உடல் எடை குறைய சில குறிப்புகள்

உடல் எடை குறைய:
1)எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2 வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.

2) எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.

3)குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.

4) 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள்.எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.

5)சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.

6)என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது என்று பாருங்கள்.இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எளிது.அதிகம் கிலோ ஜூல்ஸ் உள்ள பதார்த்தங்களை எளிதாக தவிர்த்து விடலாம்.இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியவை Sweets.எடை கூட இது முதற் காரணம்.Equal போன்ற கலோரி குறைந்த Sweetener ஐ உபயோகியுங்கள்.

7) டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

8)ஆவியில் வேக வைத்த உணவு,நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு,கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை.இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை,எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும்.பருப்பு,கீரை,அவித்த முட்டை,சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.

8) டயட்டில் ஒன்று சொல்வார்கள்.வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று.ஜீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்றவை தான் இப்படி அளவை குறைக்க வேண்டிய பொருட்கள்.நிறைய பேர் Full Cream milk, Skim Milk க்கு உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கிறார்கள்.Skim milk தண்ணீரை போன்று இருப்பதால் பலரும் அதை Diluted Full Cream milk அதாவது தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்று நினைத்து விடுகிறார்கள்.அதனால் அதை வாங்கி உபயோகப்படுத்துவதும் இல்லை.Skim milk என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.ஆனால் பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் அப்படியேதான் இருக்கும்.எனவே உடல் எடை குறைய skim milk உபயோகிக்கலாம்.சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.

9)வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).

10)உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில் சேருங்கள்.குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.

11)அதிக எண்ணெய்,மட்டன்(மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்),ஸ்நாக்ஸ்(சிப்ஸ்) போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள்.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது.அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம்.

12)சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,Broccoli போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும்.அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும்.எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.

13)Pepsi,Coke போன்ற பானங்களை குடித்தே ஆக வேண்டும் என்றால் Sugar Free அல்லது Diet பானங்களை பருகலாம்.Milo,Horlicks போன்றவை எடையை கூட்டவே செய்யும்.சாலட் சாப்பிட்டாலும் அதில் மயோனைஸ்,சாலட் டிரஸ்சிங் சேர்க்காமல் எலுமிச்சை,மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.Baked Beans,Tuna can,Crackers போன்றவற்றை சிறிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இதன் மூலம் புரோட்டீன் போன்ற சத்துக்கள் கிடைத்துவிடும்.முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம்.முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.

14)Exercise,Diet இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.Diet என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள்.நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும்.பரம்பரை காரணமாக சிலர் குண்டாக இருப்பார்கள்.அவர்களும் முயன்றால் எடையை நிச்சயம் குறைக்கலாம்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்யலாம்.

இந்த குறிப்புகள் அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன்.எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

நான் இப்பொழுது அதிக எடையினால் அவதிபடுகிறேன். டயட் மற்றும் எக்சர்ஸ் பண்ணுகிறேன். உங்களின் குறிப்பு அருமை.

Thanks. I am really happy for this informations.

i juz saw thiz post...u r really a wonderful person..how did u manage to post thiz long mesg in tamil??

all the information are given in a clear format.thank u deva.hope it will be usefull for all who wish to reduce their weight.

gowrisuresh

எப்படி இருக்கீங்க? உங்க குழந்தை நலமா?

உங்க கிட்ட நிறைய கேள்விகள் கேக்கனும்-னு நிறைய வெச்சிருக்கேன்...ஆனா ஒவ்வொரு நேரமும் ஏதோ ஒரு வேல வந்து அப்புறம் எழுதலாம்-னு போயிடறேன்...இப்பொ சுத்தமா மறந்து போச்சு...

நீங்க குடுக்கற குறிப்புகள் அனைத்தும் மிக அருமை...அதுவும் உடல் எடை குறைய நீங்க குடுத்த டிப்ஸ் ரொம்ப அருமை...

ஆங்...ஒரு கேள்வி நினைவுக்கு வந்திச்சு...sun block லோஷன் போட்டா ச்கின் tan ஆகிடுமா? sun block lotion வாங்கும் போது என்னென்ன பார்த்து வாங்கனும்? எந்த ப்ராண்ட் வாங்கலாம்...உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சொல்லுங்க...

நன்றி...

நன்றி...

