குழந்தைகளின் மனக்கவலை.

அன்பு நேயர்களே, நம்மைப் போலவே பெரும்பாலான குழந்தைகள் மனக்கவலையால் அவதிப்படுகின்றார்கள் என்பதையும், அதிலிருந்து அவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்ற உணர்வு தான் இந்த தலைப்பை எழுதத் தூண்டியது.அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக நினைத்து எனது கருத்தை தொடருகின்றேன்.

குழந்தைகள் என்று பார்த்தோமானால் கைகுழந்தையல்லாமல் இரண்டு வயதிலிருந்து பதினாறு வயது வரைக் கூட கணக்கில் வைத்துக் கொள்ளலாம்.இந்த வயதில் அவர்களுக்கு வரும் மனக்கவலை முதலில் வீட்டிலிருந்தே ஆரம்பித்துவிடுகின்றது. ஆனால் எல்லாக் குழந்தைகளுக்கும் இந்தப் பிரச்சனை ஒரே மாதிரியாக தோன்றுவதில்லை. அவரவர்களின் வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு இருக்கும்.ஆகவே ஏதாவதொறு வகையில் அவர்களும் இந்தப் பிரச்சனையில் ஆழ்த்தப்பட்டு விடுகின்றார்கள். உதாரணமாக

குழந்தைகளின் பெற்றோர்களின் விவாகரத்து,
தாய் அல்லது தந்தைய்யை விட்டு பிரிந்து வாழ்வது,
பெற்றோர்கள் உறவினர்களிடம் சண்டைப் போடுவது,
கூடப் பிறந்தவர்களால் பிரச்சனை,
மிகவும் பிடித்தமான குடும்ப நபரின் அகால மரணம்,
வீட்டுச் செல்லப் பிராணிகள் இறப்பது அல்லது காணாமல் போய்விடுவது,
அம்மா வேலைக்கு போவது,
புதியதாக, வாழும் சூழ்நிலையின் இட மாற்றம், இதனால் பழகிய நண்பர்களை பிரிவது,
புதிய பள்ளிகூடத்தில் சேர்ந்து படிப்பது,
தினமும் வீட்டுப் பாடம் செய்வது,
விளையாட்டிலோ அல்லது படிப்பிலோ பரிசு வாங்க உழைப்பது,
பெற்றொரின் கருத்துக்கு ஒத்துப் போகமுடியாமல் தவிப்பது,என்று இன்னும் இதுப்போன்ற பலவிதமான மன அழுத்தத்திலிருந்து குழந்தைகளின் மனநிலை பாதிக்கபடாமல், ஆரோகியமாக வாழும் சூழ்நிலைய்யை பெற்றோர்கள், அவர்களிடம் தென்படும் அறிகுறியிலிருந்து கண்டுக்கொண்டு மிக எளிதாக உதவ முடியும் என்று கருதுகின்றேன்.

அறிகுறிகள் என்று பார்த்தால் உதாரணமாக:
குழந்தைகள் காரணமே இல்லாமல் அழுது எதர்க்கெடுத்தாலும் அழுது அடம்பிடிப்பார்கள்.
தூங்கும் பொழுது படுக்கையில் சிறுநீர்க் கழிப்பார்கள்.
கட்டைவிரலை சூப்புவது, நகம் கடிப்பது.
இல்லாத உடல் உபாதைகளை கூறி பெற்றோரின் கவனத்தை பெற முயல்வது.
பள்ளிகூடம் செல்ல மறுப்பது,
பொய் பேசுவது, மாணவர்களிடமிருந்து பொருட்களைத் திருடுவது,
சக மாணவர்களிடம் சண்டை வர காரணமாயிருப்பது, என்று இன்னும் இதுப்போன்ற ஏதாவது ஒரு அறிகுறி தென்பட்டால் கூட அது அவர்களின் மன நோய்க்கான அறிகுறி என்று கருதலாம்.

இதுப் போன்ற அறிகுறிகள் உடைய பெரும்பாலான குழந்தைகள் வளர வளர மாறிவிடுவார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் பெற்றோர்கள் அதை கவனித்து அவர்களை சரியாக வழிநடத்தாவிட்டால் இந்த அறிகுறிகள் குறைய வாய்ப்பில்லாமல் அதிக அளவில் கூட அதிகரித்து குழந்தைகளின் வாழ்க்கையைக் கூட பாழாக்கி விடும்.இதிலிருந்து குழந்தைகளை அன்பான முறையில் அணுகினாலே பிரச்சனைகள் குறைந்து விடும்.அப்படி முடியாவிட்டால் அதற்குரிய மருத்துவரின் உதவியை நாடியாவது குழந்தையின் மனக்கவலையை போக்க வழிவகைச் செய்ய வேண்டும்.முதலில் பெற்றோரின் பங்கு என்னவென்று ஆராய்ந்துப் பார்த்தோமானால்,

பொதுவாக எல்லாக் குழந்தைகளும் மிகவும் மென்மையான மனச் சுபாவம் கொண்டவர்கள். ஆகவே குழந்தைகளை எக்காரணம் கொண்டும் கடின வார்த்தைகளால் பேசக்கூடாது.
பெற்றோர்கள் நல்ல ரோல்மாடலாக இருக்க வேண்டிய அவசியமில்லை, காரணம் என்னைப் பொருத்தவரையில் குழந்தைகள் பெற்றோர்களின் நடத்தையைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் பெற்றோரின் அன்பான பேச்சும்,ஆதரவான அணுகு முறைய்யைத்தான் அதிகமாக எதிர் பார்ப்பார்கள்.

