திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்த்தல் தேவையா? இதனால் பிரச்சனைகள் வருகிறதா.. தீர்கிறதா�

"திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்த்தல் தேவையா? இதனால் பிரச்சனைகள் வருகின்றனவா.. தீர்கின்றனவா?"

மற்றுமொரு தலைப்பு, கொஞ்சம் ஆன்மீகத்தில் இருந்து தள்ளி இருப்பதுபோல் தெரிந்தாலும், இதற்கும் நம்பிக்கைக்கும் சம்பந்தம் உள்ளது என்பதால், ஆன்மீகம் தலைப்பின் கீழ் இந்த விவாதத்தை கொண்டு வருகின்றேன்.

இன்றைய தேதியில் பெரியவர்கள் பார்த்து நடத்தும் பெரும்பான்மையான திருமணங்கள், ஜாதகப் பொருத்தம் பார்த்துதான் நடத்தப்படுகின்றது. மணப்பொருத்தத்திற்கு முதலில் மனப் பொருத்தம்தான் பார்க்கவேண்டும். அதை விடுத்து, இது போன்ற ஜாதகப் பொருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல் எந்த வகையில் சிறந்தது?

ஜாதகம் சரியில்லை, செவ்வாய் தோசம் என்றெல்லாம் ஏராளமான பெண்கள் (ஆண்களும்) திருமணம் ஆகாமலே இருக்கின்றார்களே.. ஒரு கரு தாய் வயிற்றில் உருவான போதே (கிட்டத்திட்ட) அதன் பிறப்பு நிச்சயமாகிவிடுகின்றது. அப்படியிருக்கையில் அது குழந்தையாய் தாய் வயிற்றைத் தாண்டி வெளிவரும் நேரத்தை ஏதேதோ நட்சத்திரங்களுடன் முடிச்சிட்டு, அந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதி, அது பிற்காலத்தில் வளர்ந்து திருமணத்திற்கு நிற்கும்போது, ஜாதகமும் தடையாக குறுக்கே நிற்பது எந்த வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது? இவை அவசியம் தானா என்பதை நேயர்கள் தங்கள் சொந்த அனுபவங்களைக் கொண்டு விவாதிக்கலாம்.

ஜாதகத்தை முழுதுமாக நம்பாமல், இருப்பவர்களும் முன்னேறுகிறார்கள்...காரணம் அவர்கள், அவர்களையே நம்புகிறார்கள்...நமக்கு நம் மீது நம்பிக்கை இருந்தால் ஜாதகத்தை நம்ப வேண்டிய அவசியம் இல்லை...

நமக்கு நம்முடைய வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு காரணம் வேண்டும்...அதற்கு ஜாதகம் நமக்கு உதவுகிறது...நாம் தோற்று, இன்னொருவர் ஜெய்த்தால், நமக்கு நேரம் சரியில்லை, மற்றவருக்கு நேரம் சரியாக உள்ளது என்று சொல்கிறோம்...

அனால் உண்மையில் பார்தோமானால், நம்முடைய positive thinking தான் நம்மை வெற்றியடையச்செய்யும், negative thinking தான் தோல்வி குடுக்கும்...நாம் நன்றாக யோசித்துப்பார்த்தால் நமக்கே புரியும்...அதனால் ஜாதகம் என்பது அவர்களுடைய மனதிற்க்கு ஆறுதல் மற்றும் தூண்டுதலுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்...
ஜாதகத்தில் நன்றாக படிப்பார் என்றிருந்தால், நிச்சயம் அவர் நன்றாக படிப்பார்...காரணம் மனதில் நாம் நன்றாக படிப்போம் என்று அவருடைய மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்...அதுவே ஜாதகத்தில் அவருக்கு படிப்பிலை என்றிருந்தால், அவர் படிக்கமாட்டார், காரணம் எனக்கு படிப்பே வராது என்று நினைத்துகொண்டு படிப்பதற்கான் முயற்சியை செய்யாமல் இருப்பது தான்...இதில் விதிவிலக்கும் உண்டு...படிப்பு வரது என்றிருந்தாலும், இல்லை அதை பொய் ஆக்க வேண்டும் என்று முயற்சி செய்து படிப்பார்கள்...அதனால் அப்படி பட்டவர்களுக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கும்...ஏனென்றால் அவர்கள், அவர்களுக்குள் இருக்கும் திறமையை நம்புவதனால்...

அதனால் ஜாதகம் என்பது நம்முடைய மனம் நிம்மதியடைய ஏற்படுத்தப்பட்டதாக இருக்கலாம்...

