ஆலு பரோட்டா

தேதி: May 24, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

அறுசுவையில் நூற்று ஐம்பதுக்கும் அதிகமான குறிப்புகளை வழங்கியுள்ள <a href="experts/1377" target="_blank"> திருமதி. செய்யது கதீஜா </a> அவர்களின் தயாரிப்பு இது. அசைவம் மட்டுமல்ல, சைவத்திலும் தான் ஒரு ஸ்பெஷலிஸ்ட் என்பதை திருமதி. கதீஜா அவர்கள் நிரூபிக்கின்றார்.

 

உருளைக்கிழங்கு - 4
கோதுமை மாவு - 4 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 1
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரைத் தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் - சிறிது
கொத்தமல்லி தூள் - அரைத் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி + பரோட்டா சுடுவதற்கு


 

கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
பிசைந்த மாவின் மேலே ஒரு மூடி அல்லது ப்ளாஸ்டி ரேப்பரை போட்டு மூடி வைத்து ஊறவிடவும்.
தேவையான மசாலாத் தூள்கள் மற்றும் இதர பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை கழுவி தோலோடு குக்கரில் போட்டு, சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும். கிழங்கு வெந்ததும் தோலை நீக்கிவிட்டு நன்கு மசித்துக்கொள்ளவும்.
பின்னர் மசித்த உருளைகிழங்கில் அனைத்து தூள்களையும் சேர்த்து, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளிக்கவும்.
அத்துடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை கொட்டி நன்கு கிளறவும். மசாலா வாசனை போகும் வரை கிளறி, பின்னர் இறக்கி வைத்து ஆறவிடவும்.
பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவில் இருந்து ஒரு ஆரஞ்சு அளவு எடுத்து, கோதுமை மாவில் லேசாக தேய்த்து, பின்னர் வட்டமாக சப்பாத்திப் போல் தேய்க்கவும். அதன் மத்தியில் ஒரு கரண்டி அளவு உருளை மசாலாவை வைக்கவும்.
மசாலா கலவையை வைத்து எல்லா ஓரங்களையும் மையப்பகுதியை நோக்கி மடித்து மசாலா தெரியாதவாறு மூடவும்.
இதனை வெறும் கோதுமை மாவில் லேசாக தேய்த்துக்கொண்டு, மீண்டும் சப்பாத்திப் போல் தேய்க்கவும். இந்த முறை மிகவும் எச்சரிக்கையாக தேய்க்கவேண்டும். அழுத்தி தேய்த்தால் உள்ளே வைத்துள்ள மசாலா வெளியில் வந்துவிடும். இதேபோல் அனைத்து மாவையும் ஸ்டப்டு பரோட்டாக்களாக செய்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு தவாவை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, தேய்த்து வைத்துள்ள பரோட்டாக்களில் ஒன்றை எடுத்துப் போட்டு, தீயை குறைத்து வைத்து வேக வைக்கவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
முதலில் குறைவான தீயிலும், பின்னர் தீயை கூட்டி வைத்து சுற்றி வர எண்ணெய் ஊற்றி மேலேயும் சிறிது எண்ணெய் ஊற்றி வேகவிடவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுத்துவிடவும். இப்படியே அனைத்து பரோட்டாக்களையும் வேகவைத்து எடுக்கவும். சுவையான ஆலு பரோட்டா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹலோ மிஸஸ் செய்யத், இரண்டு பரோட்டா பார்ஸல் பிளீஸ்........, பார்த்தவுடனே புட்டு சாப்பிடவேண்டும் போல் உள்ளது.மிகவும் அழகாக மாவை உருட்டி சுவையாக செய்துக் காட்டியுள்ளீர்கள் பாராட்டுக்கள். நன்றி.

அன்புள்ள மனோஹரி மேடம் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா. உங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி எனது பரோட்டாவை பார்த்து சாப்பிடனும் போல் உள்ளது என்று சொல்லி இருக்கிறீர்கள். உங்களது சமயல் குறிப்பை பார்த்தவுடன் எனக்கு சாப்பிட ஆசையாக உள்ளது என்று தோன்றினால் உடனே செய்து பார்த்துவிடுவேன். நீங்கள் எனது குறிப்பை பார்த்து பாராட்டியது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது மிகவும் நன்றி மேடம்.

Dear madam,

Thanks for the wonderful recipe. Could you please let me know the suitable side dish for this Aloo Paratha

Thanks in Advance.....

I tried this recipe&it was very nice.

Thank u Madam.

I tried this recipe.VERY SUPERB....Thank u so much.

செய்து பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

மாவைப்பிசைவதற்கு வெந்நீர் அல்லது சாதாரண பச்சைத்தண்ணீரா பயன்படுத்த வேண்டும்????