புதிய கடவுச்சொல் வேண்டுவோர் கவனத்திற்கு

நேயர்களுக்கு வணக்கம்.

அறுசுவை உறுப்பினர்களிடம் இருந்து அவ்வபோது புதிய கடவுச்சொல் வேண்டி விண்ணப்பங்கள் வருவதுண்டு. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் கடவுச்சொல்லை மறந்துவிடுவதுதான். இது சாதாரணப் பிரச்சனைதான். புதியக் கடவுச்சொல் கொடுப்பதில் எங்களுக்கு பிரச்சனை எதுவும் கிடையாது. ஆனால், அப்படி புதியக் கடவுச்சொல்லை அனுப்பும்போது, தாங்கள் பெயர்ப்பதிவு செய்தபோது என்ன மின்னஞ்சல் முகவரி கொடுத்து இருந்தீர்களோ அந்த முகவரிக்குதான் அனுப்ப இயலும். அப்போதுதான் பெயர்ப்பதிவு செய்துள்ளவர்தான் மாற்றுக் கடவுச்சொல் கேட்டுள்ளார் என்பதை உறுதி செய்து கொள்ள இயலும்.

இதில்தான் பல நேரங்களில் பிரச்சனை வருகின்றது. பெயர்ப்பதிவு செய்யும்போது ஒரு மின்னஞ்சல் முகவரியும், மாற்று கடவுச்சொல் கோரும்போது வேறொரு மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கின்றனர். இதுபோன்ற நிலையில் நாங்கள் கண்டிப்பாக பெயர்ப்பதிவு செய்தபோது தாங்கள் கொடுத்துள்ள முகவரிக்குதான் புதிய கடவுச்சொல்லை அனுப்ப இயலும். இது உங்களது நன்மைக்குதான். இல்லையென்றால் வேறொருவர் உங்களது கடவுச்சொல்லைப் பெற்று, உங்கள் பெயரில் உள்நுழைவு செய்து, ஏதேனும் பிரச்சனைகள் உண்டு செய்ய வாய்ப்புள்ளது.

சரி, பெயர்ப்பதிவின் போது கொடுத்த மின்னஞ்சல் முகவரி தற்போது உபயோகத்தில் இல்லை. காலாவதி ஆகிவிட்டது. என்னுடைய கடவுச்சொல்லும் மறந்துவிட்டது. இப்போது கடவுச்சொல்லை மீண்டும் பெறுவதற்கு வழியே இல்லையா? என்று கேட்பவர்களுக்கு,

ஆம், புதியக் கடவுச்சொல்லை பெறுவதற்கு வழியில்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரி காலாவதியாகாமல் அதை எப்போதும் உபயோகத்தில் வைத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. இந்த மாதிரி பிரச்சனைகளில் இதற்கு இருக்கும் தீர்வு, நீங்கள் மீண்டும் பெயர்பதிவு செய்வதுதான். அப்போது புதிய பெயரில், புதிய மின்னஞ்சல் முகவரி கொடுத்து பெயர்ப்பதிவு செய்து கொள்ளுங்கள். இப்படி செய்கையில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய பெயரை மீண்டும் பயன்படுத்த முடியாது.

இதுபோன்ற குழப்பங்கள் சமீபத்தில் நிறைய வந்துள்ளதால், இதற்கு தனியாக ஒரு பதிவு இட்டு, விளக்கம் கொடுக்க விரும்பினோம். மேலும் சந்தேகங்கள் இருப்பின் கேள்விகள் எழுப்பலாம்.

அட்மின்,

இதற்கு மாற்ரிடாக பாதுகாப்பு கேள்வி (Security Question) போன்ற ஒன்றை பாவிக்க முடியாதா?

இதை செயல்படுத்துவது இயலுமோதெரியவில்லை (ஏனென்றால் ஏற்கனவே பதிந்த உறுப்பினர்கள் (?))

இப்படிக்கு,
பிரகாஷ்
---
thetalkouttrojans.blogspot.com
nimalaprakasan.googlepages.com

http://thetalkouttrojans.blogspot.com/
http://nimalaprakasan.googlepages.com/

அதுதவிரவும் கடவுச்சொல்லை மறப்பவர்கள், பாதுகாப்புக் கேள்விக்கான பதிலை மறக்காமல் இருப்பார்களா என்பது இன்னொரு பெரும் கேள்வியே :)
-பிரகாஷ்

http://thetalkouttrojans.blogspot.com/
http://nimalaprakasan.googlepages.com/

அன்பின் நிமல்,

தங்களது கேள்விக்கு தாங்களே பதில் கொடுக்கும் வகையில் சந்தேகம் எழுப்பியிருக்கின்றீர்கள்:-)

உண்மைதான். பாதுகாப்பு கேள்வி குறிப்பிட்ட உறுப்பினரை உறுதிசெய்துகொள்ள ஒரு வகையில் உதவும். வெறும் கடவுச்சொல் மாற்றிக் கொடுப்பது என்பது பெரிய பிரச்சனையல்ல. அதை யார் கேட்டாலும் மாற்றிக் கொடுப்போம். பிரச்சனை என்னவென்றால், அப்படி மாற்றிக் கொடுக்கும் கடவுச்சொல்லை அவர்கள் profile ல் கொடுத்திருந்த மின்னஞ்சல் முகவரிக்குதான் அனுப்ப இயலும்.