ஜாதகம் என்பது நட்சத்திரங்களை வைத்து தான் எழுதப்படுகிறது, என்று சொல்கிறோம்...

செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், காளஹஸ்தி சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்தால், அவர்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகிவிடும், என்று காளஹஸ்தி சென்று பூஜை செய்பவர்களும் இருக்கிறார்கள்...அப்படியென்றால் அந்த நட்சத்திரங்களினால் நமக்கு ஏற்படும் தோஷம் சென்றுவிடுமா? அப்படியென்றால் இதற்கும் பில்லி சூன்யம் எடுக்கும் மந்திரவாதிக்கும் என்ன வித்தியாசம்?

ஜாதகம் தேவையில்லை...ஜாதகத்தை நம்புவதை விட, நமக்கு எப்போதும் நல்லதே நடக்கும் என்று நம்பினாலேயே எல்லாம் நல்லவையே நடக்கும் என்பது என் கருத்து...

நன்றி...

நன்றி...

அன்பு தங்கைக்கு,

நல்ல கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. நடப்பில் இந்த ஜாதகம் பார்த்தலை வெறும் நம்பிக்கை சார்ந்த விசயமாக யாரும் எடுத்துக்கொள்வதில்லை. அதுதான் பிரச்சனையே. அது ஒருவித அறிவியல் என்பது மாதிரி பரப்பி வருகின்றனர்.

இந்த இந்த நட்சத்திரங்கள் இப்படி இருந்தால் அவர் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று அடித்துப் பேசுகின்றனர். அப்படி நடக்கவில்லையெனில், ஜாதகம் கணித்தது சரிதான். பிறந்த நட்சத்திரம், தேதி, நேரம் மிகத் துல்லியமாக எழுதப்படவில்லை. அப்படி எழுதப்பட்டிருந்தால் மிகத்துல்லியமாக கணித்துவிடலாம் என்றெல்லாம் கதை விட்டு தப்பிக்கின்றனர்.

எந்த நம்பிக்கை சார்ந்த விசயங்களையும், மனிதனுக்கு அதனால் நன்மைதான் எனும்பட்சத்தில் யாரும் குறை சொல்ல போவதில்லை. இப்போதைய பிரச்சனை, இது போன்ற நம்பிக்கைகளால் உண்டாகும் எதிர்மறை விளைவுகள். அதைத்தான் நான் இங்கே விவாதிக்க விரும்பினேன்.

இந்த ஜாதகம் பார்த்தல் மற்ற விசயங்களில் விளையாடுவதை விட, திருமண விசயத்தில் மக்கள் வாழ்க்கையில் அதிகமாகவே விளையாடுகின்றது. இது போன்ற நம்பிக்கையினால், அர்த்தமற்ற கணிப்புகளால், பத்தில் எட்டு பேர் நன்மை பெற்று, இரண்டு பேர் வாழ்க்கை கேள்வி குறியாய் ஆனாலும், இது தேவையற்றதுதான்.

எனக்குத் தெரிந்த அளவில் எனது நண்ப, நண்பிகள் சிலருக்கு இந்த ஜாதகப் பிரச்சனையால் இன்னமும் திருமணம் நடைபெறாமல் இருக்கின்றது. குறிப்பாய் செவ்வாய் தோசம். அதுவும் செவ்வாய் எட்டில் இருந்துவிட்டால் அவ்வளவுதான். சீக்கிரம் பிரிந்து விடுவார்களாம். தற்கொலை செய்துகொள்ளவும் வாய்ப்புகள் அதிகமாம். அதைவிடக் கொடுமை 12ல் செவ்வாய் என்றால் பூரண கட்டில் சுகம் கிடைக்காதாம். அடடா.. இதையெல்லாம் தீர்மானிப்பது செவ்வாய்தானா?!!

அன்பு அட்மின் அவர்களுக்கு, ஜாதகம் மற்றும் செவ்வாய் தோஷங்களைக் குறித்த தங்களின் கருத்தை யாராலும் மறுக்க முடியாது.ஆனாலும் இதை எல்லா மதத்தினரும் பின்பற்றுகின்ற பொதுவான கருத்தா என்று தெரியவில்லை.இன்றைய காலக்கட்டத்தில், விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கின்ற காதல் கலப்புத் திருமணங்கள் பெருகிவிட்ட காரணத்தினால் போக போக இதுப் போன்ற ஜாதகப் பொருத்தங்களுக்கும், தோஷங்களுக்கும் இடமில்லாமல் போய்விடும் என்று நம்புவதால், இதைப் பற்றி அதிக கவலைப்பட தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

ஆனால் அவ்வாறு இல்லாமல் இதுப் போன்ற பொருத்தங்கள் பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற நிலையில் பெற்றோர்கள் நம்பினால், ஜாதகப் பொருத்தம் பார்ப்பதற்கு பதில், ஆரோக்கியத்தின் அடிப்படையில் குறைந்த பட்சம் இரத்த பரிசோதனையையாவது ஜோடிகளுக்கு செய்து பார்த்தப் பிறகு, அவர்களை இணைத்து வைத்தலின் மூலமாகக் கூட, ஆரோக்கியமான வருங்கால சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று நம்புகின்றேன்.

