உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். இதை தவிர்த்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம்.

காபி, தேநீர்,போன்ற பானங்களை தவிர்த்துவிடலாம்.
தினமும் இரவில் தூங்கச் செல்வதற்குதற்கு முன் ஒரு முழு உணவை எடுத்துக் கொண்டால் கூட நல்ல பலன் கிடைக்கும். அல்லது மிட்நையிட் மீல்ஸ்ஸாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

வாரத்திற்க்கு மூன்று நாட்களுக்கு ஏதாவதொறு உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். இரவில் குறைந்தது எட்டு மணிநேரமாவது நன்கு தூங்க வேண்டும். அத்துடன் பகலிலும் சிறிதுநேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

சுருக்கமாக கூறினால் நீங்கள் சாதாரணமாக சாப்பிடும் உணவிலிருந்து இரண்டு மடங்கு அதிகமாக எடுத்துக் கொண்டு, நல்ல ஓய்வெடுத்தாலே போதும், எடைஅதிகரித்துவிடும். அதைவிட முக்கியமானது உடல்எடையை கூட்டவும், குறைக்கவும் நினைப்பவர்கள் தங்களின் மனதை ஒருநிலை படுத்தி அமைதியாக எதையும் மேற்கொண்டாலே நினைத்ததை அடையமுடியும் என்று நம்பலாம்.

எதற்க்கும் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையையும் கேட்டுக் கொண்டு இவ்வாறு உணவை அதிகரிப்பது நல்லது என்று கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

linges

தங்களது ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. நிங்கள் கூறியது போல் உணவின் அளவை அதிகரித்தும், உடல் பயிற்சியையும் செய்து பார்க்கிறேன்.

நன்றி

linges

மேலும் சில பதிவுகள்