உடல் எடை குறைவதற்கு:

உடல் எடை குறைவதற்கு:

1)இலகுவாக ஒரு கிழமைக்கு ஒரு பவுண்ட் நிறை வீதம் நீங்கள் குறைக்க விரும்பினால், உங்களிற்கு தினமும் எவ்வளவு கலோரி தேவை என்பதை கணக்கிடுங்கள்*. அதிலிருந்து 500 கலோரியை கழித்துவிட்டு மீதமுள்ள கலோரிக்கேற்றவாறு விரும்பிய உணவினை உட்கொள்ளுங்கள்.

*உங்களிற்கு தினமும் எவ்வளவு கலோரி தேவை என்பதை பின்வரும் முறையில் கணிக்கலாம்.(பெண்களுக்கு)
நீங்கள் உடற்பயிற்சி செய்யாதவராயின்:(Sedentary)
உங்கள் எடை (பவுண்ட்ஸில்) X 12 = உங்களிற்கு தேவையான கலோரி

நீங்கள் குறைவான உடற்பயிற்சி செய்பவராயின் : (Light Exercise)
உங்கள் எடை (பவுண்ட்ஸில்) X 13 = உங்களிற்கு தேவையான கலோரி

நீங்கள் அளவான/சாதாரணமான உடற்பயிற்சி செய்பவராயின் : (Moderate Exercise)
உங்கள் எடை (பவுண்ட்ஸில்) X 14 = உங்களிற்கு தேவையான கலோரி

நீங்கள் சிறிது கடினமான உடற்பயிற்சி செய்பவராயின் : (Moderate Heavy Exercise)
உங்கள் எடை (பவுண்ட்ஸில்) X 15 = உங்களிற்கு தேவையான கலோரி

நீங்கள் கடினமான உடற்பயிற்சி செய்பவராயின் : (Heavy Exercise)
உங்கள் எடை (பவுண்ட்ஸில்) X 16 = உங்களிற்கு தேவையான கலோரி

2)ஒரு கிழமைக்கு இரண்டு பவுண்ட் நிறை வீதம் நீங்கள் குறைக்க விரும்பினால் நாளொன்றுக்கு மேலும் 500 கலோரி விரையமாகும்படி உங்களது உடற்பயிற்சியின் அளவை கூட்டுங்கள்.

3) நிறைய நார்ச்சத்து உள்ள உணவுகளை (fiber content food)உட்கொள்ளுங்கள்.

4) நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

ஒரு கிழமைக்கு 1 அல்லது 2 பவுண்ட்ஸ் வீதம் குறைப்பது ஆரோக்கியமானது. இதற்கு மேல் குறைப்பதற்காக மேலும் உணவை குறைத்தால் உங்களது உடல் மெட்டபோலிஸம் பாதிப்படையும். அத்தோடு தலைசுத்தல், மயக்கம், சோர்வு எல்லாம் வரும். எனவே சீராக எடையை குறைப்பது நல்லது.

(கலோரியை பார்த்து, பார்த்து சாப்பாட்டை நிறுத்து, நிறுத்து சாப்பிடுவது ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். இதுக்கு குண்டாவே இருக்கலாம் எண்டும் நினைக்க தோன்றும். ஆனால் போக போக பழகி விடும்)

உணவுகளின் கலோரி அளவினை அறிவதற்கு எத்தனையோ இணைய தளங்கள் உள்ளன. [அறுசுவையிலும் இதற்கான பக்கம் ஒன்றை கொண்டு வரப் போவதாக பாபு அண்ணா சொன்ன நினைவு:)] அத்தோடு நாம் வாங்கும் packet அல்லது canned உணவுப் பொருட்களிலும் Nutrition Facts போட்டிருப்பார்கள். எனவே எமக்கு தேவையான கலோரி அளவை கணிப்பது சுலபம்.

இந்த குறிப்பு உண்மையிலேயே எனக்கு பயனளித்தது. அதனால் தான் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த calculations பற்றி இங்கு தொலைக்காட்சியிலும் (KCTSஇல்)பல programmes பார்த்து இருக்கிறேன்.

Green Teaஉம் உடல் மெலிவதற்கு நல்லது என்று கேள்விப்பட்டேன். நிறைய இணய தளங்களிலும் பார்த்தேன்.அத்தோடு இது Cancer வராமல் பாதுகாக்கும் எண்டும் வாசித்தேன். ஆனால் இதற்கு விஞ்ஞானபூர்வமான விளக்கம் இல்லை. யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்.

