Depression/Urgent help

அன்புள்ள மனோஹரி அவர்களுக்கு
என் கணவர் மிகவும் அன்பானவர்.கல்யாணம் முடிட்து 12 வருடங் கள் ஆகிரது. ஆனால் கொஞ்ச நாட்களாக அவரில் மாட்றம் தெரிகிரது.அவருடய மின் அஞ்சல் பதிவு சொர்களை என்னிட்மிருந்து மரைத்து வைகிரார். தொழில் ரீதியான பெண் நபர்களை எனக்கு அரிமுகம் செய்வதில்லை, மட்றும் அவருடன் கொள்ளும் தொலைபேசி உரையாடல்களை சொல்வதில்லை. இது எனக்கு மிகவும் மனக்கவலை தருகிரது. நேரடியாக கேட்டால் "உனக்கு அது அவசியம் இல்லை" என்கிறார்.
இதை சரிபடுட்த உதவி செய்யவ்வும்.மிகவும் நன்றி.

ஹலோ shyli எப்படி இருக்கின்றீர்கள்? தங்களின் பதிவைப் பார்த்தவுடன் நிச்சயமாக நான் இந்த விசயத்தில் தங்களுக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையில் தங்களுக்கு உதவ முன் வந்துள்ளேன்.

தாங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள இந்த மனக்குழப்பம், என்னைப் பொருத்தவரையில் வாழ்க்கையில் யாருக்குமே சாதாரணமாக கணவரின் செய்கையின் மீது ஏற்ப்படும் ஒரு சிறிய சந்தேகம் அவ்வளவுதான். ஆனால் அதை சீரியஸ்ஸாக எடுத்துக் கொள்வதும், அல்லது இலகுவாக நினைத்து விட்டு விடுவதும் அவரவரின் தனிப்பட்ட விசயம்.

ஆனால் என்னைக் கேட்டால் வாழ்க்கையில் கணவரின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.முழு மனதோடு அவரை நம்ப வேண்டும்,இவ்வாறு நம்பிக்கையை மட்டும் வளர்த்துக் கொண்டாலே போதும் தாங்கள் குறிப்பிடுள்ள விசயங்களுக்கு நமது மனம் இடமலிக்காமல் போய்விடும்.

பொதுவாக ஆண்கள் மனைவியிடமிருந்து ஒரு விசயத்தை மறைக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் அதை வெகு சாமார்த்தியமாக அவர்களால் மறைக்க முடியும்,அதிலும் நீங்கள் கூறியுள்ளதுப் போல் "உனக்கு அது அவசியம் இல்லை" போன்ற கடின வார்த்தைகளை பயன் படுத்தவே மாட்டார்கள்.

மேலும் ஒரு கணவன் தன்னுடைய அலுவலச் சம்பந்தமான எல்லா விசயங்களையும், அவருடன் பணிபுரிபர்கள் அனைவரையும் அதில் ஆணாகிலும், பெண்னாகிலும், தன் மனைவியிடம் அறுமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.

அதைப் போலவே மின்னஞ்சல் பதிவு சொர்களை மறைப்பதை வைத்து நாம் தவறாக நினைப்பதில் அர்த்தமில்லை என்று நினைக்கின்றேன். காரணம் அவ்வாறு மறைப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆகவே அதை நாம் ஒரு பெண்ணோடு சம்பந்தைப் பட்டிருக்குமோ என்று சந்தேகப்படுவது தவறு.

பொதுவாக ஆண்களுக்கு பல தோழிகள் இருக்கக்கூடும், அதுப்போல் அலுவலகத்திலும் அவர்கள் போகும் இடத்திலெல்லாம் கூட பல பெண்களின் அறிமுகங்கள் ஏற்ப்படும், அவர்களை எல்லாம் ஒரு ஆணால் நேசிக்க முடியாது, என்பது தான் உண்மை என்று உறுதியாக நம்ப வேண்டும்.

அவ்வாறு ஒரு ஆண் தன் தாய்க்கு அடுத்தபடியாக, இதயத்தில் இடம் கொடுத்து நேசிப்பதும், மற்றும் வெறுப்பு, விருப்பு,போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவது மனைவி என்ற ஸ்தானத்துக்கு மட்டும் தான் அந்த உரிமையைக் கொடுத்துக் கொள்வார்களே ஒழிய வாழ்க்கையில் வந்து போகின்றவர்களுக்கு எல்லாம் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கமுடியாது, அது நடைமுறையில் சாத்தியமில்லை என்று முதலில் நாம் நம்ப வேண்டும்.

தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மனக்குழப்பத்தை என்னால் நன்கு புரிந்துக் கொள்ள முடிகின்றது. ஆகவே நீங்கள் இதற்காக கவலைப் படுவதை விட்டு விட்டு இதே விசயத்தை வேறு திசையில் திசை திருப்ப முயற்சி செய்யவும்.

அதாவது கணவரை சந்தேக கண்ணோட்டத்தில் பார்ப்பதை விட்டு விட்டு அதற்கு பதில் அவரின் மீது அதிக பற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். அனுஅனுவாக அவரை ரசிப்பதை வளர்த்துக் கொள்ளுங்கள். அவரின் மீது அன்பை கல்லங்கபடமில்லாமல் பொழியுங்கள்.
உங்கள் கணவர் எந்த அளவிற்கு உங்கள் விட்டு விலகுகின்றார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அந்த அளவில் நூறு மடங்கு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.ஆனால் அவரின் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்.

முக்கியமாக மன உலைச்சலில் தனியாகப் படுப்பது, பேசாமல் தவிர்ப்பது, சப்பாட்டில் கோபத்தை காட்டுவது போன்ற செய்கையில் தங்களின் கோபத்தை வெளிப்படுதுபவராக நீங்கள் ஒருவேளை இருந்தீர்களானால் அவைகளை எல்லாம் தவிர்த்து விடுங்கள்.

ஆண்களுக்கு அவர்கள் மேல் தவறே இருந்தால் கூட அதை தட்டி கேட்கும் மனைவியை ஒரு நொடியில் வெறுத்து ஒதுக்கி விடுவார்கள். அதை போலவே ஒரு நொடியில் சேர்ந்துக் கொள்வார்கள்.காரணம் பொதுவாக ஆண்கள் இலகிய மனம் படைத்தவர்கள்,நம்மை விட உடலில் உள்ள உறுதி நம்மைப் போல் மனதில் இருப்பதில்லை. ஆகவே அவர்களைப் பற்றி அவர்களின் அன்றாடச் செயல்களைப் பற்றி கவலைப் படத்தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

நடை முறையில் எங்கோ ஒரு சிலர் செய்யும் தவறை வைத்து நம்முடைய வாழ்க்கையை வீணாக்காமல் இருப்பது நல்லது.பொதுவாக பார்த்திருக்கின்றேன் தவறே செய்யாத கணவரேயானாலும் மனைவியின் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க கணவர்களுக்கு பிடிப்பதில்லை, இந்த குணம் கூட அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்து விட்டதென்று நினைக்கின்றேன்.
இவ்வாறு கேள்விகேட்பது, விசாரிப்பது, வேவுபார்ப்பது போன்ற விசயங்களெல்லாம் அவர்களிடத்தில் வேலைக்காகாது.

ஆகவே நீங்களும் உங்கள் கணவரை சந்தேகமாக பார்ப்பதை விட்டுவிடுங்கள். "உனக்கு அது அவசியம் இல்லை" என்று கூறினால் கூட அதை அப்பொழுதே விட்டு விடுங்கள்,இவ்வாறு அவருக்கு கீழ்படிந்து நடப்பது நீங்கள் அவருக்கு கொடுக்கும் மரியாதையே ஒழிய அடிமைத்தனம் என்று நம்மை நாமெ இழிவுப் படுத்திக் கொள்ள கூடாது.

கண்ணே மணியே என்று நேரில் கொஞ்சுவது அன்பல்ல, கண்ணுக்கு மறைந்த நேரத்திலும் அவர் கருத்தில் இருக்க வேண்டு மென்றால் அதற்கு உங்களின் ஒத்துழப்பு இல்லாமல் கிடைக்காது. அதற்கு, அவருக்கு பிடிக்காத விசயத்தை பேசுவதை கூட நிறுத்திக் கொள்ளுங்கள்.அவருக்கு பிடிக்காத செயலை செய்யாதீர்கள் அது போதும்.