இதில் என்னுடைய அனுபவத்தை பற்றி கூற வேண்டுமென்றால் ரொம்ப நாளாக மறந்து இருந்த விசயத்தை பற்றி மீண்டும் நினைவூட்டியதற்கு மிக்க நன்றி. காரணம் அடுத்த முறை ஊருக்கு போகும் பொழுது, ஒரு பொருத்தம் கூட இல்லாத எங்களுக்கு, இதுப் போன்ற பொருத்தம் அமைவதே அபூர்வம் என்று இரண்டு தரப்பு குடும்பத்தையும் நம்ப வைத்து, எங்களை இணைத்து வைத்த அந்த ஜோஷியக்காரர்களுக்கு அன்று பிடிக்கப் போகுது சனி. ஆனால் ஒன்று எங்களுக்குள் எந்த மனப்பொருத்தமும் இல்லாவிட்டாலும் அவருக்கு என்னையும் ரொம்ப பிடிக்கும், எனக்கு அவரை மட்டுமே பிடிக்கும், மொத்தத்தில் எங்களுக்கு எங்கள் குழந்தைகளை மிக மிக பிடிக்கும். ஒரு வேளை இது தான் ஜாதகப் பொருத்தம் என்ற மாயசக்தியோ, புரியாத புதிர்.நன்றி.

பாவம் அந்த செவ்வாய்....எங்கோ இருக்கும் அது இங்கிருப்பவர்களால் பந்தாடப்படுகிறது. அது போகட்டும். ஆடியில் பிள்ளை பிறந்தால் அலைக்கழிக்கும் என்று ஒன்றிரண்டு நாள் முன்னதாக ஆனி மாதக் கடைசியில் அறுவைசிகிச்சை செய்துகொள்கிறார்களே அந்தக் குழந்தைக்கு எந்தக் கணக்கில் ஜாதகம் பார்ப்பார்கள்?

டியர் விதுபா அவர்களுக்கு, தங்களின் கேள்விக்கு எனக்கு தெரிந்ததைக் கூற விரும்புகின்றேன். ஆடி மாத சமாச்சாரத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த வரையில், ஆடி மாதத்தில் கர்ப்பம் தரிப்பது தான் கூடாது என்று புதிதாக கல்யாணமான ஜோடியைப் பிரித்துவைப்பார்கள், (கான்டம்ஸ்,கண்டு பிடிக்காத காலத்திற்கு வேண்டுமானால் இது பொருந்தும்). இதற்கு காரணம் ஆடியில் கர்ப்பம் தரித்தால் குழந்தை சித்திரையில் சரியான வெய்யில் மாதத்தில் பிறக்கும். இந்த கடுமையான வெப்பம் பச்சிளங் குழந்தைக்கு ஆகாது என்று குழந்தையின் நலன் கருதி ஏற்ப்படுத்தப்பட்டது என்று கூறுவார்கள். ஆனால் ஆடியில் குழந்தை பிறந்தால் எவ்வாறு அலைக்கழிக்கும் என்று உங்களுக்கு தெரிந்திருந்தால் கட்டாயம் கூறும் படி கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் அறுவைச் சிகிச்சையின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும், குறைமாசத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தாயின் வயிற்றிலிருந்து வெளியில் வந்த (எடுத்த) நேரத்தை தான் ஜாதகத்தில் எழுதுகின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.

ஆடியோ, சித்திரையோ, இதற்க்கு கூடவா அறுவைச் சிகிச்சை செய்யப்படுகின்றது!!!!! என்பது எனக்கு புதிய செய்தியாக இருக்கின்றது. ஜாதகமே அவசியம் தானா? என்று சிந்திக்கும் காலகட்டத்தில், இதற்காக இரண்டு நாள் முன்னதாக அறுவைச்சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுப்பதுப் பற்றி எந்த ஜாதகத்திலும் சொல்லப்படவில்லை என்றே கருதுகின்றேன். ஆகவே இதைப் பற்றி இன்றைய இளைய தலைமுறை தான் பதில் சொல்ல வேண்டும். இந்த அதிர்ச்சியூட்டும் தகவலைத் தந்ததற்கு மிக்க நன்றி.நன்றி.

