ரவைப்பணியாரம்

தேதி: May 26, 2007

பரிமாறும் அளவு: 6 servings

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை - 200 கிராம்
மைதா - 200 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் - 5 (தூள் செய்ய வேண்டும்)
எண்ணெய் - 500 கிராம்
உப்பு - 1/2 தேக்கரண்டி


 

ரவை, மைதா, சர்க்கரை, ஏலக்காய், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த உடன் ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் விட்டு பொரித்து எடுக்க வேண்டும்.


மாவு தண்ணீர் இல்லாமல் இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஆண்டி இந்த ரவை பணியாரம் செய்து பார்த்தேன் நல்லா வந்தது ரெம்ப நன்றி எனக்கு எண்ணெய் அதிகம் குடித்தது போல் உள்ளது மாவு கரைத்ததும் ஊற்ற வேண்டுமா அல்லது ஊறவிடவேண்டுமா இல்ல நான் ஏதாவது மிஸ்டேக் பண்ணியிருக்கேனா நீங்க தான் சொல்லவும் நன்றி

ரவையை மட்டும் மூழ்களவிற்கு தண்ணீர் விட்டு 10லிருந்து 15நிமிடம் ஊறவைக்கவும். அப்போதுதான் கரைக்க வரும். மற்றவை கரைத்தவுடன் ஊற்றவும்.
சிறிது எண்ணை குடிக்கத்தான் செய்யும். றிது எண்ணை குடிக்கத்தான் செய்யும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை