பட்டூரா

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

மைதாமாவு - 2 கப்
தயிர் - அரை கப்
சமையல் சோடா - அரைத் தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரித்து எடுக்க


 

மைதா மாவை சமையல் சோடாவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
தயிருடன் சர்க்கரைச் சேர்த்துத் தயிரைச் சிறிது சூடு செய்து கொள்ளவும்.
மைதாமாவில் உப்பு, உருக்கிய நெய், தயிர், சிறிதளவு வெது வெதுப்பான நீர் சேர்த்து பூரிமாவு பதத்திற்கு பிசைந்துகொண்டு 4 மணி நேரம் ஊறவிடவும்.
பெரிய அப்பளங்கள் போல் இட்டு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சன்னாவுடன் சேர்த்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

பட்டூரா மிகவும் சுவையாக இருந்தது. Deep fry பண்ணாது எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தேன். நன்றாக இருந்தது. சன்னா மசாலாவிற்கு ஏதுவான combination:)வாழ்த்துக்களும் நன்றியும்.
-நர்மதா :)

Dear Madam
I think Kodhumai mavvu is missed in the above recipe. I tried it in the above way, but it did not come out well. Then I searched in the net and found that atta mix also needs to be added along with the above recipe.

Aparna