பெற்றோர்கள் இந்த அவசரமான வாழ்க்கை சூழ்நிலையில் கூட தங்களுக்குள்ள பிரச்சனைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, குழந்தைகளிடம் பேசுவதற்க்கென்றே நேரத்தை ஒதுக்க வேண்டும். அவர்கள் கூறுவதை ஆர்வத்துடன் கேட்டாலே குழந்தைகளுக்கு பாதி மனநோய் குறைந்துவிடும்.

சில குழந்தைகளுக்கு சில பாடங்களைப் பயில கஷ்டப் படுவார்கள், இந்த சந்தர்பத்தில் பெற்றோர்கள் அதைப் பற்றி அதிகம் பேசாமல் மற்ற பாடங்களில் அவர்களுக்குள்ள ஆர்வத்தைப் பாராட்ட வேண்டும். இதனால் குழந்தைகளுகுள்ள மனக்கவலை குறைந்து கடினமான பாடத்தைக் கூட சுயமுயர்ச்சியால் கற்றுக் கொள்ள வாய்ப்பை நாம் வழங்கிவிடுவோம்.

பொதுவாக குழந்தைகள் அவர்களின் பிரச்சனைகளை அவர்களாகவே சரிசெய்துக் கொள்வார்கள். இதனால் தான் சில நேரங்களில் பெற்றோர்களிடம் அதைப் பற்றி பேசப் பிடிக்காமல் ஒதுங்கிவிடுவார்கள்.அந்தச் சந்தர்பங்களில் பெற்றோர்கள் திரும்ப திரும்ப கேட்டு தொந்தரவுச் செய்யாமல் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் செயல்பட வேண்டும். உதாரணமாக சினிமாவுக்கு அழைத்துச் செல்வது, ஹோட்டலுக்கு கூட்டிச் செல்வது, கடைகளுக்கு அழைத்துச் சென்று ஏதாவது புதிய பொருட்களை வாங்கி தருவதுப் போன்ற அவர்களுக்கு பிடித்த விசயங்களைச் செய்வதால் அவர்களின் மனநிலை பழையபடிக்கு வந்து விடும் என்பதில் சந்தேகமேயிருக்காது.

முக்கியமாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்கள் சுபாவங்களான கோபப்படுவது, பயப்படுவது, கவலைப்
படுவது, போன்ற உணர்வுகளால் தாழ்வுணர்ச்சி வராமல் இருக்க பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு சொல்லிதர வேண்டும்.கோபப்படுவது கூட தப்பில்லை என்று புரிய வைக்க வேண்டும்.மேலும் குழந்தைகள் ஏன் கோபமடைகின்றார்கள், ஏன் பயப்படுகின்றார்கள், ஏன் கவலைப் படுகின்றார்கள் என்று கேட்டறிந்துக் கொண்டு அதிலிருந்து அவர்களை விடுவிக்க முயற்ச்சி செய்யவேண்டும். அதற்க்கு பதிலாக அவர்களின் சுபாவங்களை மாற்ற முயற்ச்சி செய்வது பலனளிக்காது.

குழந்தைகளை சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள், அவர்களை மரியாதையுடன் நடத்தி வளக்க வேண்டும். இதனால் கூட குழந்தைகள் சுய மரியாதையை வளர்த்துக் கொண்டு, பிற்காலத்தில் அவர்களுக்கு மனநோய் வர வாய்ப்பிருக்காது என்று நினைக்கின்றேன். இவைகள் எல்லாமே சாத்தியமாக பெற்றோரின் கையில் தான் உள்ளது.ஆக எந்த சூழ்நிலையையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அவர்களின் சரியான அணுகு முறையினால், அதை குழந்தைகளுக்கு சாதகமாக்கிவிடலாம் என்பது என் கருத்து.

ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளிடம் ஏற்ப்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து அவர்களை கவனமாக அதே நேரத்தில் மிகவும் பாசத்தோடு அரவணைத்து நடத்திச் செல்ல வேண்டும்.ஏனென்றால் குழந்தையின் மனநோய்க்கு பெற்றோரின் அன்பைத் தவிர வேறோரு சக்திவாய்ந்த மருந்து உலகத்தில் கிடையாது என்று, எனது கருத்தை கூறி முடிக்கின்றேன். இந்த விசயத்தைக் குறித்து பெற்றோர்கள் மேலும் கலந்துரையாடி தங்கள் கருத்தைக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்,நன்றி.

Dear VaniRamesh
தங்களின் ஆலோசனைக்கு நன்றி.இதை ஏற்கனவே try பண்ணி பார்த்து விட்டோம்.மீண்டும் try பண்ணி பார்க்கிறேன்.தங்களின் விரிவான பதிலுக்கு மீண்டும் நன்றி.

