2 மாத குழந்தை

எனது குழந்தைக்கு வயது 2 மாதம்.அவளுடைய முகத்தில் வியர்வைகுருகள் மாதிரி உள்ளது. அதற்கு ஏதாவது சிகிச்சை உள்ளதா? அத்துடன் மலம், சிறுநீர் போகும் போது பயங்கரமாக அழுவாள். இதை பற்றி தெரிந்தவர்கள் தயவு செய்து எனக்கு உதவுங்கள

ஹலோ சாந்தி, எப்படி இருக்கின்றீர்கள்? தங்கள் அன்பு செல்லத்தின் அசெளகரியத்தை பற்றி கூறியுள்ளீர்கள். குழந்தையின் முகத்தில் உள்ள வேர்குருக்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. இரண்டு மாதக் குழந்தையின் தோல் மிக மிக மென்மையாக இருக்கும், சில குழந்தைகளுக்கு இன்னும் கூட தோல் உரிந்துக் கொண்டு இருக்கும். ஆகவே நீங்கள் சாதாரணமாக baby oil,baby lotion நையும் போடுங்கள் போதும்.Johnsons baby products வாங்கி உபயோகியுங்கள், இதனால் குழந்தையின் சருமத்திற்கு ஒரு பிரச்சனையும் வராது.

தினமும் குழந்தையை குளிக்க வையுங்கள். காற்றோட்டமான காட்டன் உடைகளை மட்டும் போட்டு விடுங்கள். கால நிலைக்கு ஏற்றவாறு வீட்டில் மிதமாக வெப்பத்தையும், அல்லது மிதமான குளிரும் இருக்கும் படியாக மெயின்டன் செய்யுங்கள்.

மேலும் சிறு நீர், மலம் கழிக்கும் பொழுது குழந்தை அழுவது பயப்பட வேண்டியதில்லை. உடலில் உள்ளேயும், வெளியிலும் ஏற்ப்படும் மாற்றத்தை தாங்கும் சக்தி குழந்தைகளுக்கு இருப்பதில்லை, ஆகவே இவ்வாறு அழுகின்றார்கள் என்று நினைக்கின்றேன். அடிக்கடி குழந்தையின் வயிற்றுப் புறத்தில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். ஏதாவது ஒன்றை கழிக்கும் பொழுது அழுதால் அதை கட்டாயமாக கண்கானிக்க வேண்டும்.ஆனால் இரண்டுக்குமே அழுவதால் நீங்கள் பயப்படும் அளவிற்கு பிரச்சனை எதுவும் இருக்காது என்று நினைக்கின்றேன். எதற்கும் அடுத்த முறை மருத்துவரை விசிட் செய்யும் பொழுது இதைப் பற்றி கூறி அவரின் ஆலோசனைகளை கேட்டுக் கொள்வது நல்லது. நன்றி.

மிக்க நன்றி Manohari madam

Hi, my baby had the same problem when he was 1 and half month. It was even worse it was like acny, full face redish. My doctor suggested to stop to use any johnson products. He suggested Aveeno products. If u r in USA u will get Aveeno products. I give bath everyday. After breastfeeding, sometimes milk will be there on his cheeks, so, used to wipe with water every time after feeding. Over a time period, it will vanish. No need to apply any topical cream or anything. Just keep it clean, that's it. My doctor even told not to use any massage oil or cream. My baby even had cradle cap, ezema problems.

மனோகரி மேடம் சொன்னது போல வேர்குறுவுக்கு எந்த சிகிச்சையும் இல்லை.

இங்கு மருத்துவர்கள் Johnson's baby products-ஐ உபயோகப்படுத்தவேண்டாம் என்றே கூறுகிறார்கள்...

Aveeno அல்லது cetaphyl moisturising லோஷன் உபயோகப்படுத்தலாம்.

ஸ்ரீதேவி சொன்ன கருத்தும் முற்றிலும் உண்மை...எந்த எண்ணெயும் உபயோகப்படுத்த வேண்டாம்...என் மகனுக்கும் இந்த ப்ராபளம் (cradle cap கூட)இருந்தது...அது தன்னாலேயே ஆறு மாதங்களுக்குள் சரியாகிவிடும்...

நன்றி...

நன்றி...

Thank you very much for Sridevi & Vani

ஹலோ டியர் ஸ்ரீதேவி&வாணி அவர்களுக்கு, உங்கள் இருவரிடத்திலும் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும். காரணம் இருவரின் பதில்களும் ஒரே போல் இருப்பதால் ஒரே நேரத்தில் கேட்கலாம் என்று நினைக்கின்றேன். அதாவது,

மருத்துவர் ஏன் Johnsons products குழந்தைகளுக்கு உபயோகப் படுத்த வேண்டாம் என்று கூறுகின்றார் என்று விளக்க முடியுமா? காரணம் எனக்கு தெரிந்த அளவில் என் அம்மா என்னுடைய தம்பிக்கு இந்த products உபயோகப் படுத்தியதிலிருந்து, கிட்டத்தட்ட 35 வருடங்களாக எங்கள் வீடுகளில் புழக்கத்தில் உள்ளது.அதற்கு முன்பு எனக்கும்,எனது அண்ணனுக்கும் கூட பயன்படுத்தியிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.எப்பொழுது இந்த company ஆரம்பிக்கப் பட்டது என்று தெரியவில்லை. இவ்வளவு பழமை வாய்ந்த ஒரு தயாரிப்பு எதற்காக இப்பொழுது நிராகரிக்கப் படுகின்றது என்று தெரிந்துக் கொள்ள ஆவல். நிச்சயம் மருத்துவர் கூறியிருப்பார் என்று நம்புகின்றேன்.

