வேலைக்கு செல்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்

இது ரொம்ப நாள் சந்தேகம்..இங்கேயே நிறைய பெண்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வருத்தப்படுவதாக சொல்கின்றார்கள்...என்னை பொருத்தவரை வேலைக்கு செல்வது என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது..சரி எல்லாரும் சொல்கிறார்களே என்று வேலைக்குப் போன அனுபவமும் உண்டு..வேலைக்குப்போய் வீடு திரும்பினால் வீட்டிலுள்ள வேலைகள்..எல்லாம் முடிந்து மாத இறுதியில்
யோசித்து பார்த்தால் மாத சம்பளம்..அதைத்தவிர வேறு எதையும் நான் சம்பாதித்ததாக எனக்கு தோன்றவில்லை..ஆனால் சுகமான குடும்ப வாழ்கையில் சுவாரசியமே தொலைந்து போன மாதிரி தோன்றியது..என் கணவருடன் பேசக்கூட நேரத்தை எண்ணி எண்ணி ஒதுக்க கஷ்டபடவேண்டும்...எனக்கு இந்த குளிர்சாதனபெட்டியில் உணவினை வைத்து சாப்பிடுவதே பிடிக்காது...அதிலும் எனது கணவருக்கு அதனை கொடுப்பது அறவே பிடிக்காது...ஆனால் அதையெல்லாம் செய்யாமல் வேலைக்கு செல்வது நடக்காத காரியம் ..இதனால் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டேன்.இதெல்லாம் என் குழந்தை பிறப்பதற்க்கு முன்னால்...இப்பொழுது என்னால் குழந்தையை daycare il விட்டுவிட்டு செல்வதென்றால்..என்னால் யோசித்துப்பார்க்கவே முடியாவில்லை..இருவரும் சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற விஷயம் வேறு..ஆனால் அதல்லாமல் வேலைக்கு போக ஆசைப்படுபவர்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்???அது நிஜ ஆசைதானா இல்லை வேறு எதேனும் காரணங்கள் உண்டா??இல்லை நான் தான் இப்படியா???

Hi,
உங்களைப்போல்தான் நானும்.மகன் பிறக்குமுன் வேலைக்குபோனதுதான்.களைப்பாய் வீடு வந்து வீட்டிலும் எதையும் சரியாக கவனிக்காமல் நிறையவே அனுபவித்திருக்கிறேன். நன்றாக சமைத்து,கணவரையும் மகனையும் கவனித்து,..........இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.வருமானம் குறைந்தாலும் வீட்டில் இருப்பதுதான் சுகம்.இருவரும் வேலைக்குபோய் வீட்டையும் நன்றாக கவனிக்க எனக்கும் ஆலோசனை சொல்லுங்க .மீண்டும் வேலைக்கு போவது பற்றித்தான் நானும் யோசித்துகொண்டிருக்கிறேன்.

hello friends
neengal vellaikku poi vantha annubhavathai patri kurineergal.nan mba college first vanthu 1 murai kuda velaikku sellavillai ethanal ennaku vellaiku sellavendum yendru avalaga ullathu athil ulla nirai kuraigal patrri ennaku anubhavam ellai yendrallum migavum asiyaga ullathu ennaku.1 muraiyennum job try saiyavendum yendru.

நான் காலேஜ் முடித்து 3 மாதம் வேலை பார்த்தேன். அதுல ரொம்ப பெரிய அனுபவம் எதுவும் கிடைக்கலை. ஆனா, அப்போவே சுத்தமா நேரம் இல்லாம இருந்துது. இதனால் நான் கல்யாணம் ஆன பிறகு வேலைக்கு செல்ல வேண்டாம் என நினைத்திருந்தேன். இதையே தான் என் கணவரிடமும் சொன்னேன்.