எந்த ஒரு விசயத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது தான் அது அதிக வலுவடைகின்றது. உதாரணமாக கூற வேண்டுமென்றால் லவ்வர்ஸ் கூட குடும்பங்களில் எதிர்ப்பு வரும்வரை கல்யாணத்தில் அதிக நாட்டமில்லாதவர்களாகத்தான் பார்த்திருக்கின்றேன்,எதிர்ப்பு வர ஆரம்பிக்கும் பொழுது தான் அவர்களில் உறவை அதிகமாக வலுவடையச்செய்ய முனைவார்கள்.

இல்லையென்றால் நாளடைவில் கூட அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்ப்பட்டுக் கூட ஒருவேளை பிரிந்து போய்யிருப்பார்கள். ஆகவே நாம் எந்த விசயத்தையுமே வீணாக அவசரப்பட்டு சந்தேகத்தை வளர்த்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வரக் கூடாது. இவ்வாறு நமது அவசர புத்தியால் கூட நமக்கு நாமே ஒரு புதிய தலைவலியைக் கூட உருவாக்கி விட முடியும் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும்.

கணவரின் செயலின் மீது எவ்வளவுதான் கோபமிருந்தாலும் அவருக்கு நாம் செய்யும் பணிவிடைகளில் குறை ஏற்ப்படாமல் பார்த்துக் கொள்வது நமது தலையாயக் கடமை என்ற நோக்கத்தோடு இருங்கள். இவ்வாறு வாழ்க்கையில் உங்களுக்கு கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் உங்கள் கணவர் மீது உங்களுக்குள்ள, அன்பை, காதலை, கருணையை, பாசத்தை, அக்கரையை, மரியாதையை உரிமையை,கடமையை போன்று எல்லா வித உணர்வுகளுக்கும் இடமளித்து கட்டுபாடில்லாத அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மாற்றாக அவரைச் சரி செய்கின்றேன் பேர்வழி என்று நீங்கள் அவரின் செய்கைகளை மாற்ற முயற்ச்சி செய்ய முயன்றால் அது தோல்வியில் தான் முடியும் என்று உறுதியாக கூறுவேன். அது வீண் வேலையும் கூட. ஆகவே அவரைச் சரி செய்வதற்கு பதில் உங்களை நீங்கள் மாற்றி அமைத்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் போல் அமைதியும் சந்தோசமும் நீடித்து நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறி முடிக்கின்றேன். மேலும் இது விசயமாக சந்தேகமிருந்தாலும் தயங்காமல் கேட்கவும்.நன்றி.

நீங்கள் எப்படி மேடம் எல்லா பிரச்சனைக்கும் நல்ல பதில்கள் கொடுத்து சும்மா அசத்துறீங்களே...

Its an excellent site to all house wives

ஹலோ மேடம்
Shyliக்கு நல்ல அறிவுரை கொடுத்துள்ளீர்கள் அவர் நிச்சயமாக இந்த மனவுலைச்சலில் இருந்து விடுபடுவர் என்று நினைக்கிறேன் நன்றாக இருந்தது தங்கள் கவிதை நயமான கருத்து மேலும் இது எல்லோருக்கும் பொருந்தும்
நன்றி.

உப்பில்லா பண்டம் குப்பையிலே

ஹலோ மேடம்
Shyliக்கு நல்ல அறிவுரை கொடுத்துள்ளீர்கள் அவர் நிச்சயமாக இந்த மனவுலைச்சலில் இருந்து விடுபடுவர் என்று நினைக்கிறேன் நன்றாக இருந்தது தங்கள் கவிதை நயமான கருத்து மேலும் இது எல்லோருக்கும் பொருந்தும்
நன்றி.

உப்பில்லா பண்டம் குப்பையிலே

---

அன்புடன்,
ஹேமா.

ஹலோ டியர் நித்தியாகோபி எப்படி இருக்கீங்க? என்னைப் பொருத்தவரையில் நேயர்கள் கேட்கும் கேள்விகளில் ஒரளவாவது அனுபவரீதியாக எனது அனுபவமும் சம்பந்தப்பட்டிருந்தால் அதை எளிதாகவும், அதே நேரத்தில் தெளிவாகவும் பதில் எழுதி விடுகின்றேன் அவ்வளவு தான், மற்றபடி அசத்துவது என்றெல்லாம் ஒன்றுமில்லை என்றே கருதுகின்றேன். தங்கள் கருத்துக்கு நன்றி.