மேலும் மருத்துவர்கள், எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ள குழந்தைக்குக் கூட இந்த products ஸை பயன்படுத்த கூடாது என்று கூறுகின்றார்களா?

அல்லது உபாதை வந்த குழந்தைகளுக்கு மட்டும் இதை பயன்படுத்த கூடாது என்று கூறுகின்றாரா?

அல்லது இந்த products ஆல் தான் பிரச்சனையே வருகின்றது ஆகவே அதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறுகின்றாரா? என்று விளக்கமாக கூறினால் மற்றவர்களுக்கும் பயன்படும்படியாக இருக்கும். உங்கள் இருவருக்கும் நன்றி.

Johnsons Baby Products-ஐ தான் என் மகளுக்கும் இந்தியாவில் உபயோகபடுத்தினேன்...

இங்கு வேண்டாம் என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணம் அதில் வாசத்திற்காக சேர்க்கும் கெமிகல்ஸ் தோலுக்கு நல்லதல்ல என்று சொல்கிறார்கள்...
அதேபோல பேபி ஆயிலில் உள்ள liquid paraffin-ம் நல்லதல்ல என்றே சொல்கிறார்கள்...

இதை ஏற்கெனவே ஏதோ பழைய(2004) மாத இதழிலும் படித்த ஞயாபகம்...இங்கு என் குழந்தைகளின் மருத்துவரும் இதை சொன்னார்.

குழந்தை நான்கு ஐந்து மாதங்கள் ஆனவுடன் வேண்டுமானால் உபயோகபடுத்த சொன்னார்கள்...

நன்றி...

நன்றி...

ஹலோ வாணி டியர், விரைவாக பதில் எழுதியதற்கு மிக்க நன்றி. தங்களின் பதில் எனக்கு சரியாக விளங்கா விட்டாலும் நான் புரிந்துக் கொண்டது என்னவென்றால்,Johnsons baby oil ல், liquid paraffin என்ற வேதிப் பொருள் உள்ளதால் அது குழந்தையின் தோலுக்கு நல்லதல்ல என்பது சரியா. ஆனால் நான்கு ஐந்து மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு பயன்படுத்தலாம் என்றால் அதன் பிறகு அந்த கெமிக்கலால் பிரச்சனை எதுவும் வராதா,ஒன்றும் புரியவில்லை.

நான் எதற்கு இவ்வளவு கேட்கின்றேன் என்றால் நம்முடைய கருத்தால் யாரும் பாதிக்கபட கூடாது என்பதால் தான். உலகம் முழுவதும் பரவி சக்ஸஸ்புல்லாக வளர்ந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயறைக் குறித்து மாற்றுக் கருத்துக் கூறும் பொழுது மிகவும் ஜாக்கிரதையாக கூறவேண்டும்.

அதிலும் நேர்மாறாக கூறும் பொழுது நம்முடைய சொந்த அனுபவத்தில் அவர்களால் அல்லது அவர்களின் தயாரிப்பால் பாதிக்கப்பட்டிருந்தால் தான் மாற்றுக் கருத்து கூற வேண்டும் என்பது என் கருத்து. ஆகவே இதுப் போன்ற இனி வரும் பதிவுகளில் கொஞ்சம் உஷாராக இருக்குமாறு, தங்களின் அன்பான சகோதரி அல்லது சிநேகிதி என்ற முறையில் கேட்டுக் கொள்கின்றேன்.

மருத்துவர்கள் கூட தனிப்பட்ட ஒருவரின் உடல் உபாதையை வைத்து தான் அவ்வாறு பரிந்துரைப்பார்கள். ஒட்டு மொத்த குழந்தைகளுக்கும் இந்த products ஸால் பிரச்சனை, ஆகவே பயன் படுத்த வேண்டாம் என்று கூறமுடியாது. அவ்வாறு எல்லா மருத்துவரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் மார்க்கட்டில் அந்த பொருட்களை எப்பவோ அகற்றியிருப்பார்களே.

இந்த விளக்கம் உங்களுக்காக மட்டும் நான் எழுதுவதாக நினைக்க வேண்டாம், உங்கள் மூலமாக பொதுவாக எனது கருத்தை வெளிப்படுத்தினேன் அவ்வளவு தான். இதனால் தங்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிக்க வேண்டுகின்றேன். நன்றி.

என்னுடய மகளுக்கு 3 வயது ஆகிறது நான் JONSONS ஆயில் மற்றும் பவுடர் பயன்படுத்துகிறேன்,உபயோகபடுத்தலாமா?

ஹலோ charunetha எப்படி இருக்கின்றீர்கள்? தங்களின் பதிவைப் பார்த்ததும் சிரித்து விட்டேன் காரணம் Johnsons products காக ஒரு பட்டி மன்றமே நடத்திக் கொண்டிருக்கின்றோம். இன்னும் முடியவில்லை என்று நினைக்கின்றேன்.இந்த நேரத்தில் தங்களின் கேள்வி நல்ல சிரிப்பை வரவழைத்து விட்டது நன்றி.

நீங்கள் மேலே உள்ள பதிவுகளைப் படித்தீர்களானால் நீங்களே முடிவெடுத்து விடுவீர்கள் என்று நினைக்கின்றேன். என்னைப் பொருத்தவரையில் தொடர்ந்து உபயோகியுங்கள், அல்லது மருத்துவரின் ஆலோசனையை கேட்டபிறகு உபயோகப்படுத்துங்கள்,ஆமாம் உங்களுக்கு ஏன் மூன்று வருடம் கழித்து சந்தேகம் வந்தது? நன்றி.

மேலும் சில பதிவுகள்