ஹலோ ரோஸ்மேரி எப்படி இருக்கின்றீர்கள்? தங்களின் பதிவைப் பார்த்தேன். தங்கள் குழந்தையின் செயல்களைக் குறித்து பல வழிகளில் முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை அறிந்து தங்களுக்கு என்னால் முடிந்த ஆலோசனைகளைக் கூறலாம் என்று நினைக்கின்றேன். அதாவது வாழ்க்கையில் பெரியவர்களுக்கு இருக்கும் வெறுப்பு சளிப்புகள், குழந்தைகளுக்கும் அவர்களின் வாழ்க்கையிலும் இருக்கும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.அப்பொழுது தான் குழந்தைகளை கையாள எளிதாக இருக்கும்.

பொதுவாக குழந்தைகள் அவர்களுக்கு வெறுப்பு ஏற்ப்படும் பொழுது அதை அவர்கள் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துவார்கள். அதில் ஒன்று தான் தேவையிலாமல் எதையாவதுக் கேட்டு அடம்பிடித்து அழுவதுப் போன்ற குணம்.
இந்த செயல்களை தடுக்கவேண்டுமென்றால் ஒன்று அந்த நேரத்தில் அவர்களிடம் வாதம் செய்யாமல் நிராகரிப்பது, அல்லது full attention கொடுப்பது.
அதாவது குழந்தையின் பிரச்சனை என்ன என்பதை முழுமனதோடு கேட்க வேண்டும். பிறகு அதற்குரிய நடவடிக்கையை அப்பொழுதே எடுக்க வேண்டும்.அவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை நாம் தள்ளிப் போடுவதால் தான் இதுப் போன்ற செயல்கள் ஏற்படுகின்றது என்று தான் கூறுவேன்.அப்படி காரணமே இல்லாமல் செயல்கள் இருந்தால் காரியத்தில் இறங்குங்கள்.

அதாவது அவர் வீட்டிலும் சரி வெளியிலும் சரி தங்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் என்னென்ன செயல்கள் புரிகின்றார் என்று பட்டியல் போடுங்கள்.உதாரணமாக நீங்கள் கூறியுள்ளதுப் போல் விளையாட்டுச் சாமான்களையே எடுத்துக் கொள்ளலாம். அந்த செயலை மாற்றுவது சற்று கடினம் தான்,ஆனால் திசை திருப்பி விடலாம் எப்படி என்றால்,

அதாவது கடைக்கு செல்வதற்கு முன்பு யார்யாருக்கு என்ன வேண்டும் என்று பட்டியல் போடுங்கள், அதில் குழந்தையின் பெயரையும் எழுதி அவருக்கு என்ன வேண்டும் என்று அவரையே கேட்டு எழுதி எடுத்துச் செல்லுங்கள். பிறகு பட்டியலில் என்ன இருக்கின்றதோ அதையே கடைப் பிடித்து அவரின் உதவியுடன் வாங்குங்கள், அதாவது ஷாப்பிங்கில் அவரை மட்டும் பங்குப் பெறச் செய்யுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது அவரின் கவனம் மற்ற விசயங்களில் கவனம் செல்வதால் இப்படி வேண்டாத பொருட்களை வாங்கி குவிக்கும் பழக்கம் நாளடைவில் குறையும் என்று நம்பலாம்.

அதைப் போலவே சில சந்தர்பங்களின் குழந்தைகளுக்கு பிடிவாத குணம் தோன்றி அவர்களுக்கு வேண்டியதை வாங்க அடம்பிடிக்கும் பொழுது வேண்டாம் என்று கூறுவதற்கு பதிலாக அமைதியாக இருந்து விட்டால் சில வேளைகளில் அவர்களுக்கே குழப்பம் ஏற்பட்டு அதை எடுத்த இடத்திலேயே வைத்து விடுவார்கள். அல்லது நீங்களே கூட கேஷியரிடத்தில் அந்த பொருளை நீக்கிவிடலாம். இவ்வாறு செய்வதால் கூட குழந்தையிடம் விவாதிக்காமல் இருக்க நேரிடும்.

முக்கியமாக குழந்தையின் செயல்களுக்கு எதிர்ப்பு காட்டாமல் இருப்பது தான் நல்லது. காரணம் குழந்தைகள் ஏமாற்றத்தை விரும்புவதில்லை, அதேப் போல் அவர்களின் செயல்களில் மாற்றத்தையும் விரும்ப மாட்டார்கள், ஆனால் அவர்களின் செயல்களை கண்டுக் கொள்ளாமல் அதன் காரணங்களை மட்டும் நாம் கவனித்தால் பிரச்சனைகள் குறையும்.

