இட்லி முட்டை குருமா

தேதி: July 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

தேங்காய் - ஒரு மூடி
சோம்பு - 2 தேக்கரண்டி
மல்லி - 2 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6 பல்
முட்டை- 2
எலுமிச்சம்பழம் - ஒரு மூடி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
உருளைக்கிழங்கு - 2
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு


 

தேங்காய், சோம்பு, சீரகம், மல்லி சேர்த்து அரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாயை நீளமாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
அரைத்த மசாலாவை ஊற்றி கொதிக்க விட்டு உப்பு சேர்க்கவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும். உருளைக்கிழங்கை போடவும்.
5 நிமிடம் அப்படியே கொதிக்க விடவும். (கரண்டியால் கலக்கக்கூடாது)
மேலும் 15 நிமிடம் கொதித்ததும் இறக்கவும். இறக்கியதும் எலுமிச்சம்பழம் பிழியவும்.


இந்த குருமாவை இட்லிக்கு தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இட்லி முட்டை குருமா வித்தியாசமானா சுவையில் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.நன்றி.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

thengai sombu malli varuthu arraikanuma