டால்டா?

Dear friends.....

டால்டா என்றால் என்ன? கோழி புரியாணி recipeயில் பார்த்தேன் என்னவென்று தெரியவில்லை

dalda is palm oil... dalda is a brand tht sells palm oil...but in India, ppl refer to palm oil by the nme dalda...:)

வனஸ்பதி என்பதைத்தான் நாம் டால்டா என்று அழைக்கின்றோம். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் Palm oil வனஸ்பதி அல்ல. Palm oil ல் இருந்துதான் வனஸ்பதி அதிகம் தயாராகிறது. வேறு சில தாவர எண்ணெய்களில் இருந்தும் வனஸ்பதி தயாராகிறது. இது நூறு சதவீதம் தாவரக் கொழுப்பு ஆகும். தயிரில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெய் எப்படியோ அந்த மாதிரி palm oil ல் இருந்து எடுக்கப்படும் வனஸ்பதி.

டால்டாவிற்கான பெயர்காரணம் குறித்து முன்பு ஒரு பதிவில் வெளியிட்டு இருந்தேன். அதை தங்களின் பார்வைக்கு இங்கே தருகின்றேன்.

பழைய பதிவு
------------
//
வனஸ்பதி (Vanaspati) என்பது தாவர எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படுவது (hydrogenated vegetable fat). ஹிந்துஸ்டான் லீவர் லிமிடெட் (Hindustan Lever Limited, HLL) Dalda என்ற brand பெயரில் வனஸ்பதியை விற்பனை செய்து வருகின்றது. இன்று மக்கள் வனஸ்பதி என்ற பெயரை மறந்து, அதனை டால்டா என்று அழைக்கும் அளவிற்கு அந்த பெயர் பிரபலம் ஆகிவிட்டது.

Dalda என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? HLL நிறுவனம் 1930 களில், நெதர்லாந்தைச் சேர்ந்த Dada & Co என்ற நிறுவனத்திடம் இருந்து வனஸ்பதியை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்தது. Dada & Co நிறுவனப் பெயர் விற்பனை செய்யப்படும் brand ல் கண்டிப்பாய் இருக்க வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில், Dada என்ற பெயரின் மத்தியில் Hindustan Lever ன் L மட்டும் சேர்க்கப்பட்டு Dada product, Dalda வாக மாறி இன்றும் நிலைத்து நிற்கின்றது.
//

Oh...thanks for the info, admin...:)

உங்களது பதிலுக்கு மிகவும் நன்றி.

உங்களது பதிலுக்கு மிகவும் நன்றி. மிகவும் விரிவான விளக்கம் தந்திருந்தீர்கள்.
டால்டாவிற்குப் பதிலாக வேறு ஏதேனும் oil பாவிக்கலாமா? அல்லது வெளிநாட்டில் இருப்பவர்கள் எந்தக் கடையில் வாங்கலாம்?

அன்புள்ள rikha நலமாக இருக்கிறீர்களா. புதிதாக இணைந்துள்ள உங்களைஅன்புடன் வரவேற்க்கிறேன். தாங்கள் கேட்டுள்ள கேள்வி டால்டாவிற்க்கு பதில் வேறு ஏதேனும் oil பாவிக்கலாமா? அல்லது வெளிநாட்டில் இருப்பவர்கள் எந்தக் கடையில் வாங்கலாம்?

தாங்கள் ஆயில் சேர்ப்பதைவிட நெய் சேர்க்கலாம் சுவையும்,மணமுமாக இருக்கும்.இந்தியாவில் இருந்துதான் நான் நெய் வாங்கி வருவேன்

தாங்கள் ஜப்பானில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிந்துக்கொள்ளலாமா? விருப்பம் இருந்தால் சொல்லவும். இங்கும் நெய் கிடைக்கிறது டால்டா போல் தான் இருக்கும் அவ்வளவாக வாசனை இருக்காது அதுவும் நான் வாங்கி டால்டாவிற்க்கு பதில் உபயோகிப்பேன். நாங்கள் நெய் kobe யில் இருந்துதான் வாங்குவோம்.1kg 800 yenஅல்லது 1000 yen வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்.
நன்றி

If U can get good butter, u can make ghee at home...it's very easy... newzeland butter gives very nice, flavourful ghee...

நலமாக இருக்கிறேன்.உங்களின் அன்பான வரவேற்பிற்கும், நல்ல பதிலுக்கும் எனது நன்றி. நான் ஜப்பானில் CHIBA வில் இருக்கிறேன். நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?

நான் Halal food shoppil நெய் வாங்கினேன்.ஆனால் டால்டாவிற்குப் பதிலாக நெய் போடலாம் என்பது இப்போதுதான் தெரியும். சிகன் பிரியாணி recepi ல் டால்டா 1 மேசைக் கரண்டி,நெய் 1 மேசைக் கரண்டி என்று போட்டிருக்கிறது.அவ்வாறாயின் என்ன செய்ய வேண்டும்?

என்னிடம் நெய் இருக்கிறது. நான் அதை use பண்ணிப் பார்க்கிறேன்.பதிலுக்கு மிகவும் நன்றி.

நான் osaka வில் இருக்கிறேன். நீங்கள் கேட்டு இருப்பது சிக்கன் பிரியாணி ரெசிபியில் டால்டா 1 மேசைக் கரண்டி,நெய் 1 மேசைக் கரண்டி என்று போட்டிருக்கிறது.அவ்வாறாயின் என்ன செய்ய வேண்டும்?
பரவாயில்லை நெய் சேர்த்தே செய்யலாம் நிறைய நெய் சேர்த்தால் அதிகமாக நெய் இருக்கும் சாப்பிட முடியாது திகட்டிவிடும் அதனால் டால்டா சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சிறிது எண்ணெய் சேர்த்து செய்யவும்.
மேலும் எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்.
நன்றி

மேலும் சில பதிவுகள்