அதேப்போல் ஹோட்டல்கள், போன்ற வெளியிடங்களில் அவரை சுதந்திரமாகவே இருக்க விடுங்கள். ஒழுக்கம், கட்டுப்பாடு, மாற்றம், இதுவெல்லாம் குழந்தைகளுக்கு தேவையில்லாத ஒன்று என்றே கருதுகின்றேன்.நல்ல பழக்க வழக்கம் என்று எதை கூறுகின்றீர்கள் என்று தெரியவில்லை. என்னைப் பொருத்தவரையில் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்கள் என்று எதுவும் கிடையாது. வீட்டில் பெற்றோர்களின் செயல்கள் மற்றும் அவர்களிடம் நம்முடைய அணுகுமுறை எப்படி உள்ளதோ அதைப் பொருத்து தான் அவர்களின் வளர்ச்சியும் இருக்கும்.
ஆகவே நான் உங்களுக்கு கூறும் ஆலோசனை என்னவென்றால் :
1.குழந்தையிடம் புத்திமதி கூறுவது போன்ற போதனைகள் இருந்தால் அதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
2.அதைப்போல் கேள்விகள் கேட்டு பதிலை வாங்கும் முயற்ச்சியையும் கைவிட்டு விடுங்கள்.
3.முக்கியமாக நீங்கள் உங்கள் குழந்தைக்கு சொல்லித்தர வேண்டியது sorry & thankyou. இவை இரண்டும் தான். இந்த வார்த்தைகளை எந்தெந்த தருனங்களில் பயன்படுத்த வேண்டும் என்று மட்டும் சொல்லிக் கொடுத்து விட்டால் போதும், நீங்கள் எதிர்ப்பார்க்கும் அனைத்து நல்ல பழக்க வழக்கங்கள் தானாக வந்துவிடும்.
4.குழந்தையை ஆசையாக கொஞ்சுவதோடு தாயின் கடமை முடிந்துவிடவில்லை. அவர்கள் எதை செய்தாலும் good job, good choice, good for you போன்று அவரின் செயல்களை உற்சாகப் படுத்துங்கள்.அந்த சந்தர்பத்தையும் நீங்களாகவே ஏற்படுத்துங்கள்.
5.குழந்தையிடம் நாங்கள் எதுவும் எதிர் பார்க்கவில்லை என்ற கருத்தை மாற்றி, குழந்தையின் மீது நம்பிக்கை வைக்க பழகுங்கள். அப்பொழுது தான் அதே வகையில் உங்களின் உணர்வுகளும் பாஸிட்டிவான முறையில் வெளிப்படும்.
6.பிறர்கு கொடுத்து மகிழ்வதையும் கற்று தாருங்கள். வீட்டில் அதிகப்படியான விளையாட்டுச் சாமானகளில் சிலவும், குழந்தையின் துணிமணிகள் சிலவும்,பிஸ்கட்டுகள் போன்று உங்கள் குழந்தைக்கு பிடிக்கும் பொருட்களை பையில் போட்டு குழந்தையையும் அழைத்துச் சென்று ஏழைக்குழந்தைகளுக்கு தானம் செய்வதை செயல் படுத்தி காட்டுங்கள்.காரணம் இந்த குழந்தைப் பருவத்தில் நாம் கற்று தரும் எந்த விசயமும் அவர்கள் மனத்தில் பசுமரத்தாணிப் போல் பதிந்து, அவர்களின் வாழ்க்கையில் நன்மை பயக்கும் என்று நம்பலாம்.

இதுப் போன்று பல வழிகளில் அவரின் குணதிசயத்தை திசை திருப்பி விட்டால் அதனால் மேற்க்கொண்டு எந்த பிரச்சனைகளும் எழாமல் தடுத்து விடலாம் என்று கருதுகின்றேன்.மேலும் தங்களுக்கு இந்த ஆலோசனைகள் நிச்சயமாக பயன்பட வேண்டும் என்று நம்புகின்றேன். இதுக் குறித்து தங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தால் தயங்காமல் கேட்கவும்.இன்னும் விளக்கமாகக் கூட விவரிக்கின்றேன்.நன்றி.

Dear Manohari,
தங்களின் விரிவான விளக்கத்திற்கு முதலில் என்னுடைய நன்றி.யாரோ ஒருவருக்கு உங்களின் அக்கரையான பதில்கள் எனது மனதை தொடுகிறது.உங்களின் சில கருத்துக்கள் எனக்கு புரியவில்லை.1.வெளியில் செல்லும் பொழுது கட்டுப்படுத்த வேண்டாம்.
சப்தமாக பேசுவது,table manners தெரியாமல் இருப்பது,மற்றவர்கள் சாப்பிடுவதை பார்ப்பது இது போன்ற செயல்களை எப்படி திருத்தாமல் இருக்க முடியும்?இவற்றை நாம் தானே சொல்லி கொடுக்க வேண்டும்?
2.புத்திமதி சொல்வது.
பிள்ளைகளை அடிக்காமல் புரியவைப்பது தான் சரி என நான் நினைத்து கொண்டு இருக்கிறேன்.புத்திமதிகள் சொல்லாமல் எப்படி அவர்களை நல்வழி படுத்துவது?எல்லாவற்றிலும் அவர்கள் செய்வது சரியாக இருப்பதில்லையே?குழந்தைகளிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை என நான் குறிப்பிடுவது அதிகமாக ஆசைபடுவது.எல்லாவற்றிலும் ஜெயிக்க வேண்டும் என நினைபதை விட அவனுக்கு முடிந்ததை சாதிக்கட்டும் என நினைக்கிறேன்.
முடிந்தால் விளக்கங்கள் கொடுக்கவும்.