எல்லாரும் இப்படி ஏதாவது பண்ணி ஸ்லிம் பியூட்டி ஆகி விட்டால் கஷ்டம்தான். :))

-நர்மதா

பி.கு: யாராவது இதை முயற்சித்து பார்த்து விட்டு பயனளித்ததா என்று கூறுங்கள்.:)
3500Calories = 1 pounds (so => 7days x 500Cal = 1pound)
1kilo = 2.2pounds

தங்களின் விளக்கம் மிகவும் பயனுள்ளது. நிச்சயம் அனைவருக்கும் பயன்படும். க்ரீன் டீ கேன்சர் வராமல் தடுக்கும் என்பது உண்மைதான். அதில் Aniti Oxidants அதிகம். ஆண்டி ஆக்ஸிடெண்ட்ஸ் அதிகம் உள்ள Broccoli போன்றவயும் அதே பலன்களை தரும். க்ரீன் டீ உடம்பு குறைக்கவும் உதவும். டீ அருந்துவதால் உடம்பில் சேரும் கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது.

அருமையான விளக்கம் நர்மதா...வாழ்த்துக்கள்...
தேவா க்ரீன் டீ குடிக்க கஷ்டமா இருக்கே??taste நல்லவே இல்ல....அது brewing பன்ரதுக்கு வேர ஏதும் method இருக்கா??

தளிகா,
உடம்புக்கு எதெல்லாம் நல்லதோ அதெல்லாம் நிச்சயம் டேஸ்ட் அதிகம் இல்லாததா தான் இருக்கு. என்ன பண்றது? டேஸ்டியா இருக்கறதுன்னு சாக்லெட், ஐஸ்க்ரீம் , நட்ஸ் ,ஸ்வீட்ஸ் , பிரைட் ஐட்டம்ஸ் , ரோஸ்ட் னு சொல்லிட்டே போகலாம். ஆனால் எதுவுமே உடம்புக்கு நல்லது இல்லை. வெயிட்தான் போடும். க்ரீன் டீ தயாரிக்க, சின்ன டீ கப்பில் கொதிக்கற தண்ணீர் ஊற்றி அதில் க்ரீன் டீ பேக்கை போட்டு வெச்சு ஒரு சின்ன தட்டால் மூடிடுங்க. கொஞ்ச நேரம் கழித்து குடிங்க. வெது வெதுப்பாக இருந்தால் உடனே குடிச்சுடலாம். மிகவும் சூடாக இருந்தால் சிப் சிப்பாக குடிக்கும்போது அதன் டேஸ்ட் நன்றாக இருக்காது. பால் சேர்க்கக்கூடாது. டீத்தூளை விட பேக் வசதி. இதற்கு பதில் Broccoli சாப்பிடுவது ஈசி. நான் அதில் சூப் பன்ணிடுவேன். மணத்தக்காளி சாறு டேஸ்ட்டில் ரசம் போல நன்றாக இருக்கும். செய்முறை விரைவில் எழுதுகிறேன். Broccoli ஐ ஸ்டீம் செய்தும் சாப்பிடலாம். இரண்டிலும் ஒரே குணங்கள்தான் உள்ளன.

ஹலோ தேவா & தளிகா, எப்படி இருக்கிறீர்கள்? உங்களது வாழ்த்துக்களிற்கு மிக்க நன்றி. க்ரீன் டீ குடிப்பதால் உள்ள நன்மை தெரியாமலேயே நான் அதை குடிக்க ஆரம்பித்தேன்.(அதை குடிச்சா மெலிவீங்க எண்டு யாரோ சொன்னதாலே) இப்பதான் அதோட விளக்கம் தெரியுது. தாங்ஸ் தேவா. ஆரம்பத்தில எனக்கும் சரியா ப்ரூ பண்ணத் தெரியல்லை. இப்ப ஓகே. ஒரு கப்ல தண்ணீர் எடுத்து 1 நிமிடம் மைக்ரோவேவ்ல வச்சிட்டு (தண்ணீர் பொங்க பொங்க கொதிக்ககூடாது. வார்ம் ஆக இருந்தால் போதும்.) அதனுள் டீ பக்கட்டைப் போட்டு 3 நிமிடங்கள் வைத்திருந்துவிட்டு எடுத்து விட வேண்டும். இதற்கு பாலோ சீனியோ சேர்ப்பதில்லை. இப்படி செய்தால் கசக்காது. நானும் ஆரம்பத்தில நல்ல கொதி தண்ணீருக்குள்ள டீ பக்கட்ட போட்டுட்டு நல்லா ஊறவிட்டு டீயை வீணாக்கபடாது எண்டு பிழிந்து விட்டுதான் குடிப்பேன். அது கஷாயம் போல இருக்கும். பிறகுதான் இப்படி செய்ய கற்றுக் கொண்டேன்.:)

