மாங்காய் சாம்பார்

மாங்காய் சாம்பார் செய்வது எப்படி ??
யாராவது சொல்லுங்களேன் .........

அனிதா

(150 கிராம்) துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, குழைய வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய நெல்லிக்காயளவு புளியை ஊற வைத்து கரைத்து, வடிகட்டி மசித்த பருப்புடன் சேர்க்கவும்.
1 1/2 மேசைக்கரண்டி சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
புளி வாசம் போன பின், 1 மாங்காயை வெட்டி (கொஞ்சம் பெரிதாக) சாம்பாரில் போடவும். 1 கொதியில் மாங்காய் வெந்து விடும்.
இறக்கி விட்டு, 1 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கி, 1/2 தேக்கரண்டி கடுகு, சிறிது பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.
மாங்காய் சாம்பார் 8 திக்கும் மணக்கும் (குறிப்பாக ஏன் மாங்காய் சாம்பார்? விசேஷமா?)
வாழ்த்துக்கள், நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

டியர் செல்வி ,

உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி. இந்த முறை மாங்காய் வாங்கினேன். சும்மா செய்யலாமே என்று கேட்டேன். மிச்ச படி விசேஷம் எதுவும் இல்லை.......

நாளை சாம்பார் செய்கிறேன். வாசனை பாண்டிச்சேரிக்கு வந்ததா என்று சொல்லுங்கள் .....ஹாஹாஹா :)

அனிதா

hi

மாங்காய் சாம்பாரில் ஏற்கனவே,புளிப்பு இருக்கும் அல்லவா? பிறகு,எதற்கு புளி? ரொம்பவும் புளிப்பு அதிகம் இருக்கும் அல்லவா?

ஹாய் அனிதா,
இன்னும் வாசனை இங்கு வரல. அதனாலென்ன? மாங்காய் வந்தபின் விசேஷம் வரட்டுமே. வாழ்த்துக்கள், நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் விமலா,
எப்படியிருக்கீங்க? புளி ஊற்றினால் தான் சாம்பார், இல்லையெனில் அது கூட்டு. மாங்காயில் புளிப்பு இருப்பதால் தான் புளியின் அளவை மிகக் குறைவாகக் கொடுத்துள்ளேன். தக்காளியும் சேர்க்கவில்லை. சில மாங்காய்கள் புளிக்கவே புளிக்காது, அப்படியிருக்கும் பட்சத்தில் கொஞ்சம் அளவு புளியாவது சேர்த்தால் தான் சாம்பார் ருசியாக இருக்கும். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நான் நலம். நீங்கள் நலமா? எனக்கு புளிப்பு பிடிக்கும்!:)
ஆனால் என் அய்த்தானுக்கு புளிப்பு என்றாலே அலர்ஜி
:( அதானால்தான் கேட்டேன். நான் செய்து விட்டு சொல்கிறேன்.
அன்புடன் விமலா

ஹலோ செல்வி

எனது தாமதமான பதிலுக்கு மண்ணிக்கவும். மாங்காய் சாம்பார் அருமையாக இருந்தது.
மிக்க நன்றி.

அனிதா

hi

உங்க மாங்கா சாம்பார் எங்க அம்மா பண்றது போலவே இருக்கு. படிக்கும் போதே நா ஊறுது.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹாய் ஹர்ஷினி,
எப்படியிருக்கீங்க? நீங்களும் என்ன அம்மான்னே கூப்பிடலாம், ஆனா உங்க வயசு 27க்குள்ள தானிருக்கணும் :-). வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் அனிதா,
மாங்காய் சாம்பார் அருமையாக செய்ததற்கு வாழ்த்துக்கள். இனிமேல் யாருக்கேனும் மாங்காய் சாம்பார் வேண்டுமானால், உங்க வீட்டுக்கு அனுப்பிடலாம். சரியா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்