ஹலோ ரோஸ்மேரி எப்படி இருக்கீங்க? "யாரோ ஒருவருக்கு உங்களின் அக்கரையான பதில்கள் எனது மனதை தொடுகிறது". என்று எழுதியிருந்தீர்கள். நன்றி. என்னைப்பொருத்தவரையில் அறுசுவை குடும்பத்தை யாரோ என்று நான் ஒருபோதும் கருதியதில்லை என்பது தான் உண்மை.ஆகவே தான் மன்றத்தில் எல்லோரிடமும் மனம் திறந்து உரையாடுகின்றேன்.அந்த சந்தர்பத்திற்கு அறுசுவைக்கும், அறுசுவை நேயர்களுக்கும் தான் நான் நன்றி கூறுவேன்.

ஒகே இனி உங்கள் பதிவிலுள்ள சந்தேகங்களைப் பார்க்கலாம். முதலில் உங்களுக்கு நன்றி கூற வேண்டும் காரணம் குழந்தைகளை அடிக்காமல் புரியவைப்பது தான் சரி என்ற தங்களின் கருத்து மிகவும் பாராட்டப்பட வேண்டிய கருத்து என்று கூறுவேன்.

அதே நேரத்தில் குழந்தையிடம் அதிகமாக எதிர் பார்க்கவில்லை, எல்லாவற்றிலும் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைபடவில்லை போன்ற கருத்துக்களை நான் மறுக்கின்றேன். காரணம் பெற்றோர்கள் தங்கள் குழந்தகளின் சாதனைகளைப் பற்றி கணவுக் காணவேண்டும்,எதிர் பார்க்க வேண்டும். ஆனால் அவர்களின் எதிர் பார்ப்பை குழந்தைகளின் மீது திணிப்பது தான் தவறு என்று கருதுகின்றேன். மேலும் நீங்கள் கூறியிருப்பதுப் போல் அவருக்கு முடிந்ததை சாதிக்கட்டும் என்பது உங்கள் குழந்தையின் மீது தங்களுக்குள்ள அவ நம்பிக்கையைக் காட்டுகின்றது.கோபப்பட வேண்டாம் எதற்கு கூறுகின்றேன் என்றால், தங்களின் இந்த மனப்போக்கு, அதேப் போல் தான் குழந்தையிடமும் வெளிப்படும் என்பதால் குழந்தையின் நலன் கருதி சற்று கடுமையாக குறிப்பிட்டேன் மன்னிக்கவும்.

இருந்தாலும் எனது கருத்து என்னவென்றால்
தயவுச் செய்து தங்களின் குழந்தையைப் பற்றிய கருத்தை மாற்றிக் கொண்டு "என் பிள்ளை எல்லா வற்றிலும் சிறந்து விளங்க வேண்டும்" என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.அந்த உயர்ந்த மனப்பான்மை கூட உங்கள் குழந்தையின் நல்வாழ்க்கைக்குத் தேவை என்று தாங்கள் நம்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

குழந்தைகளுக்கு நல்லது கெட்டதை, சொல்லிக் கொடுப்பது பெற்றோரின் தலையாயக் கடமை அதில் எந்த வித மாற்றமுமில்லை. ஆனால் எப்படி சொல்லிக் கொடுப்பது என்ற முறையில் தான் கவனம் தேவை என்பது தான் எனது கருத்து. அதாவது அறிவுரைகள், ஆலோசனைகள் போன்ற விசயங்கள் குழந்தைகளுக்கு புரியாது, அதற்கு பதில் எதையும் கற்று கொடுத்தால் சட்டென்று பிடித்துக் கொள்வார்கள் என்று கருதுகின்றேன்.

தாங்கள் கூறிப்பிட்டுள்ளதுப் போல் வெளியில் செல்லும் பொழுதும், சப்தமாக பேசுவது, டேபிள் மேனர்ஸ்,மற்றவர்கள் சாப்பிடுவது பார்ப்பது போன்றவைகளையே, நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

வெளியில் போகும் பொழுது கட்டுப் படுத்தக் கூடாது என்று ஏன் கூறினேன் என்றால், வெளியில் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை வெளியில் சொல்லிக் கொடுக்காமல் வீட்டில் இருக்கும் பொழுது கற்றுத் தருவது தான் நல்ல பலனைத் தரும் என்று நம்புகின்றேன். வெளியில் கிளம்புவதற்கு முன்பு கூறுவதை விட வீட்டில் சாவகாசமாக இருக்கும் பொழுது, வெளியில் எப்படி நடந்துக் கொள்வது நல்லது என்பதை அந்த சூழ்நிலையில் இல்லாத பொழுது கற்றுக் கொடுத்தால் குழந்தைகளுக்கு அதைப் பின்பற்றுவதற்கு எளிதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

பிறகு சத்தமாக பேசுவதை குழந்தைகள் மட்டுமல்ல நாம் எல்லோருமே அதை விரும்புவதில்லை. அதிலும் குழந்தைகள் பூவைப் போன்ற மென்மையானவர்கள்.அவர்களுக்கு பெரியவர்களின் அன்பும் அரவணைப்பும் மட்டும் தான் தேவை. இவை இரண்டும் அவர்கள் தவறு செய்யும் பொழுது தான் அதிகம் தேவைபடுகின்றது.ஆகவே எந்த தருணத்திலும் நம்முடைய கோபத்தை கட்டுப் படுத்தி நாம் சாந்தமாக பேசினால், அவர்களும் அதை நாளடைவில் பின்பற்றுவார்கள் என்று நம்ப வேண்டும்.