அவர் சொன்னது உனக்கு முதலில் இடம் சமையல் எல்லாம் புதிதாக இருப்பதால் நேரம் சரியாக இருக்கும், ஆனால் போக போக வெறுப்பாக இருக்கும் என்று. நான் இதை இன்று வரை ஒத்து கொள்ளவில்லை. ஆனால், எனது எண்ணம் மாறி விட்டது வேறொரு காரணத்தால். புகுந்த வீட்டினர், பிறந்த வீட்டினரிடமிருந்து வரும் கேள்வி- ஏன் தினமும் ஃபோன் செய்வதில்லை? ஒவ்வொரு ஃபோனும் 1-2 மணி நேரம் நீள வேண்டும். இது எனக்கு சுத்தமா சாத்திய படவில்லை. இதை தவிர என்னால் செய்ய இயலாத சில காரியங்கள் எதையாவது செய்ய சொல்லி அதை நான் மறுத்தால், ஏன் செய்ய முடியாது வீட்டில் 'சும்மா' தானே இருக்கிறாய்? அவர்கள் ஏதாவது சொன்னால், ஏன் அப்படி சொன்னார்கள் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என மனம் அலைபாய்கிறது. தையல், சமையல், கைவேலை என எத்தனை கற்றுக் கொண்டாலும் கூட பெரிய மாற்றம் ஏதும் இல்லை. கணவருமே மிக நல்லவர் என்றாலும் கூட, வேலைக்கு செல்லாமல் உன்னை போல் இருந்தால் எவ்வளவு ஜாலி என்ற எண்ணம் அவருக்கு இல்லாமல் இல்லை! எத்தனை காலம் ஆனாலும் 'வீட்டில் இருந்தால் வெட்டி தான், அதனால் ஜாலி' என்ற இந்த எண்ணம் மாறும் என தோன்றவில்லை :-(

இதே வேலைக்கு சென்றால், இருக்கும் கொஞ்ச நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் நல்ல விதமாக மட்டுமே பேச தோன்றும். வீணான எண்ணங்கள் நம்மை அண்டாது. அதற்கு நேரம் இருந்தால் தானே!

குழந்தையை டே கேரில் விட கஷ்டமாக தான் இருக்கும். ஆனால், நம்முடைய மீதி நேரத்தை குழந்தையிடம் நல்ல விதமாக செலவழித்தால் போதும் என தோன்றுகிறது. டே கேரில் இருப்பதால் சக வயது குழந்தைகளுடன் பழகும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கிறது. அப்பாவை போல் தான் அம்மாவும் வேலைக்கு செல்கிறார், நமக்காக தான் கஷ்டப்படுகிறார்கள், நாம் சமர்த்தாக இருக்க வேண்டும் என கூட தோன்றலாம். மற்ற குழந்தைகளின் அம்மா வேலைக்கு செல்லும் போது என் அம்மா மட்டும் செல்லவில்லையே, சென்றால் எவ்வளவு பெருமையாக இருக்கும்னு நானும் சிறு வயதில் நினைத்து இருக்கிறேன். இப்போது அப்படி எல்லாம் எண்ணவில்லை என்றாலும் என் அம்மாவின் சாதுர்யத்திற்கு வேலைக்கு சென்று இருந்தால் எந்த அளவு அவர் திறமைகள் கூடியிருக்கும் என ஆதங்கமாக இருக்கிறது. வேலைக்கு செல்லவில்லை என்றால் நெருங்கிய நண்பர்கள், சில உறவினர்கள் தவிர வெளி உலகம் அறிய முடிவதில்லை.

நாம் வேலைக்கு செல்லவில்லையானால், அடுத்த தலைமுறைக்கும் ஆண்கள் என்றால் வெளி வேலை, பெண்கள் என்றால் சமையல்/வீட்டு வேலை என ஒரு மாயை உருவாகுவதாக எண்ணுகிறேன்.

எனக்கு தெரிந்த பெண் ஒருவர், விஞ்ஞானி. அவர் வேலையில் முன்னேற வேண்டும் என கல்யாணமே வேண்டாம் என மறுத்து விட்டார். இது போன்ற சிலருக்கு வேலை-ஆசை இருக்கிறது. பல பேர் நிர்பந்தம் காரணமாகவே செல்வதாக எண்ணுகிறேன். ஆனால், அது நல்லது எனவும் கருதுகிறேன்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

நீங்கள் சொன்னது உண்மை தான்.....என்னதான் செய்தாலும் நீங்கள் சொன்னதுபோல் நம்மை அங்கீகரிக்கவே மாட்டார்கள்.... இருந்தாலும் நான் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.......என்னிடம் ஏளனம் செய்யாத வண்ணம் என்னை நானே வீட்டிலும் ஆக வைத்துக் கொள்கிறேன்......ஆக நெஜமாகவே வேலைக்கு செல்ல விரும்பும் பெண்ணைப் பார்த்துவிட்டேன்......ஆனாலும் மறைமுகமாக வேறு ஏதோ ஒரு காரணத்தால் தான் வேலைக்கு போகிரார்கள்..நான் வீட்டிலும் சும்மா இருப்பதில்லை...எனக்கு நானே எதாவது வேலையை கொடுத்துக்கொன்டே இருப்பேன்....நான் வேலைக்குபோனால் கூட இவ்வளவு விஷயங்களை படித்திருப்பேனா என்றால் சந்தேகம் தான்...எண்ணைபொருத்தவரை படிப்பு என்பது வேலைக்கு செல்லாவிட்டால் வீனாகிவிடுமென்பது தவரான கருத்து....நிறைய புத்தகங்கள் படிக்கலாம்..நிரைய பேருடன் பழகலாம்...and gain a loot by browsing ....oops will write later on