//காதல் கலப்புத் திருமணங்கள் பெருகிவிட்ட காரணத்தினால் போக போக இதுப் போன்ற ஜாதகப் பொருத்தங்களுக்கும், தோஷங்களுக்கும் இடமில்லாமல் போய்விடும் என்று நம்புவதால், இதைப் பற்றி அதிக கவலைப்பட தேவையில்லை//

சகோதரி அவர்களின் கூற்றில் உண்மை உள்ளது. இவை காலத்தால் மறையும் என்பது உண்மை. ஆனால், எவ்வளவு காலத்தில் என்பதுதான் கேள்வி இங்கே. நிகழ்காலத்தில் இதனால் பாதிப்புகள் அதிகம் இருக்கும்போது இதைப் பற்றி கவலைக்கொள்ள தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டு, ஒதுங்கிச் செல்லுதல் தவறு.

இன்றைய காலக்கட்டத்தில் இந்த நம்பிக்கைகள் அதிகரித்து உள்ளன என்பதுதான் உண்மை. தாங்கள் கனடாவிலேயே வாசம் செய்வதால் இந்திய நிலை தெரியாது போயிற்றோ என்னவோ. இன்று எதற்கெடுத்தாலும் ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஜோசியரிடம் செல்லும் வழக்கம் வெகுவாக பரவி வருகின்றது. இது ஆரோக்கியமானதாக தெரியவில்லை.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் அனைத்து மதத்தினரும் ஜாதகம் பார்ப்பதில்லை என்பது உண்மைதான். இங்கே மதத்தை குறிப்பிட்டு இந்த பிரச்சனையை விவாதிக்கவில்லை. இப்படி ஒரு பிரச்சனை இருக்கின்றது. அதுவும் பெரும்பாலானவர்களுக்கு. இது சரியா? இதற்கு தீர்வு என்ன என்ற வகையில் மட்டும் நாம் விவாதிக்கலாம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் ஆடியில் பிரித்து வைப்பதற்கு தற்போது சித்திரையை காரணம் காட்டுகின்றார்கள். அறிவியல் ரீதியாக ஏதேனும் காரணம் சொல்லவேண்டும் என்று. இன்று எதற்கெடுத்தாலும் ஜோதிடங்களை அறிவியலுடன் ஒப்பிட்டு இதற்காகத்தான் நம் பெரியோர்கள் அப்படி சொல்லியிருக்கின்றார்கள் என்று காரணம் காட்டுகின்றனர். அந்த காரணங்கள் எல்லாம் கால ஓட்டத்தில் இவர்களாகவே சேர்த்துக் கொண்டது. அந்த காலத்தில் ஆடி மாதம் என்பது இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம். விரதங்கள், வேண்டுதல்கள் என்று இருப்பதால் அந்த மாதத்தில் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதை தவிர்த்தார்கள். பின்னாளில் அதற்கு வேறு காரணங்கள் தேவைப்பட்டது. (சித்திரை மாதம் எல்லோருக்கும் வெயில் காலம் அல்ல. ஊட்டி, கொடைக்கானலில் அப்போதுதான் நன்றாக இருக்கும். பெங்களுரில் மழை பெய்து கொண்டிருக்கும். வடக்கே பல இடங்களில் அது கடும் மழைக் காலம்.)

சரி, இது போன்ற விவாதங்களினால் என்ன பயன்? நாம் பேசி பேசி இம்மாதிரி மூட நம்பிக்கைகளை ஒழித்து விட முடியுமா என்றால், எனது பதில் இதுதான். உங்களில் ஒருவர் அல்லது இருவர் இவ்விவாத கருத்துக்களை ஏற்று அதன் அடிப்படையில் தங்கள் வாழ்வின் முக்கிய தருணங்களில் முடிவுகள் எடுத்தால் அது இந்த விவாதத்திற்கு கிடைத்த வெற்றி.

நீங்களே பாருங்களேன்.. சகோதரி மனோகரி அவர்கள் தன்னுடைய குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும்போது இது போன்று ஜாதகப்பொருத்தம் எல்லாம் பார்க்காமல், இரத்தப் பரிசோதனை செய்து திருமணம் செய்து வைக்கப் போகின்றார். பலருக்கும் முன்மாதிரியாக இருக்கப் போகின்றார்.