மிகவும் சிற்ப்பான விளக்கம். தகவலுக்கு நன்றி. இடுப்பு சதை குரைக உடர்பய்ரிசி இருக்கா?

paapu

paapu

கிரீன் டீயின் விளக்கத்திற்கு நன்றி. கிரீன் டீயுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாமா.

god is my sheperd

the name is ice lemon tea. can you try . no problem, but you dring before keep the fridge. Alhamdhulillah

alhamdhulillah

fresh Curry leaves juice 1/2glass

jaggery surp 2teaspoon(sweet little good)

lemion juice 1teaspoon

inth juice daily kuddithal weight losse augum 2month 10kg kamiyagum. little oil food sweet nooooooooo eat.

helping to my friends

நர்மதா, உங்களின் விளக்கம் மிக அருமையாக இருக்கிறது. உழைப்புக்கு ஏற்ற உணவு வகைகளை சாப்பிடவும், அந்த உணவினால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளவும் வேண்டும். என் நண்பருக்கு தூக்கத்தின் போது குறட்டை விடும் வழக்கம் இருந்திருக்கிறது. சமீபத்தில் அவர் குறைந்த அளவு எண்ணெய், மிகக் குறைந்த அளவு உப்பு, மிகக் குறைந்த அளவு சர்க்கரை (வெள்ளைச் சர்க்கரை விஷம் என்பதை இங்கு நினைவில் கொள்ளவும்) எடுத்துக் கொண்டார். மேலும் பாலை அறவே தவிர்த்து விட்டார். ஆள் தற்போது வெயிட் குறைந்து விட்டார். இன்று தூக்கத்தில் குறட்டை விடாமல் படு ஆரோக்கியமாய் உறங்குகிறார்.

உடல் தன் சம நிலையை இழக்கும் போது நோய் உண்டாகிறது. சம நிலை குறைய உணவுப் பழக்கமே காரணம். காய்கறிகள், பழங்கள், குறைந்த அளவே எண்ணெய், முற்றிலுமாக தவிர்க்கப்பட்ட உப்பில்லா உணவு, நாட்டுச் சர்க்கரை இவற்றை உணவில் சேர்ந்துக் கொண்டால் நோய் அண்டவே அண்டாது என்பது என் நண்பரின் அனுபவம்.

நர்மதா உங்கள் விளக்கம் மிகவும் அருமையானது எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
தேவா green tea பற்றி விளக்கமாக தந்தமைக்கு நன்றிகள்.

குண்டாக இருப்பது சிலருக்கு உடல் வாகாகவும் இருக்கலாம். மரபணுக்களின் ஆளுமையாகவும் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, பருமனோ, ஒல்லியோ, எப்படி இருந்தாலும் சரி, நோயற்று வாழவேண்டும். அதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்று யோசித்துச் செயல்படுவதே புத்திசாலித்தனம். உப்பைக் குறைப்பதை நாம் குழந்தைகளுக்கும் ஆரம்பத்திலிருந்தே பழக்கினால் நல்லது. வீட்டில் அனைவருக்கும் பொதுவாய்த் தயாரிக்கப்படும் உணவில் உப்பைக் குறைப்பது சாத்தியமில்லையெனில், தயிர் சாதத்திற்கு உப்புப்போடாமல் சாப்பிட்டுப் பழகினாலே போதுமானது. எங்கள் வீடுகளில் இப்படிதான் செய்கிறோம்.

அடுத்தது, நடைப்பயிற்சி. இதை உடல் இளைக்க மட்டுமின்றி சாதாரணமாகவே எல்லோரும் பின்பற்றினால் நல்லது. எடை குறைகிறதோ, இல்லையோ, ஆனால் நடைப்பயிற்சியின் மூலம் நாம் அடையும் நன்மைகள் பல.

உணவுக்கட்டுப்பாட்டுக்கு முக்கியம் மனக்கட்டுப்பாடு. அது இருந்தால்தான் வாயைக் கட்டி பின் வயிற்றையும் கட்டமுடியும். உங்கள் மனக்கட்டுப்பாடு நிலைத்து நிற்கவேண்டுமென்று நான் விரும்பி வாழ்த்துகிறேன். இன்னொன்று, நம் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே அதிக கொழுப்புள்ள தின்பண்டங்களையும், நொறுக்குத்தீனியையும் தவிர்ப்பது நல்லது. பிற்காலத்தில் அவர்களும் நம்மைப் போல் கூடுதல் எடை குறித்துப் புலம்புவதைத் தவிர்க்கலாம். இன்றைய குழந்தைகளுக்கு உடல் ரீதியிலான விளையாட்டுகள் மிகக்குறைவு என்பதும் ஒரு காரணம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்