மைதா பணியாரம்

தேதி: July 20, 2007

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா மாவு - 1/4 கிலோ
முட்டை - ஒன்று
வாழைப்பழம் - ஒன்று
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
சீனி - 3/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
ஏலக்காய் - 3 (பொடியாக்கவும்)
எண்ணெய் - 1/4 லி


 

மைதா மாவில் வாழைப்பழத்தை பிசைந்து சேர்க்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றவும்.
தேங்காய்த்துருவல், ஏலக்காய், உப்பு, சீனி சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி 4-5 நிமிடம் போல் காய வைக்கவும்
ஒரு கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.
ஒரு நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு மேலும் ஒரு நிமிடம் போல வைத்திருந்து எடுக்கவும்.
ஒரு முறைக்கு 4-5 பணியாரங்கள் ஊற்றலாம்


சோடாஉப்பும்(ஒரு சிட்டிகை) சேர்க்கலாம். குழந்தைகளுக்கு கொடுப்பதென்றால் சோடா உப்பை தவிர்ப்பது நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த மைதா பணியாரத்தின் படம்

<img src="files/pictures/aa354.jpg" alt="picture" />

ஹாய் தேவா
நலமா இருக்கிங்களா? எங்கே, ரொம்ப நாளா உங்களை இந்தபக்கம் காணவில்லை. உங்களோட இந்த ரெஸிப்பி செய்தேன். எல்லாம் போட்டு கலந்து, டீப் ஃபிரைக்கு பதிலாக, ஷேலோ ஃப்ரைப்போல, கொஞ்சம் எண்ணைய் விட்டு, குட்டி குட்டியா பான் கேக் சைசில் சுட்டு எடுத்துட்டேன். பசங்க இரண்டு பேருக்கும் ரொம்ப பிடித்துவிட்டது இந்த மினி பான் கேக்! யம்மி என்று சொல்லிட்டே சாப்பிட்டார்கள். சூப்பரான இந்த குறிப்புக்கு நன்றி தேவா.

அன்புடன்
சுஸ்ரீ