காலிஃப்ளவர் சூப்

தேதி: June 3, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

துவரம் பருப்பு - 100 கிராம்
காலிஃப்ளவர் - ஒன்று
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 8
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
சோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
தாளிக்க;
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
அன்னாசிப்பூ - ஒன்று
இலை - சிறிது


 

குக்கரில் பருப்பு, மஞ்சள் தூள், பூண்டு, சோம்பு, சீரகத்தூள் சேர்த்து 5 கிளாஸ் தண்ணீர் சேர்த்து 4 விசில் வைக்கவும்.
குக்கரில் ப்ரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து பருப்பை நன்கு மசித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை பருப்புடன் கொதிக்க விடவும்.
காலிஃப்ளவரை நறுக்கி வெந்நீரில் 10 நிமிடம் உப்பு போட்டு மூடி வைக்கவும். பிறகு பூவை பச்சைத்தண்ணீரில் கழுவி பருப்புடன் சேர்த்து வேகவிடவேண்டும். உப்பு சேர்க்க வேண்டும்.
வெந்தவுடன் ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சூப்பில் கொட்டி மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி இலையை கிள்ளிப்போட்டு இறக்கவும்.


புளி தேவையென்றால் கோலிக்குண்டு அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்