இங்கேதான் பலர் தவறு செய்கின்றனர். Profile ல் ஒரு மின்னஞ்சல் முகவரியும், புதிய கடவுச்சொல் அனுப்பச் சொல்லி மற்றொரு மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கின்றனர். இந்த இடத்தில் புதிய கடவுச்சொல் கேட்பவர் சரியான நபர்தான் என்று உறுதி செய்வது மிகவும் கடினம்.

அதைத்தான் மேலே குறிப்பிட்டு இருந்தேன். மீண்டும் அதையே வலியுறுத்துகின்றேன். கடவுச்சொல் மறந்தால் பிரச்சனையில்லை. உடனே அனுப்பி வைக்கின்றோம். ஆனால், உங்கள் profile ல் நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரி காலாவதியாகாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.

அறுசுவை நேயர்கள் பலர் பெயர்ப்பதிவு செய்த பின்னர் தங்களுக்கு கடவுச்சொல் வந்து சேரவில்லை என்பதை தெரிவித்து இருந்தார்கள். இதற்கு முன்பிருந்த சர்வர் அதிகப்பளு தாங்காமல் திணறியதால், மெயில் சர்வரை சில காலம் நிறுத்தி வைத்திருந்தோம். spammers பலர் தவறாக பயன்படுத்தியதும் ஒரு முக்கிய காரணம். அந்த நேரத்தில் பெயர்ப்பதிவு செய்தவர்களுக்கு கடவுச்சொல் அடங்கிய மின்னஞ்சல் வந்து சேர்ந்திருக்காது.

அப்படி கடவுச்சொல் கிடைக்கப் பெறாதவர்கள், கீழே உள்ள தொடர்புக்கு என்ற பக்கத்தின் வாயிலாக, நீங்கள் பதிவு செய்திருந்த பெயரை எங்களுக்கு தெரியப்படுத்தினால், உங்களுக்கு புதிய கடவுச்சொல்லை உடனே அனுப்பி வைக்கின்றோம். புதிய கடவுச்சொல்லை நீங்கள் பெயர்ப்பதிவின்போது கொடுத்திருந்த மின்னஞ்சல் முகவரிக்குதான் அனுப்பமுடியும்.

கடவுச்சொல் வேண்டுவோர் தயவுசெய்து தாங்கள் <b>பதிவுசெய்த பெயரை (user name) குறிப்பிட்டு</b> மின்னஞ்சல் அனுப்பவும்.

கடவுச்சொல் கேட்டு பலமுறை மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றீர்கள். நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு நான் இரண்டு முறை பதில் கொடுத்தேன். இரண்டும் திரும்பி வந்துவிட்டது. உங்களது rediffmail முகவரியில் பிரச்சனை உள்ளது என்று எண்ணுகின்றேன். நீங்கள் புதிய மின்னஞ்சல் முகவரி கொடுத்து பெயர்பதிவு செய்யுங்கள்.

கடவுச்சொல் கேட்பவர்களுக்கு என்று ஏற்கனவே இரண்டு மூன்று முறை இதே பதிவினை வெளியிட்டுவிட்டேன். ஒருவேளை கடவுச்சொல் என்ற வார்ததை புரியவில்லையோ என்னவோ..

இன்னமும் புதிய கடவுச்சொல் கேட்பவர்கள் அவர்களது user name (பயனீட்டாளர் பெயரை) குறிப்பிடாமலே பாஸ்வேர்டு அனுப்பி வையுங்கள் என்கின்றார்கள். யாருக்கு என்று அனுப்புவது. யாருடையை ஐடிக்கு பாஸ்வேர்டு மாற்றம் செய்வது?

தயவுசெய்து (please, please, please...) password கிடைக்கப்பெறாதவர்கள், உங்களது user name ஐ குறிப்பிட்டு பாஸ்வேர்டு கேளுங்கள். user name குறிப்பிடாமல் வரும் மெயில்களுக்கு பதில் கொடுக்க இயலாது.

அடுத்து, புதிதாக பெயர்ப்பதிவு செய்தவர்கள் நிறைய பேர் தங்களின் மின்னஞ்சல் முகவரியை தவறாக கொடுத்து இருக்கின்றார்கள். நிறைய மெயில்கள் திரும்பி வந்துள்ளன. அவர்களுடைய மின்னஞ்சல் முகவரியே தவறாக இருப்பதால் அவர்களை தொடர்பு கொள்வதும் எங்களுக்கு சிரமம். எனவே பெயர்ப்பதிவின் போது மிக சரியான மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும்.

மன்னிக்கவும், எனக்கு கடவுச்சொல் கிடைக்கவில்லை.நான் மெய்ல் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை. என்ன‌ காரணம் என்று தெரியாது.

மேலும் சில பதிவுகள்