அடுத்ததாக Table manners ஸை கட்டாயம் பிள்ளைகளுக்கு கற்று தருவது பெற்றோரின் கடமை, ஆனால் அதற்கும் ஹோட்டலில் சாப்பிடுவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கருதுகின்றேன். ஆகவே அதை குழந்தைகளுக்கு, வெளியில் சென்று சாப்பிடும் தருனத்தில் சொல்லிக் கொடுப்பதற்கு பதில் அதை சாதாரணமாக வீட்டில் கற்று தரலாம். மேசையில் எவ்வாறு அமர வேண்டும், எவ்வாறு சாப்பிட வேண்டும், பேசிகொண்டு சாப்பிட கூடாது, வாயத் திறந்து சாப்பிட கூடாது, வாயில் ஒலி எழுப்பி சாப்பிடக் கூடாது, கரண்டிய எவ்வாறு பிடித்து சாப்பிட வேண்டும், சாப்பிட்ட பிறகு மற்றவர்களுக்காக காத்திருப்பது, பிடிக்காத உணவைப் பற்றி பேசாமல் இருப்பது, இப்படி எவ்வளவோ இருக்கின்றது இதை எல்லாம் மேசையில் அமர்ந்துக் கொண்டு சொல்லித்தர முடியாது. ஆகவே இதற்கென்று நேரத்தை ஒதுக்கிக் கொண்டு குழந்தைக்கு வீட்டில் இருக்கும் பொழுது சொல்லிக் கொடுங்கள்.

மேலும் குழந்தைகள் மற்றவர்கள் சாப்பிடுவதை வேடிக்கைப் பார்ப்பதை பற்றி குற்றிப்பிட்டுள்ளீர்கள். அதற்கு எனது சிறு வயது அனுபவத்தைப் பற்றி கூறுகின்றேன். மாதத்தின் ஒவ்வொறு முதல் சன்டே அன்று கட்டாயம் ஹோட்டலுக்கு எங்களை அம்மா அழைத்துச் செல்வது வழக்கம். நானும் எனது தம்பியும் எங்களுக்கு பிடித்ததை ஆடர் செய்துவிடுவோம். ஆனால் என்னுடைய அண்ணன் ஹோட்டலில் சாப்பிடுவரனைவரையும் நோட்டமிட்டு அதில் தனக்கு பிடித்ததை கேட்பார், என் அம்மாவும் சர்வரை அழைத்து என் அண்ணன் குறிப்பிட்டுள்ள டேபிளை சுட்டிக் காட்டி ஆர்டர் செய்வார். மீண்டும் அம்மா வேறு ஏதாவது வேண்டுமா என்று கேட்பார்கள், மீண்டும் அதே நிலை.சில நேரங்களில் எழுந்து நின்றுக் கொண்டு, அதோ அந்த மாதிரி போண்டா வேண்டும் என்று அதை சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் திடுக்கிடும் வகையில் கைகாட்டி கூறுவார். எனக்கும் என் தம்பிக்கும் என் அண்ணனின் செயல் கூச்சமாக இருக்கும். ஆனால் அம்மா அதையெல்லாம் கண்டுக் கொள்ளவே மாட்டார்கள்.குழந்தைகளின் மகிழ்ச்சியில் மட்டும் தான் கவனமாயிருப்பார்கள். இப்பொழுதும் அடிக்கடி என் அண்ணனின் இந்த செயல்களை கூறி சிரிப்போம்.ஆகவே குழந்தைகளின் சிறு சிறு விசயங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண் டிருப்பதில் பயனில்லை.நாமும் அவர்களோடு சேர்ந்து கொண்டு விளையாடுவதிலும் தவறில்லை என்றே கருதுகின்றேன்.

சில பெற்றோர்களைப் பார்த்திருக்கின்றேன், பிக்னிக் வந்தால் கூட எந்த நேரமும் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வதிலேயே குறியாயிருப்பார்கள், இதனால் குழந்தைகளாலும் சந்தோசத்தை அனுபவிக்க முடியாது, பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியான சூழ்நிலை இருந்தும் தங்கள் அறியாமையால் குழந்தைகளின் செயகளை எல்லாம் பெரிதாக எண்ணி உல்லாசப் பயணத்தின் சந்தோசத்தையே பாழடித்து விடுவார்கள்.ஆசையாக சாப்பிட ஐஸ் கிரீமைக் கேட்டால் கூட அந்த நேரத்திலும் குடும்ப பட்ஜட்டைப் பற்றி குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவார்கள்.அதற்கு பதில் பையில் காசு இல்லை என்று கூறிவிடலாமல்லவா.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, வீடு தான் அவர்களின் Training centre. அதன் தலைமை ஆசிரியர் தான் அம்மா. குழந்தைக்கு தேவையான நல்ல பழக்கங்கள் என்று நீங்கள் கருதுவதைப் பட்டியல் போட்டுக் கொண்டு கற்றுக் கொடுங்கள்.நல்ல நீதி நெறி கதைகளின் மூலமாக வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தும் சொல்லி கொடுக்க முடியும் என்று நம்புகின்றேன்.அதற்காக சமையம் கிடைக்கும் பொழுதெல்லாம் குழந்தைக்கு அறிவை சொல்லித்தருகின்றேன் என்று கருதாமல் அதற்கென்று ஒரு நேரத்தை ஒதுக்கி, அதன் பிறகு குழந்தையை எப்பொழுதும் சுதந்திரமாக இருக்க அனுமதிப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என்று நினைக்கின்றேன்.