அன்பு மனோகரி,
நான் எழுதியது தற்போது தமிழகத்தில் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கும் வருத்தமான நிஜம். எனக்கு நெருங்கிய நண்பர் வட்டாரத்திலேயே இவ்வாறு நடந்திருக்கிறது. அவ்வாறு வலுக்கட்டாயமாகப் பிறக்கவைக்கப்பட்ட அந்தக் குழந்தை இரண்டு நாட்களாக கண்களையே திறந்து பார்க்காமல் கிடந்த பரிதாபத்தையும் கண்ணால் பார்த்திருக்கிறேன்.

மேலும் ஆடியில் பிறக்கும் குழந்தை, அதிலும் சிறப்பாக ஆண்குழந்தை ஆட்டிப்படைக்கும் என்று கூறும் வழக்கு திருச்சி,தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர்களிடமிருந்தும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

மேலும், காதலிக்கும்போது புரட்சிகரமாய் சிந்திக்கும் இளைய தலைமுறையினர் கூட கல்யாணம்,குடும்பம்,குழந்தை என்று வரும்போது ஜாதகம்,ராசி, நட்சத்திரம்,நல்ல நாள் பெரிய நாள் என்று திசைமாறி விடுகிறார்கள் என்பது தான் நிஜம்.

anbulla friends
adi mathathilkuzhanthai piranthal prblms varum yenbhatharkku nane sakshi.because me and my husband were so happy b4 my sons birth he was born in adi after my sons birth everything changed half the time we r fighting not only in our self but with in my inlaws and my family there came so many prblm everything revolving around that kid only.
not only in my life in my cousine familyalso a baby girl was born and her husband did not even see the baby for 1 yr they went to the extend of divorse also then finally they r living to gether with lots of prblms .
i surely believe in baby born in adi matham will surely bring prblms between husband and wife.atleastfor 1 yrs to the worst.

ஆடி மாதத்தில் குழந்தை பிறந்ததினால் தான் அப்படி நேர்ந்தது என்று நீங்கள் நினைத்து, மேலும் அப்படி தான் நடக்கும் என்று நினைப்பதினால், எது நடந்தாலும் அது போலவே தோன்றும்.....Problem-ஐ Solve பண்ணாமல் ஆடி மாசம் குழந்தை பிறந்ததினால் இப்படி தான் நடக்கும் என்று நாமே முடிவெடுத்து, அதை பெரிதாக்குகிறோம், என்று நினைக்கிறேன்.
எந்த மாததில் குழந்தை பிறந்தாலும், குழந்தை பிறந்த பிறகு சில மாதங்கள்(அதுவும் முதல் குழந்தை), வீட்டில் problems தோன்றும்... காரணம் குழந்தை பிறந்த நேரம் அல்ல....நம்முடைய மனது...அதுவரைக்கும், இரண்டே பேர், விட்டுகொடுத்து செல்வோம்...ஆனால் குழந்தை பிறந்தவுடன், உங்கள் கணவரை முன்பு போல உங்களால் கவனிக்க முடியாது...உங்களாலும், முன்பு போல இருக்கமுடியாது...அதனால் டிப்ரெஸ்ஸன் தோன்றும்...So, கொஞ்ச நாள் அப்படி தான் இருக்கும்...பிறகு சரியாகி விடும்...நீங்கள் இருவரும்...பேச கூட நேரம் கிடைக்காமல் போவதால் தான் problems-ஏ ஒழிய குழந்தை பிறந்த மாதத்தினால் அல்ல...யோசிச்சு பாருங்க...உங்களுக்கே புரியும்...

நன்றி...

நன்றி...

இப்போது நிறைய C-Section-ஸ் நடப்பதற்க்கு காரணம் ஜாதகம் தான்...எனக்கு தெரிந்த பல பேர், இந்த நேரத்தில் பிறந்தால் தான் நல்ல ஜாதகம் அமையும் என்று, முதலிலேயே ஜாதகம் கணித்து அதன் படி C-Section-னிலால் குழந்தை பெருகின்றனர்...அதுவும் 15 நாட்கள் முன்பு கூட பெற்று கொள்கின்றனர்...
என்னோட தோழியும் சித்திரை மாதம் குழந்தை பிறக்க கூடாது என்று அவளோட due date-கு 12 நாட்களுக்கு முன்னால் C-Section-னினால் குழந்தை பெற்றாள்...
பாபு அண்ணா, சொன்னது போல, இந்தியாவில் இது தான் இப்போது நடைமுறையில் உள்ள சூழல்...

நன்றி...

நன்றி...

மேலும் சில பதிவுகள்