ஹெல்தி சாலட்

தேதி: July 19, 2007

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று கப்(சதுரமாக வெட்டியது)
வேக வைத்த கொண்டைக்கடலை - 1/2 கப்
நறுக்கிய குடை மிளகாய் - 1/4 கப்
எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்
சிறியதாக நறுக்கிய தக்காளி - 1/4 கப்
கொத்தமல்லித்தழை அல்லது பார்ஸ்லி பொடியாக நறுக்கியது - ஒரு ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
தேன் - ஒரு ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்
மிகவும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு ஸ்பூன்


 

தேன், ஆலிவ் ஆயில், உப்பு, எலிமிச்சை சாறை நன்றாக கலந்து கொள்ளவும்.
மற்ற பொருட்களையும் சேர்த்து கலக்கவும். சத்தான சாலட் ரெடி.


ஆலிவ் ஆயில் சமையலில் சேர்த்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது. கொழுப்புச்சத்தும் குறைவு. டயட்டிங் இருப்பவர்களுக்கு ஏற்ற சாலட் இது.
விருப்பப்பட்டால் தயிர் சிறிது சேர்க்கலாம். டயட்டிங் இருப்பவர்களுக்கு ஏற்ற சாலட் இது.

மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் தேவா இதுபற்றி உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. நான் கேப்ஸிகம் சேர்க்கவில்லை. எனக்கு ரொம்ப பிடிக்காது. சில்லியும் சேர்க்கவில்லை ஏன் என்றால் ஸ்பைஸி பிடிக்காது. ஈவென் தென் ரொம்ப எஞ்சாய் பண்ணி சாப்பிட்டேன் :) இது மாதிரி உங்களுக்கு தெரிந்த ரெஸிப்பிக்கள் கொடுங்கள். எனக்கு லன்சுக்கு ஸாலட் தான் பிடிக்கும். நன்றி :)

-உமா

நன்றி உமா. தற்பொழுதுதான் தங்களின் பதிலை கவனித்தேன். நிச்சயம் நிறைய சாலட் குறிப்புகளை விரைவில் எழுதுகிறேன்.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த ஹெல்தி சாலட்டின் படம்

<img src="files/pictures/aa349.jpg" alt="picture" />

என்னுடைய பல குறிப்புகளை செய்து பார்த்து நீங்க புகைப்படம் அனுப்பி இருக்கீங்க. நான் இத்தனை நாள் வராததால அதையெல்லாம் இன்றுதான் பார்த்தேன். என்னால் படங்களை பார்க்க முடியாவிட்டாலும் படிக்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.