என்னைப் பொருத்தவரையில்,பெற்றோர்கள் குழந்தைகளின் செயல்களைப் பார்த்து வருத்தபடுவதோ, அதைக் கொண்டு அவர்களை திருத்த நினைப்பதோ எல்லாம் வீணான வேலை.காரணம் தவறு செய்தோம் என்று உணர்ந்தவர்களால் மட்டும் தான் திருந்த முடியும். ஆனால் குழந்தைகள்,தாங்கள் என்னச் செய்கின்றோம் என்று திட்டமிட்டு அவர்கள் எதையும் செய்வதில்லை.பொதுவாக குழந்தைகள் செய்யும் எந்த செயலிலும் சரியா, தவறா பார்ப்பதிலும் பயனில்லை என்றே கருதுகின்றேன்.ஆகவே அவர்களுக்கு பொதுவாக என்னென்ன விசயங்களை கடைப் பிடிப்பது அவர்களின் வாழ்க்கைக்கு நல்லது, என்று மட்டும் கருத்தில் கொண்டு, கற்று கொடுத்து வழிநடத்தி செல்வது தான் ஆரோகியமான குழந்தை வளர்ப்பு என்பது என் கருத்து. இது சம்பந்தமாகவேறு ஏதாவது சந்தேகமிருந்தாலும் தயங்காமல் கேட்கவும். நன்றி டியர்.

Hi Manohari
எல்லவற்றிற்கும் அருமையான விளக்கங்கள்.உங்களின் ஆலோசனைகள் பல எனக்கு உதவுகிறது.Thankyou so much.

hi.
From last 2years v r in australia.my daughter is 10 years old. but till she has BEDWETTING problem.no use with the doctors treatment.
PLEASE GIVE ME ANY IDEAS.thank u.

ஹலோ வித்யா எப்படி இருக்கின்றீர்கள். தங்களின் குழந்தையின் பிரச்சனையைக் குறித்து எழுதியுள்ளீர்கள். பொதுவாக ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவும், அதிக காலமும் நீடிக்கும்.மேலும் குழந்தையின் உடல் வளர்ச்சியைப் பொருத்து நாளடைவில் இந்தப் பிரச்சனை சரியாகி விடும் கவலை வேண்டாம்.

பெரும்பாலான குழந்தைகளின் உடல் உள் உறுப்புகளின் வளர்ச்சியில்,முக்கியமாக சிறு நீரகப் பையின் வளர்ச்சி மிகவும் மெதுவாக நடைப்பெறுவதால் இவ்வாறான பிரச்சனை ஏற்படுகின்றது. சிறிநீரகத்தின் அளவைத் தாங்கும் சக்தி குறைவாக இருப்பதினால் அவை கட்டுப்பாடில்லாமல் வெளியேறி விடுகின்றது.நீங்கள் இதைப் பெரிது படுத்தாமல் இருந்து விடுவது அவரின் மன நிலைக்கு நல்லது.

இந்த பிரச்சனை இருக்கின்றது என்பதனால் குடிக்கும் தண்ணீரின் அளவைக் குறைக்க கூடாது. இவை வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.நடுஇரவில் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கூறினால் தடை செய்ய வேண்டாம். ஆனல் அளவை மிகக் குறைவாக அருந்தச் செய்யுங்கள்.

தினமும் இரவு உணவருந்தும் போது சாதாரணமாக குடிக்கும் அளவில் தண்ணீர் குடிக்கச் சொல்லவும். பிறகு உறங்கப் போவதற்கு முன்பாக இரண்டு முறை சிறுநீர் கழிக்குமாரு கூறவும். அதன் பிறகு நடு இரவில் எழுப்பி ஒரு முறையும், மூன்று மணியளவில் ஒரு முறையும் எழுப்பு போகச் சொல்லவும்.

இவ்வாறு செய்ய ஒரு பத்து பதினைந்து நாளைக்காவது தொடர்ந்து உதவிப் புரியுங்கள். பிறகு அது பழக்கமாகி அதன் பலனை நன்கு உணரும் பொழுது அவர்களாகவே எழுந்து பாத்ரூம் போக ஆரம்பித்து விடுவார்கள். அது வரை உங்களின் தீவிர ஒத்துழைப்பு குழந்தைக்கு தேவை.

குழந்தையிடம் எந்த நேரமும் அதைப் பற்றியே பேச வேண்டாம்.மற்றவர்களுடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம். அதற்கு பதிலாக urinery Bladder ரை எப்பொழுதும் காலியாக வைத்திருக்கும்படி ஆக்கப்பூர்வமாக அவர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்து கூறுவது கூட அவர்களின் மன நிலைக்கு உதவும்.

குழந்தைக்கு இதனால் மனதிற்குள் எவ்வளவு வேதனை இருக்கும் என்று நீங்கள் எப்பொழுதும் கருத்தில் வைத்திருக்க வேண்டும். உங்களை விட உங்கள் குழந்தைக்கு தான் அதிக சப்போர்ட் தேவை.ஆகவே இதைப் பற்றி வீட்டில் பேசாமல் இருப்பதே நீங்கள் தரும் மிகப் பெரிய சப்போர்ட் ஆகும்.

