இன்ஸ்டண்ட் காராசேவு

தேதி: July 20, 2007

பரிமாறும் அளவு: 10

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - 1/2 கிலோ
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
பெருங்காயப்பவுடர் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 1/2 லி
தண்ணீர் - ஒரு கப்
தேன்குழல் முறுக்கு அச்சு


 

கடலைமாவை சலித்துக் கொண்டு அதில் அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
சீரகம், உப்பு, பெருங்காயப்பவுடர், மிளகுத்தூள்(அல்லது மிளகாய்த்தூள்) சேர்த்து, தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவுக்கு பிசைவது போல் பிசையவும்.
வாணலியில் எண்னெய் ஊற்றி, 5 நிமிடம் போல வைத்திருந்து, எண்ணெய் காய்ந்ததும் மாவை முறுக்கு அச்சில் போட்டு நேரடியாக எண்ணெயில் பிழிந்து, ஒரு நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு மேலும் ஒரு நிமிடம் வைத்திருந்து எடுக்கவும்.
ஆறிய பிறகு உடைத்து விடவும்.
இதேபோல் 4-5 தடவை மாவு அனைத்தையும் செய்து முடிக்கவும்.
காராசேவு தயார்.


முறுக்கு, காராசேவு போன்ற பலகாரங்களுக்கு, மாவு பிசைந்ததும் செய்து விட வேண்டும். இல்லாவிடில் எண்ணெய் குடிக்கும். மாவு மிகவும் தளர்த்தியாகவும், கெட்டியாகவும் இல்லாமல் பிழிவதற்கு எளிதாக இருக்குமளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளுங்கள். இது ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். பிடிக்குமென்றால் சீரகத்துக்கு பதில் ஓமம் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தேவா, நானெல்லாம் எங்க காராசேவ் செய்ய போறேன்னு நினைச்சுட்டு இருக்கும் போதே கரெக்டா உங்க ரெஸிபி கண்ணில் பட்டது. ரொம்ப அருமை, அப்படியே என் பெரியம்மா செய்யும் சேவை போல இருந்தது! ரொம்ப சந்தோஷமாக நெகிழ்வாக என் நன்றிகள் உங்களுக்கு :-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

நன்றாக இருந்தது

செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி Alarmelu. தங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள்.

காராசேவு செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி ஹேமா. நான் இந்த தீபாவளிக்கு நிறையவே பலகாரம் செஞ்சுட்டேன். அதையும் எழுதறேன். இப்படி ஈசியா பலகாரம் செய்யற மெத்தேட் எல்லாம் எழுதணும். நேரம்தானே கிடைக்கணும். உங்க தீபாவளி எப்படி? என்னென்ன ஸ்நாக்ஸ் செஞ்சீங்க? இப்பதான் சாமி கும்பிட்டு முடிச்சு வந்தேன். தீபாவளி மாதிரியே இல்லை இங்கே. ம்ஹூம்.

தேவா எப்படியிருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா? ,இன்று உங்க இன்ஸ்டன்ட் காராசேவு தான்,தீபாவளிக்காக செய்தேன். ஹேமா சொன்ன மாதிரி நானெல்லாம் காராசேவு செய்வேனான்னு நினைச்சேன். ரொம்ப சிம்பிலாக ஈசியா கொடுத்துயிருகீங்க. மிகவும் நன்றி. இவ்வளவு திறமைகளை உள்ள வைத்துக்கொண்டு ஏன் இங்கே வந்து காண்பிக்க மாட்டறீங்க... முடியும் பொழுது வாங்க.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

தேவா எப்படி இருக்கீங்க? காராசேவை தீபாவளிக்கு செய்து சாப்பிட்டோம். மிகவும் நன்றாக வந்தது. நன்றி உங்களுக்கு.