தேதி: July 24, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ஸ்கிம்டு பால் பவுடர் - 2 கப்
மைதா - 1 கப்
விப்பிங் கிரீம் (பவுடர்) - 1 கப்
பால் - 1 கப்
பேகிங் பவுடர் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 3 கப்
தண்ணீர் - 7 கப்
எண்ணை - பொரித்தெடுக்க
சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
தேவையானால் வாசனைக்கு ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை, குங்குமப்பூ ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் ஸ்கிம்டு பால் பவுடர், மைதா, விப் கிரீம், பேகிங் பவுடர், பால் எல்லாம் ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவை இருபது நிமிடம் ஊறவிடவும்.
பின்னர் மாவை நெல்லிக்காய் அளவு எடுத்து ஓவல், உருண்டை என விருப்பமான வடிவில் உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
பானில் எண்ணை ஊற்றி சூடானதும் மிதமான தீயில் உருண்டைகளை சிவக்க பொரித்தெடுத்து சூடான பாகில் போட்டு ஊறவிடவும்.
சூடான ஜாமுன் மீது ஒரு பந்து வெண்ணிலா ஐஸ் கிரீம் போட்டு பரிமாறலாம்.
(பவுடர்) விப்பிங் கிரீம் பதிலாக திரவமாக கிடைக்கும் ஃப்ரெஷ் கிரீம் பயன் படுத்தலாம். அப்படி செய்தால் பாலை தவிர்த்து விட வேண்டும்.
<br />
<img src="files/pictures/jamoon.jpg" alt="Yummy jamoon" />
Comments
gr88
perai ketkumbodhe seidhu saapidalaam pola thondriyadhu..adhilummindha picture ai paarthjaal appappa naakil neer oorugiradhu..idhai neramkidaikumbozhudhu seidhu paarthu ungalukku feedback anuppugiren..azhagaaga recipe anuppiydharkku thanx very much
மிகவும் நன்றி
Hi thalika,
மிகவும் நன்றி,தாங்கள் இந்த recipe யை பாராடியமைக்கு.கண்டிப்பாக செய்து பார்த்து தங்கள் கருத்தை சொல்லவும்...
என்ன
hi madam ஸ்கிம்டு பால் பவுடர் விப்பிங் கிரிம் என்றால் என்ன
Hi
Hi Kajana,
ஸ்கிம்டு பால் பவுடர் என்றால்(fat free milk powder) ,பாலில் இருந்து கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பவுடர் ஆகும் . ஸ்கிம்டு பால் பவுடருக்கு பதிலாக ஃபுல் கிரீம் மில்க் பவுடர் கூட பயன்படுத்தலாம் .விப்பிங் கிரீம் ஆனது ஐஸ் கிரீம் செய்வதர்க்கு, கேக், ஃபுரூட் சாலட் போன்றவைகளுக்கு டாப்பிங் செய்ய பயன் படுத்துவார்கள். பலப்பொருள் அங்காடியில் இவை இரண்டுமே கிடைக்கும்.விப்பிங் கிரீம்(Whipping Cream) என்ற பெயரிலேயே கிடைக்கும் .கேக் ,மற்றும் ஐஸ் கிரீம் செய்வதர்க்கான பொருட்கள் வைக்கப் பட்டிருக்கும் இடத்தில் அடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு என் பதில் கொஞ்சமாவது உதவியிருக்கும் என நம்புகின்றேன் .
நன்றி
shami