இரவில் எழுப்பிவிட மிகவும் சிரமமாக இருக்கும், ஆனால் என்னச் செய்வது நம்முடைய கடமை இவ்வாறு இருந்தால் அதை நாம் தானே செய்ய வேண்டும். இவ்வளவு காலம் நீங்கள் செய்து வந்த கடமையை பாராட்டுகின்றேன். இன்னும் கொஞ்சக் காலம் தான். சரியாகி விடும்.

குழந்தை பூப்பெய்துவதற்குள் நிச்சயம் இந்த பிரச்சனை சரியாகிவிடும் என்று நான் தங்களுக்கு உறுதியளிக்கின்றேன். இவ்வாறான குழந்தைகள் அவ்வளவுச் சீக்கிரத்தில் பூப்பெய்து விட மாட்டார்கள், ஆகவே கவலையை மறந்து குழந்தையுடன் சந்தோசமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

காலமும்,நேரமும் அனுமதி தந்தால் ஒரு பத்து நாளைக்கு, அல்லது அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ளுகள்.அங்கு இதைப் பற்றி எதுவும் பேசாமல் நான் கூறியுள்ளவாறு follow செய்யுங்கள். புதிய இடமாற்றம் கூட இந்த பிரச்சனைக்கு உதவும். அவர்களின் மன நிலைக்கு கூட ஒரு மாற்றம் இருக்கும்.நன்றி.

மிக்க நன்றி மனோகரி மேடம். தங்களின் பதில் எனக்கு மிகவும் ஆருதலாக இருந்தது. உங்களின் அறிவுறைகளை கண்டிப்பாக பின்பற்றி RESULT சொல்கிறேன்.

அனைவருக்கும் வணக்கம்.
இந்தியாவில் இப்போது கல்வி தரம் மிக உயர்ந்து விட்டது. அங்கு 2,3 வது படிக்கும் மாணவர்கள் படிப்பதை அயல் நாட்டில் இருக்கும் நம் குழந்தைகள் 5,6 வகுப்பில்கூட படிப்பதில்லை. 6 வது வகுப்பு வரை இங்கு எந்த தேர்வும் இல்லை. எழுதுவதில் வேகம் இல்லை. 95% விளையாட்டு மட்டும்தான். சில international grammer schools பரவாயில்லை. ஆனால் சம்பளத்தில் பாதிக்கு மேல் feesஆக கட்டவேண்டும்.
7ம் வகுப்பிற்குப் பிறகு சற்று பரவயில்லை என்கிறார்கள். ஆனால் இங்குள்ள culture ஐ நினைத்தால் மிக பயமாய் இருக்கிறது. எங்கள் வீடு ஒரு பள்ளியின் அருகில்தான் உள்ளது. பள்ளி ஆரம்பிக்கும் முன், பின், இடைவேளை நேரங்களில் மாணவ மாணவிகள் (நம் நாட்டு பிள்ளைகளும்தான்)இருக்கும் நிலையை பார்க்க கண் கூசுகிறது. அதனால் இங்கு படிக்க வைக்க மிக பயமாய் உள்ளது. நம் பிள்ளைகள் நல்லவர்களாக இருந்தாலும் சூழ்நிலை அவர்களை மாற்றிவிடுமோ என்கிற பயமும் இருக்கிறது. வெளிநாட்டில் வேலை செய்யும் கணவன், குழந்தைகள் படிப்பிற்காக இந்தியாவில் இருக்கும் ம்னைவி என எத்தனையோ குடும்பங்கள் இருக்கிறது. அவர்கள் படும்பாடு சொல்லமுடியாதது.
தற்போதுதான் பூப்பெய்தியிருக்கும் எங்கள் ஒரே மகளை வைத்துக்கொண்டு நானும் என் கணவரும் தினமும் இதை பற்றியே யோசித்து புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஒரே மகளையும் என்னையும் பிரிந்து இருப்பது அவருக்கும் கஷ்டம். அவரை தனியாக விட்டு போக எங்களுக்கும் கஷ்டம். இது கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதைதான் என்று எனக்கு புரிகிறது.ஆனாலும் எதாவது நல்ல தீர்வு கிடைக்குமா என ஏங்குகிறோம். அறுசுவை நண்பர்களின் கருத்துக்கள் எங்களுக்கு மிக உதவியாய் இருக்கும். நன்றி.

Fine here.How are you sister?you gave good answers to all.thank you very much.i did't read any books and magazines continuously before but through arusuvai i started reading your opinion about all question.realy your way of writing and suggestions are attracting me.keep it up sister.
i have doubt.but i don't know how to ask b'coz i delayed some month. sister i got married on dec .moreover it going to become 8 months.I planned to be pregnant after 1 year b'coz of situation .but my soul says it is not good.offently i am thinking about it,my parents also feel lot about this. more people did't get pregnant after long years even they tried.In my case we postponed 1 yrs.whether it is good or bad?.please give your suggestion .eagerly waiting for ur reply.Thanks

Its an excellent site to all house wives

மேலும் சில பதிவுகள்