கோழி சுக்கா வறுவல்

தேதி: May 30, 2007

பரிமாறும் அளவு: 10

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

கோழி - ஒரு கிலோ
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 10 பல்
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள்- 4 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தாளிக்க :
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
அன்னாசிப்பூ - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 50 மி.லி
உப்பு - தேவையான அளவு

சீரகம், சோம்பு, மஞ்சள் தூள், 5 பல் பூண்டு, 10 சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்தவற்றை கோழியில் பிசறி வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு, வெந்தயம் போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி, கோழியை போட்டு வதக்கவேண்டும்.
10 நிமிடம் சிறு தீயில் வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறி ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவேண்டும்.
கறி வெந்து தண்ணீர் வற்றியவுடன் மிளகுத்தூள் சேர்த்து மேலும் 10 நிமிடம் சிறு தீயில் வதக்க வேண்டும். சாப்பிட மிகச்சுவையானது.

மேலும் சில குறிப்புகள்

Comments

கோழி சுக்கா வறுவல் சூப்பர். மிக சுவையாக இருந்தது.சாப்பிட்ட எங்கள் அனைவருக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது. Thanks Madam...

How are you? I would like to try this recipe soon.
சின்ன வெங்காயம்,பூடு,தக்காளி போன்றவற்றை கிராம் அளவில் தாருங்களேன்.இது எலும்பில்லாத கோழி இறைச்சியிலா செய்ய வேண்டும்.இந்த சுக்கா வறுவல் எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.சீரகம்,சோம்பு,பூடு,வெங்காயத்துடன் சேர்த்து அரைப்பது மஞ்சள் தூளா அல்லது மல்லி தூளா.மையாக அரைக்க வேண்டுமா அல்லது பறபறவென்று அரைக்க வேண்டுமா.அரைத்ததை கோழியில் பிசிறி ஊற விட வேண்டுமா.விரைவில் செய்ய விரும்புகிறேன்,உங்கள் பதில் கண்டதும்.நன்றி.

தக்காளியின் அளவுதான் கிராம் அளவில் எப்படி போடுவது என்று யோசிக்கிறேன். ஏனென்றால் இதற்கு[அதாவது]வறுவல் செய்யும்போது தக்காளி அதிகம் போடவேண்டாம். பிரான்ஸில் நாட்டுத்தக்காளி[அ]பெங்களூர் தக்காளி எது கிடைக்கும் என்று தெரியவில்லை. நாட்டுத்தக்காளி 250கி[14கி]7 இருக்கும். அந்த தக்காளி 4தான் இருக்கும். அதனால் 50கி அளவிற்கு பார்த்து போடவும், பாதிதக்காளி கூட போடலாம்.
எலும்புடன் உள்ள கோழியிலும் செய்யலாம்[அ]எலும்பை பிரித்து குழம்பு வைத்து விட்டு சதைப்பகுதியை வறுக்கலாம்.
இங்கே அங்கிள் வறுவல்தான் சாப்பிடுவார். குழம்பிலுள்ள கறி சாப்பிடாமல், அவருக்கு குழம்பு தேவைப்படும். ஆதலால் எது வாங்கினாலும் இரண்டுமே செய்வேன். கறியை மட்டும் பிரித்து வறுப்பேன்.
வெங்காயம் =100கி . இதில் பாதியை அரைப்பதுடன் சேர்க்கவும். பூண்டு 50கி[ஒரு பூடு] அரைப்பதற்கு மட்டும். இஞ்சி 1சின்ன துண்டு போடலாம். எப்போதும் அசைவ உணவிற்கு நான் கொடுத்திருக்கும் ரெசிப்பியில் கட்டாயமாக[செட்டிநாட்டு ரெசிப்பிற்கு] மஞ்சள், சீரகம், சோம்புதான் மைய்ய அரைக்க வேண்டும். 10நிமிடம் [அ]20நிமிடம் ஊறினால் போதும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

தெளிவான பதிலுக்குமிகவும் நன்றி.I like to try tomorrow.தக்காளி=50கி ,சின்ன வெங்காயம்=100கி(அரைப்பதற்கும்,வதக்குவதற்கும் சேர்த்து),பூடு=50கி(அரைப்பதற்கும்,வதக்குவதற்கும் சேர்த்து).மேற்கூறிய அளவு தானே யூஸ் பண்ண சொல்லி இருக்கீங்க,கொஞ்சம் பார்த்து ok சொல்லிடுங்க,கொஞ்சம் டவுட்டா இருக்கு.

இஞ்சி அரைப்பதற்கும்,வதக்குவதற்கும் யூஸ் பண்ண வேண்டுமா.இஞ்சி பேஸ்ட் என்னிடம் இருக்கிறது.எத்தனை தேக்கரண்டி யூஸ் பண்ண வேண்டும்.

சுக்கா வறுவல் எந்த உணவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறினால் அதற்கு தகுந்தாற்போல் செய்து பார்க்க விருப்பம்.

//10 நிமிடம் சிறு தீயில் வதக்கி மி.தூள்,ம.தூள், போட்டு கிளறி 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவேண்டும்.//
என்று நீங்கள் கொடுத்திருப்பதில் ம.தூள் என்பது மல்லி தூளா.

தொந்தரவுக்கு மன்னிக்கவும்.நன்றி.

டவுட் வேண்டாம் ஒ.கே. மிளகாய்த்தூளுடன் போடுவது மல்லித்தூள்தான்.
இஞ்சி பேஸ்ட் =1/2டீஸ்பூன், அரைக்கும்போது சேர்க்கவும்.
சாம்பார், ரசம், சூப்பு, கோழிக்குழம்பு, கறிக்குழம்பு , பிரியாணி எல்லவற்றுக்கும் நன்றாக இருக்கும்.
நான் ஹாங்காங் வழியாக ஆஸ்திரேலியா போகப்போகிறேன். 3நாள் அங்கு ஹால்ட். நம் அருசுவை தோழிகள் யாராவது இருந்தால் பார்த்து சொல்லுங்கப்பா. முடிந்தால் சந்திக்கலாமே. வியு யுசர் பைலில் தேடினேன், கண்டுபிடிக்கமுடியவில்லை. தெரிந்தால் சொல்லவும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

பதிலுக்கு ரொம்ப நன்றி.நாளை செய்து விட்டு பின்னூட்டம் தருகிறேன்.

தனியாகவா பிரயாணம் பண்ணப் போறீங்க.எவ்வளவு மாதம் ஆஸ்திரேலியாவில் இருப்பீங்க.ஆஸ்திரேலியாவில் இருக்கும் போதும் அறுசுவைக்கு வருவீங்க தானே.

அருசுவை உறுப்பினர்கள் இருப்பாங்கன்னே நினைக்கிறேன்.தனி திரெட் ஒபன் பண்ணி கேட்டுப் பாருங்களேன்,எல்லோரும் பார்க்கும் வாய்ப்பு உண்டு.கண்டிப்பாக பார்த்து பதில் தருவாங்க.HAPPY AND SAFE JOURNEY!

Madam,How are you? இன்று இந்த ரெஸிபி செய்தோம்.கோழி சுக்கா வறுவல் சூப்பர். மிக சுவையாக இருந்தது.சாப்பிட்ட எங்கள் அனைவருக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது.Thanks a lot.

சுக்கா வறுவல் செய்து பின்னுட்டம் அனுப்பியதற்கு நன்றி கிளமென்ட்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

Super mummy.I tried today all my friends love this.You are rocking.

மிகவும் நன்றாக இருந்தது மேம்.