ஹலோ டியர் ரஜனிமதன் எப்படி இருக்கீங்க? நிச்சயமாக தாங்கள் விரும்புவதுப் போல் திருமதி ஷைலி அவர்கள்,கூடிய விரைவில் கட்டாயம் மனக்கவலையிலிருந்து விடுபடுவார் என்று நானும் நம்புகின்றேன்.தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

எனக்கு மனோகரி அவர்கள் போல் அதிக அனுபவம் இல்லாவிட்டாலும் உங்கள் பிரச்சனைக்கு எனக்கு தெரிந்த சில யோசனைகள்.கண்வன் மனைவியிடம் ஒளிவு மறைவு இருக்ககூடாது என உங்களை போல் நானும் நினைப்பவள்.உங்கள் கூற்றுபடி உங்கள் மனதில் சில சந்தேகங்கள்.கணவர் தங்களை அதிகமாக அன்பு செய்வதில்லையோ என பயம்.இது பொதுவாக எல்லா பெண்களுக்கும் சில நேரங்களில் ஏற்படுவதுதான்.அதனால் முதலில் சந்தேகபடுவதை நிருத்தி நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.சரி இனி நீங்கள் நினைப்பது சரியாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்வது? வாழ்க்கையே முடிந்தது என சோர்ந்துவிடாதீர்கள்.இதற்கு என்னதீர்வு என நிதானமாக யோசித்துபாருங்க.முதலில் நீங்கள் திருமண வாழ்க்கையை ஒரு ஈடுபாட்டுடன் வாழமுற்படுங்கள்.சில பெண்கள் திருமணமான புதிதில் இருப்பது போல் சில ஆண்டுகள் ஆனதும் இருப்பதில்லை.எப்பொளுதும் இளமையாக உற்சாகமாக இருக்க பாருங்க.கணவனின் தேவைகளை கவனிக்க வேண்டும் அதற்காக சமையல்அறையே கதி என இருக்க கூடாது.இதனால் நீங்கள் கணவருடன் அதிகமான நேரத்தை செலவிட முடியாமல் போகலாம்.கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் பெரும்பாலன வேலைகளை முடித்துவிடுங்க்ள்.அப்படி இருக்கும் நேரங்களில் அவருக்கு விருப்பமன விஷயங்களை பற்றி பேசுங்கள்.அவருக்கு ஆர்வமான விஷயங்கலில் உங்கள் அறிவை வளர்த்து கொள்ளுங்கள்.கணவர் வீடு வரும் நேரங்களில் நீங்கள் fresh ஆக இருக்க வேண்டும்.ஆடைகளில் அவரை அசத்துங்கள்.உணவு பிரியராக இருங்தால் சமையலில் அசத்துங்கள்.புதிது புதிதாக சமைக்க தெரிந்துகொள்ளூங்கள்.எல்லோரும் சேர்ந்து உணவருந்துங்கள்.அன்றய நிகழ்ச்சிகளை பற்றி பேசுங்கள்.அலுவலகத்தில் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொள்ளூங்க்ள்.அவரை சந்தேகபடும்படியாக கேட்டு எரிச்சல் அடைய வைக்காதிர்கள்.எல்லா விஷயங்களை பற்றி கலந்துரையடுங்கள்.அவருக்கு எல்லாவற்றிலும் துணையாக இருங்கள்.குழந்தைகளை கொஞ்ஜி பாசமழை பொழிவதுபோல் கணவரையும் கவனிங்க.மகன் அழைக்கிறான் பிறகு சந்திப்போம்.

மீண்டும் தொடர்கிறேன்.மேலும் பல வழிகளிலும் அவரை உங்கள் பக்கம் ஈர்க்கபாருங்க. நீங்கள் காட்டும் அன்பினால் அவரை உங்கள் வசப்படுத்துங்கள். அவர் தான் உங்கள் உலகம் என அவருக்கு புரிய வைங்க.பிறகு பாருங்கள் அவராகவே உங்களிடம் எல்லாவற்றைம் சொல்லி விடுவார்.சின்ன சின்ன சந்தேகளால் வாழ்கையை வீணாககூடாது.மற்ற பெண்களுடன் பேசுவது பழகுவதை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது.அது அலுவலக சம்பந்தமானதாக கூட இருக்கலாம்.வீணாக மனதை குழப்ப வேண்டாம்.

Hi ஹேமா இந்த சிறிய வயதில் இவ்வளவு மன முதிர்ச்சியை பார்க்க ஆச்சர்யமாக உள்ளது

வாழ்த்துக்கள்

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

மேலும் சில பதிவுகள்