நீங்கள் கொடுத்த தகவல் மிகவும் உபயோகமாக உள்ளது.நான் கூட்டு குடும்பத்தில் இருக்கிறேன்.அது மட்டுமில்லாமல் வேலைக்கு செல்கிறேன்.எனக்கு அவ்வளவாக
நேரம் கிடைப்பதில்லை.நான் ஒல்லியாகத்தான் (மீடியம்)இருக்கிறேன் ஆனால் என் வயிறு மட்டும் பெரியதாக உள்ளது. இதுவரை குழந்தை இல்லை.திருமணம் முடிந்து நான்கு வருடம் ஆகிறது.இருவரும் செக்கப் செய்து விட்டோம்.பிரச்சனை எதுவும் இல்லை என்று டாக்டர் கூறி விட்டார்கள்.என்னகு வீட்டிலே செய்ய கூடிய எளிய உடற்பயிற்சி இருப்பின் கூறவும்.டயட் ஏதாவது தெரிந்தால் அதையும் சொல்லவும்.

டியர் தளிகா,
அனைவரின் கேள்விக்கும் உடனடியாக பதில் அளிக்காததற்கு மன்னிக்கவும். என் குட்டிப் பையனுக்கு 2 நாட்களாக ஜுரம்.வேலை சரியாக இருந்தது. என்னால் எப்படி இவ்வளவு பெரிய பதிவை தமிழில் அடிக்க முடிந்தது என்று கேட்டிருந்தீர்கள். நாங்கள் தெலுங்காக இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்ததால் வீட்டில் தமிழ்தான் பேசுவோம். எங்கேயாவது விசேஷங்களுக்கு போகும்போதுதான் உறவினர்களுடன் தெலுங்கில் கொஞ்சம் பேசுவோம். நான் கான்வெண்டில் படித்ததால் முதல் ரேங்க் எடுத்தாலும் தமிழில் மட்டும் எப்போதும் 50 மார்க்(அதுதான் அதிகமாக எடுத்தது) எடுப்பேன். என் வகுப்பில் மற்றவர்கள் மார்க் தமிழில் என்னைவிட மோசமாக இருக்கும். என் அப்பா அதனால் என்னை 5 வது படிக்கும் போது நான் அழுதும் கேட்காமல் ஒரு தமிழ் ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள். கிளாசில் முதல் ரேங்க் எடுத்த நான் அங்கே சென்றவுடன் எடுத்த ரேங்க் 27. அவ்வளவு அழுதேன். ஆனால் அந்த அவமானமே நான் தமிழை வெறி கொண்டு கற்றுக் கொள்ள உதவியது. அந்த வருடம் நான் தமிழ் மீடியத்தில் முதல் ரேங்க் எடுத்து காண்பித்த பிறகே என்னை 6 வது மீண்டும் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தார்கள். அப்போதெல்லாம் அப்படி செய்ததை நினைத்து மிகவும் கோபப்படுவேன். ஆனால் இப்போதுதான் அதன் பலன் புரிகிறது. தமிழே தெரியாமல் இருந்த நான் மாவட்ட அளவில் தமிழில் 3 வது மார்க் 10 ஆம் வகுப்பில் வாங்கினேன்.எனக்கு 10 வது படிக்கும்போது தமிழ் நடத்திய ஆசிரியைகளும் எனக்கு தமிழ் மீது ஆர்வம் வர முக்கிய காரணம்.

நம் நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்கள் மட்டுமல்லாது,சிறிய ஊர்களில் கூட இப்போது தமிழ் இல்லாமல் வேறு ஒரு மொழியை எடுத்து படிக்கின்றனர். இதனால் தமிழ் நாட்டில் நிறைய பேர் தமிழ் எழுத, படிக்க தெரியாமலேயே 12 வது வரை படித்து முடிக்கின்றனர். என் கணவருடன் வேலை பார்த்த ஒரு டாக்டர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். ஆனால் தமிழ் எழுத படிக்க தெரியாது. அவர் நம் ஊருக்கு வந்தால் பஸ் ஸ்டாண்டில் ஒரு பஸ் பிடிக்க வேண்டுமென்றால் கூட அடுத்தவரின் உதவியைதான் நாடவேண்டும். அவருக்கும்,எழுத படிக்க தெரியாத ஒருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. படிக்காதவரும் அருகிலிருப்பவரைதான் இந்த பஸ் எந்த ஊருக்கு போகுதுங்கன்னு கேட்பார். இவருக்கும் அதே நிலைமைதான். வேறு மொழியை கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் பிரைவேட் ட்யூஷன் செல்லலாம். ஆனால் தமிழை ஸ்கூலில் கற்றுக் கொள்வதே சரி.