எனக்கும் அதே சந்தேகம்தான். வேலைக்கு போவதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் வெளியே போய் பழகும்போதுதான் நமக்கு நிறைய விஷயங்கள் தெரிய வரும். நான் வேலைக்கும் போய்க்கொன்டிருக்கிறேண். வீட்டையும் கவனித்துக்கொள்கிறேன். என்னவர் வெளியே சப்பிட மாட்டார். தினமும் இரவு நேரங்களில் தேவையான காய்களை நறுக்கி குளிரசாதன பெட்டியில் வைத்துவிடுவேன். காலையில் சமைக்கும் பொழுது எளிதாக இருக்கும். வேலைக்கு போகும் பொழுது ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். எதையும் எதிர் நோக்கும் தன்மை வரும்.

sugu

dear thalika and hema,Vanakkam
unkal iruvarin mailkalaum padithen.Naan.Unkalaip pol ellam athikam padikka villai.Anal thoziz thurail nirrya sadikka vendum ro,,,,,,,,,,,,,,,mpa,rompa asai patten.Enakku ookkam koduppavarum yarum illai,vazthupavarum yarum illai.Ippozutu en vayathu 48.Anal en 2makankalym nanku kavanithu nallavarkalaka valrthi vittom endra (peryivar softwarilum siryavar bio tech mudihu vittu bio techilum job il irukkirarkal.)thirupthi ullathu. Oru kudumpathilkandippaka velaikku sendralthn kudumpam nadatha mudium endral velaikk povathil thappe kidaiyathu.Anal ippaum veetil iruntha padiye ethavathu thozil seithu sathikka vendum enpathu en theeratha aasaiyakave ullathu.Penkal akiya naam oru muzam poovkkum pottukkum yarium nambi irukka koodathenpathu en thazmaiyana karuthu.Rompa bore adithu vitteno?En kruthukkalai solla vazi vakuthu koduthulla thiru Babu sir avarkalukkum padikkum unkalukkm matrum anaivarukkm en manap poorvamana nandrikal.

நீங்கள் கூறுவதும் சரி தான் thalika! (உங்க பெயரை தமிழில் எப்படி எழுதுவது?) ஆனால், மற்றவர் நம்மை பற்றி நினைப்பதற்காக சில காரியங்கள் செய்கிறோம், அதில் இதுவும் சேர்ந்து விட்டது என்னை பொறுத்த வரை. :-(

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

அப்படிங்கறீங்க?? சரி, உங்களால முடியுதுனா, என்னாலயும் சமாளிக்க முடியும்னு நினைச்சு, உங்களை என் மானசீக குருவா நினைச்சுக்கறேன்! :-)

மணி பாரதி அவர்கள் சொல்வது போல், எதிர்காலம் நமக்கு என்ன வைத்திருக்கிறதுனு யாராலயும் சொல்ல முடியாது. அதுக்காகவாவது வேலைக்கு செல்ல வேண்டும்.

அப்புறம், நீங்க என்ன நாங்க நிறைய படிச்சுருக்கறதா சொல்லிட்டீங்க! அனுபவம் தான் பெரிய படிப்பு என்னை பொறுத்த வரை. மற்றதெல்லாம் அப்புறம் தான்! :-)

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

Hai to All...
என்னை பொருத்தவரையில் பெண்கள் வேலைக்கு செல்வது அவசியம் என்றே கூறுவேன்...காரணம் பண அவசியத்திற்க்காக அல்ல...நிறைய காரணங்கள் உண்டு...வேலைக்கு செல்வதனால் பல பயன்கள் உண்டு...
1. தன்னம்பிக்கை கிடைக்கும்.
2. தனிமை தெரியாது.
3. பல தேவையில்லாத விஷயங்களை பற்றி நினைக்க நேரம் இருக்காது.
4. பல புது விஷயங்களை பற்றி தெரிந்துக்கொள்ள வாய்ப்பு.
5. இன்னமும் பல........

