வாய்ப்பன்

தேதி: August 17, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

சுவையான இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கி வரும் <a href="experts/2552" target="_blank">திருமதி. நர்மதா </a>அவர்கள் இந்த வாய்ப்பன் பணியாரத்தை செய்து காட்டியுள்ளார். இது இலங்கையில் தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பு பணியாரமாகும்.

 

கோதுமை மாவு - 2 கப்
நன்கு பழுத்த வாழைப்பழம் - 2 பெரியது
சீனி - அரை கப்
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

கோதுமை மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், சீனி சேர்த்து கலக்கவும்.
பின்னர் வாழைப்பழத்தை நன்கு மசித்து கோதுமை மாவு கலவையுடன் கலந்து நன்கு பிசையவும்.
கலவை கெட்டியான சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும்வரை பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
கையை தண்ணீரில் நனைத்து ஈரக் கையுடனேயே மாவை சிறிய பந்து போன்ற உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒவ்வொரு முறை உருண்டை பிடிக்கும் போதும் கையை தண்ணீரில் நனைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி கொதிக்க வைக்கவும். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.
பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து எண்ணெய் வடிய விடவும். இப்போது சுவையான வாய்ப்பன் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hi
It is really tasty food. Husband & My mother in law are also like it. That is the best one what I prepared.

be happy
suba

be happy

மிகவும் நன்றி :)
-நர்மதா :)

நீங்கள் கூறிய அளவின்படி மா பிசைந்தபின் மா ரபர் மாதிரி வந்தது. அதைபொரித்த பின் நடுவில் மா வேகாமல் இருந்தது. மா அளவில் பிழையா என்று தெரியவில்லை. நீங்கள் கூறிய 2 கப் எத்தனை ml என்றும் வாழைப்பழம் எத்தனை கிராம் என்றுக் கூறுவீர்களா?

நன்றி