நமது ஊரில் இப்போது தமிழில் எழுதுவதையே ஆச்சரியமாக பார்க்க ஆரம்பித்து விட்டோம். வேறு எந்த மாநிலத்திலும் இப்படி இருக்காது என்று நினைக்கிறேன். தாங்கள் மலையாளமாக இருந்தாலும் தமிழில் குறிப்புகளை வழங்குவதை பாராட்டியே ஆக வேண்டும். தமிழ் மூலம் நமது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள உதவும் அறுசுவைக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

தாங்கள் விரைவில் ஒரு குழந்தைக்குத் தாயாக என் வாழ்த்துக்கள். தாங்கள் இப்போது குழந்தையை எதிர்பார்ப்பதால் அதிக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது நலம். தினமும் 2-4 கி.மீ நடக்கலாம். வயிறு குறைய செய்யும் உடற்பயிற்சியால் குழந்தை உருவாவதில் பிரச்சனை வரலாம். நடை பயிற்சி சிறந்தது. வயிற்றை அதிகம் ஸ்ட்ரெயின் செய்து இப்போது உடற்பயிற்சி வேண்டாமே. அப்படி குறைத்தே ஆக வேண்டும் என்றால் குழந்தைக்கு பிளான் செய்வதற்கு 6 மாதங்களுக்கு முன்பே குறைத்துவிடுவதுதான் நலம். இதற்கான உடற்பயிற்சிகளை சொல்வதை விட படங்களின் மூலம் விளக்கினால் எளிதாகவும் சரியாகவும் புரியும். விரைவில் அட்மினுக்கு படங்களுடன் அனுப்பப் பார்க்கிறேன்.

தற்போதைக்கு வாக்கிங் செல்வதே சிறந்தது. அதைவிட சிறந்த பயிற்சி எதுவும் இல்லை.

தங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி.

எப்படி இருக்கீங்க? உங்க ரெண்டு குழந்தைகளும் நலமா? என் பையனுக்கு இப்பதான் ஜுரம் வந்து இன்னைக்கு கொஞ்சம் தேறி இருக்கான். எப்ப என்ன கேள்வி தோணுதோ ஒவ்வொண்ணா கேளுங்க. முடியும்போதெலாம் பதில் சொல்றேன். இங்கே கொஞ்சம் Engineering கோஷ்டி இருக்கோம்னு நினைக்கிறேன். நான் இத்தனை நாள் நல்லா வீட்டில் இருந்துட்டு இங்கே ஆஸ்திரேலியா வந்ததும் வேலைப் பார்க்க ஆரம்பித்ததும் அலுப்பாக இருந்தது. நாம படிச்சதுக்கும் வேலைப் பார்ப்பதுக்கும் உள்ள வித்தியாசம் நல்லாவே புரிந்தது. இனி நாம கொஞ்சம் அதையெல்லாம் பற்றி பேசினால் என்ன? படித்துவிட்டு திடீரென்று கொஞ்ச வருடம் கழித்து வேலைப் பார்க்க ஆரம்பிப்பவர்கள் தங்களுக்கு தோன்றும் சந்தேகங்களையும் அனுபவங்களையும் சொல்லலாமே. நீங்க என்ன பிராஞ்ச்? நான் திருமணம் ஆன புதிதில் வீட்டில் இருக்க போரடிக்குதுன்னு அடம் பிடிச்சு 4 மாசம் வேலைக்கு போனேன். அதோட சரி. மீண்டும் இப்பதான் போறேன். இதையும் எப்ப விட்டுடலாம்னுதான் எப்பவும் யோசிச்சுட்டு இருக்கேன்.

சரி,இப்ப உங்க கேள்விக்கு என்னோட பதிலை சொல்றேன். சன் பிளாக் லோஷனைப் பத்தி கேட்டிருந்தீங்க.சன் ஸ்க்ரீன் லோஷன் நம் உடலை UV radiation லிருந்து காப்பாற்றுகிறது. இதில் SPF 30(Sun Power Factor) க்கு மேல் உள்ள சன்ஸ்க்ரீன் லோஷன் தான் பெஸ்ட். இது ஆஸ்திரேலியா,நியூசிலாந்து போன்ற கதிர்வீச்சு அதிகம் உள்ள நாடுகளின் Products ல் தான் அதிகம் கிடைக்கும். எந்த கம்பெனியாக இருந்தாலும் இந்த SPF rating தான் முக்கியம். சன் ஸ்க்ரீன் லோஷன் முகத்தை Tan ஆக்காது. அப்ப்டி ஆகாமல் காக்கும். Oil Free Sun Screen Lotion with SPF 30 உபயோகிக்கலாம்.

Sun Tan Lotion நிச்சயம் நமக்கில்லை. வெள்ளைக்காரர்கள் பிரெசிலியன் ஸ்கின்னுக்கு ஆசைப்பட்டு போட்டுக் கொள்வது. நாம் உபயோகித்தால் நிறம் குறைந்து முகமே கன்றிப்போனதுபோல் ஆகிவிடும்.

வெயிலில் கருத்த முகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர Aloe Vera Gel மிகச் சிறந்த மருந்து. சிறிய தீப்புண்களை ஆற்றும் சக்தியும் இதற்கு உண்டு.

மேலும் சில பதிவுகள்