Please help

ஹலோ அறுசுவை நேயர்களுக்கு வணக்கம்

நான் திருமணமாகி இரண்டு வருடங்களாக பிரான்ஸில் வாழ்கிறேன் வயது 27. இரண்டு வருடங்களாக குழந்தை இல்லை சில மாதங்களுக்கு பிறகு டாக்டரிடம் பார்த்தோம் இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் கூறினார்.ஒரு முறை கரு உண்டாகி , பிறகு கரு வளர்ச்சியடையவில்லை நின்று விட்டது என்று சொல்லிவிட்டார்கள் பிறகு மூன்று மாதத்திற்கு போலிக் ஆசிட் மாத்திரை கொடுத்தார்கள் சாப்பிட்டு வருகிறேன். ஒவ்வொறு மாதமும் இரண்டு வருடங்களாக ஒவ்வொறு மாதமும் பரீட்சை எழுதிட்டு ரிசல்ட்டுக்கு காத்திட்டு இருப்பது போல் ஆகிவிட்டது என் வாழ்க்கை. கல்யாண்ம் ஆகி இன்று முதல் கவலை, டென்ஷன், பயம். இங்கு பேச யாரும் இல்லாததால் ஊருக்கு யாருக்கு போன் செய்தாலும் முதல் கேள்வி ஏதாவது விசேஷம் உண்டா என்று தான் கேட்கிறார்கள்.அதனால் போன் செய்யவும் விரும்பவில்லை. இன்று என்ன கவலைன்னா இந்த மாதம் 5 நாள் முன்னதாகவே பீரியட்ஸ் வந்துவிட்டது . எப்பவும் எனக்கு இப்படி வராது ஒரு நாள் முன்னதாகதான் வரும். பீரியட்ஸ் வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் வந்துவிட்டது. இது நார்மலா அனார்மலா தெரியல. நிறையபேர் பெரியவங்க இருப்பீங்க எனக்கு ஏதாவது வழி சொல்லுங்க. எனக்கு இப்ப இருக்கிற ஒரே துணை அறுசுவைதான்.
Thanks

தோழி பிரின்ஸி அவர்களுக்கு, உங்களுக்கு உள்ள அதே பிரச்சனை எனக்கும் இருந்தது. கல்யாணமாகி ஐந்து வருடங்கள் கழித்துதான் முதல் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் டாக்டர்களிடம் காட்டியபோது இருவருக்குமே பிரச்சனையில்லை என்ரு சொல்லிவிட்டார்கள். நீங்கள் இப்போது சந்திக்கும் அதே பிரச்சனைதான் எங்களுக்கும். குழந்தையில்லையேங்கிர எங்க கவலையைவிட, இன்னும் விசேசம் இல்லையா ன்னு ஊர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்றதுதான் கஷ்டமாக இருந்தது. நீங்களாவது பரவாயில்லை வெளிநாட்டில் இருக்குறீங்க. நான் அப்ப சொந்த ஊரிலேயே இருந்தேன். கேள்வி கேட்குற எல்லாருக்கும், இல்ல.. இனிமேதாங்கிர பதில் மட்டும்தான் சொல்வேன். ரொம்ப தள்ளிப்போடாதே.. வயசாச்சுன்னா கஷ்டம்னு எல்லா பெரிசுகளும் அட்வைசா பொழிஞ்சு தள்ளும். நம்ம கஷ்டம் ஊருக்கு தெரியாது.

ரெண்டு வருசங்கிறது அதிகமில்ல. அதுக்குள்ள நீங்க மனசை தளரவிடவேண்டாம். பத்து வருடங்கள் கழித்துகூட குழந்தை பிறக்கிறது உண்டு. டாக்டர்கள் ரெண்டு பேர்கிட்டேயும் பிரச்சனை இல்லேன்னு சொன்ன பிறகு, கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கு. கொஞ்சம் லேட்டாகலாம். இது சாதாரண விசயம். அதே மாதிரிதான் பீரியட்ஸ் முந்துறதும். அதுவே தொடர்ந்துச்சுன்னா டாக்டரை பார்த்து கன்சல்ட் பண்ணுங்க. எப்பவாவது ஒரு தடவைன்னா அது பெரிய பிரச்சனையில்ல. கவலையே வேண்டாம். விரைவிலேயே உங்கள் பிரச்சனை தீர்ந்து, உங்கள் மனக்கவலைகளும் தீரும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

Dear Princy,

Please dont get upset.When doctor said that you both dont have any problem believe it whole-heartedly and be haappy.Pray God and keep your mind Happy,think positively. This society & relatives speak anything dont bother about that.If we conceive soon after marriage people will say to us why so soon you have planned for a child you should have given some gap and enjoyed ur life and they will say vice-versa also as your relatives asks.So, remove all that from mind.Everyones body mechanism is different so please dont compare with anyone.Irregular periods are common for all womens. But its everytime happening the same then u need to consult your Doctor.Take folic Tablets , Dates regularly.."ALL THE BEST".

மேலும் சில பதிவுகள்