ராமேஸ்வரம் சட்னி

தேதி: August 4, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - 4
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
தேங்காய் - ஒரு மூடி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு


 

ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய் போட்டு வறுக்கவும்.
பருப்பு வகைகள் சிவந்ததும் துருவிய தேங்காயை போட்டு வறுக்கவும். இதை உப்பு சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.
அரைத்த சட்னியை வாணலியில் போட்டு நன்றாக வதக்கவும். கெட்டியானதும் இறக்கவும்.


இந்த சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும். கலந்த சாத வகைகளுக்கு தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தோழி,தலைப்பைப்பார்த்ததும் அட நம்ம அண்டை ஊர் என்றதும் உடனே குறிப்பைப்பார்த்து இன்று இந்த சட்ணி செய்தேன். பெருங்காய வாசனையுடன் தோசையுடன் சாப்பிட நன்றாக இருந்தது.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஒரு முறை ராமேஸ்வரம் சென்ற போது ட்ரைனில் சாப்பிட இந்த சட்னியும் கலவை சாதமும் செய்து எடுத்து சென்று இருந்தேன். பிள்ளைகளுக்கு நன்றாக பிடித்து போய் இந்த சட்னிக்கு ராமேஸ்வரம் சட்னி என்றே பேர் வைத்து விட்டார்கள். இது இட்லி, சாத வகைகளுக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.
சாதிகா..!! நீங்க ராமேஸ்வரம் பக்கமா? அந்த கடல் மேல் ரயில் பயணம் நல்ல த்ரில்லிங்க் - ஆக இருந்தது........ பின்னூட்டத்திற்கு நன்றி..!!

தோசைக்கு இந்த சட்னி சூப்பரா இருந்தது மேடம்.நன்றி
செல்வி

சவுதி செல்வி