முருங்கைகாய் ரசம்

தேதி: August 2, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

 

துவரம்பருப்பு - கால் கப்
முருங்கைகாய் - ஒன்று
புளி - ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை கரண்டி
மல்லி - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 2
தேங்காய் துருவல் - ஒரு தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

முருங்கைக்காயை நறுக்கவும். துவரம்பருப்பில், மஞ்சள்பொடி, 2 கப் தண்ணீர், நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து வேக விடவும். மிளகு, சீரகம், மல்லி, பூண்டு தட்டி வைக்கவும்.
4 முருங்கைக்காய் துண்டுகளை சதையை மட்டும் வழித்து பருப்பு தண்ணீரில் சேர்க்கவும். தக்காளியை புளியுடன் சேர்த்து கரைக்கவும்.
வாணலியில் கடுகு, வரமிளகாய், தேங்காய் துருவல் தாளிக்கவும். கரைத்த புளி, தக்காளியை ஊற்றவும். 5 நிமிடம் கொதித்ததும் தட்டி வைத்திருக்கும் ரசப்பொடியை சேர்க்கவும்.
5 நிமிடம் கொதித்ததும் பருப்பு தண்ணீர் மீதி முருங்கைக்காய் துண்டுகள் சேர்த்து கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை மல்லி சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

vanakkam malathi avargaleh..murungakkai ondrutaan kuduttullir but 4 tundugal endru potturikirirgaleh...puriyavillai epppadi?

மாலதி மோகன் அவர்களுக்கு, உங்கள் முருங்கைக் காய் ரசம் மிகவும் சுவையாக இருந்தது.

god is my sheperd

ஆகா அருமையக உள்ளது
உங்கள் முருங்கைக்காய் ரசம்.
rahini

உங்களுக்கும் தாமதமான நன்றிகள்தான் நந்தினி!!...என்னுடைய குறிப்புகளில் முருங்கைகீரைசாறும் ரொம்ப நன்றாக இருக்கும். ட்ரை பண்ணிப்பாருங்களேன்.

நான் செய்யல மேடம் இன்னும் இந்த முருங்கைகாய் ரசத்தை ராகினி அவங்களுக்கு நன்றி சொல்வதற்கு பதிலாக எனக்கு சொல்லிவிட்டீங்க போல.

எஸ்...... ராகினிக்கு நன்றி சொல்வதற்கு பதிலாக தவறாக உங்களுக்கு சொல்லிவிட்டேன். அதனால் என்ன இப்ப சொல்லிட்டா போச்சி. முருங்கைகாய் ரசம் செய்துபார்த்து பாராட்டியதற்கு நன்றி ராகினி!..

சூப்பர் ரசம் இன்னைக்கு. எவ்வளவு டேஸ்ட்.. உங்க சமையல் சமைக்கவும் ரொம்ப ஈஸியா இருக்கு. நண்டு கிரேவி இன்று உங்கள் முறையில்தான் செய்தேன். நல்லாயிருக்கு உங்க கை பக்குவம்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா..!!

1 . ஈஸியான செய்முறை,
2. சத்தான இங்க்ரிடியன்ட்ஸ்,
3. குறைவான எரிபொருள்,

இது மூன்றையும் என் சமையலில் இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்.

நண்டு க்ரேவியும் ஈஸியாக செய்துவிடலம்.
பழ அவல் ட்ரை பண்ணி பாருங்களேன் தனிஷா.... நன்றாக இருக்கும்.

இந்த முருங்கைக்காய் ரசம் ரொம்பப் பிடித்திருந்தது. இரண்டு முறை செய்துவிட்டேன்.

இப்பதான் உங்க பதிவை பார்த்தேன் ஃபெல்சியா. பாராட்டுக்கு நன்றிகள்!!.. இவ்வளவு தாமதமாக நன்றி சொல்வதற்கு வருந்துகிறேன்.