வீட்டில் இருந்துக்கொண்டு நாமும் நம் குழந்தைக்களும் மட்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு இருப்பதனால் இருவருக்கும் ஒரு பயனும் இல்லை. வேலைக்கு செல்வதனால் நமக்கும் ஒரு பிடிப்பு கிடைக்கும். நம் மீதே நமக்கு நம்பிக்கை ஏற்படும். கணவ்ருக்கும் மற்றவர்களுக்கும் நம் மீது ஒரு மரியாதை ஏற்படும். நம்மை நாம் idle ஆக வைக்காமல் இருக்க முடியும்.

ஆனால் ஒரு விஷயம். குழந்தையை அதற்கு மூன்று வயதாகும் வரை தாய் அதனுடையே இருந்து கவனித்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்பது என் கருத்து. காரணம் Foundation நன்றாக இருந்து விட்டால் நமக்கு பயம் தேவையில்லை. குழந்தைக்கும் நம் மீது பாசம் இருக்கும். அதற்கு மூன்று வயதாகும் போது ஓறளவிற்கு எல்லாம் புரியும். அதனால் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு நாமும் வேலைக்கு செல்லலாம்.
நமக்கும் tension இல்லை. குழந்தைக்கும் அம்மா இல்லாத குறையில்லை.

நான் திருமணத்திற்கு ஐந்து வருடம் வேலைக்கு சென்றுவந்துள்ளேன். அந்த அனுபவம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.இப்போது மூன்று வருடமாக என் குழந்தையுடன் வீட்டில் உள்ளேன். இதுவும் எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் முன்பு இருந்த ஒரு தைரியம் இப்போது குறந்துவிட்டது. எதற்கெடுத்தாலும் யாரையாவது எதிர்பார்க்கவேண்டியுள்ளது. பணத்திற்க்காக அல்ல. மற்ற விஷயங்களுக்கு.

உறவினர்கள்(அப்பா, அம்மா, மாமனார், மாமியார் அல்ல): வேலைக்கு செல்லும் போது இருந்த அந்த மரியாதை இப்போது இல்லை. அப்போது யாராவது காலேஜ் சேர்க்க, படிப்பில் ஏதவது doubts இருந்தால் என எப்போதும் நம்மை தொடர்பு கொள்ளும் அவர்கள், வேலை இல்லாவிட்டால் மாறிவிடும். அதேபோல் சமையல், வேலைக்கு செல்லும் போது சமைக்க தாமதாகிவிட்டால் சுலபமாக மன்னித்டு விடுவார்கள். இல்லையென்றால், "விட்டுல சும்மா தானே இருக்க, சமைக்க இவ்வளவு நேரமா" இப்படி நிறைய...[இதனைக்கும், விட்டுல சும்மா ஒன்னும் இல்லை, குழந்தை வளப்பது என்பது எவ்வளவு பெரிய வேலை என்பது யாருக்கும் தெரிவதில்லை, அதுவும் குழந்தை பிறந்து அதற்கு ஒரு வருடம் ஆகும் வரை இருக்கும் வேலை- அந்த காலத்தில் கூட்டு குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து அந்த குழந்தையை வளர்ப்பார்கள்- அதனால் வேலை கம்மி]

எதிர்காலம்: எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நமக்குன்னு ஒரு வேலை என்றைக்கும் தேவை.

வேலைக்கு செல்வது மன தைரியம் கொடுக்கும். மதிப்பு கொடுக்கும். நமக்கும் திருப்தி(Satisfaction) கிடைக்கும். நாமே நிறைய பேரை(நம் கணவரையும் கூட) ஊக்கப்படுத்தலாம்.

நல்லா குழப்பிட்டேன்னு நினைக்கிறேன். என்னால் தொகுக்க(எடிட் செய்ய) முடியவில்லை. எனக்கு தோனினதை எழுதிவிட்டேன்.

நன்றி...

நன்றி...

Aanpu hema,
en karuthukku matippu koduthu ezithiyatrkku rompa nandri.Naan ipathaan mail ellam seithu pazaki ullen .Adhum arusuvail sernthuthan en makanidam kettu pazakik kondullen.Atharkkul enakku niraya kutti thozikal sernthu vittirkal unkalodu sernthu naanum rompasinnap pen akivitten.Etho en ariukku ettiyathai unkalukku solkiren.meendu santhippom.unkalai patri sollaum.

மேலும் சில பதிவுகள்