பேல் பூரி

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

கோதுமை மாவு - ஒரு சிறிய கப்
பேரீச்சம்பழம் - 150 கிராம்
புளி - 25 கிராம்
வெல்லம் - 100 கிராம்
கடலை பருப்பு - 25 கிராம்
அரிசிப்பொரி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 4
உருளைக்கிழங்கு - 4
மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 15
கொத்துமல்லி - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கோதுமை மாவில் உப்புக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டுப் பூரிப் பதத்திற்கு மாவு பிசைந்துக் கொண்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும்.
பின்னர், மிகச்சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெய்யில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
விதை நீக்கிய பேரீச்சம்பழத்தையும், புளியையும் மூன்று கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து நன்றாக கடைந்துகொண்டு அதில் வெல்லத்தையும் சேர்க்கவும்.
கடலைப் பருப்பையும், பச்சை மிளகாயையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொண்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
இரண்டு சட்னியையும் தனித்தனியாக வைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசிப்பொரி, நொறுக்கிய பூரித்துண்டுகள், உப்பு, மிளகாய்த்தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இந்த கலவையில் தேவையான அளவு இரண்டு சட்னியையும் சேர்த்துப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஆஹா,இதை இத்தனை நாளா பார்கலையே,நல்லா இருக்கும்னு தோனுது. இந்த ரெசிப்பியை யாராவது டிரை பண்ணீருக்கீங்களா?நான் பண்ணலாம்னு இருக்கேன்.ஜலீலக்கா,சின்ன பூரிகளாக இடும் போது,கிரிஸ்பியாக இருக்க என்ன செய்யலாம்?

கே.ஆர்
ஆ பேல் பூரியா எனக்கு ரொம்ப பிடிக்கும்.

என்னபா தடிமனா செய்தால் உப்பும் மெல்லியதா தட்டனும் மொருகல பொரிக்கனும்.
ஈசிபா எல்லாத்த்தையும் போட்டு கலக்கனும் அவ்வளவு தான்.

இதெல்லாம் தேவையில்லை கடையில் தட்டைய வாங்குங்க நாலா நொருக்கி போடுங்க.
மெயின் இதில் ஓம பொடி இருக்கனும், அதான் சூப்பர்.
ஜலீலா

Jaleelakamal

அக்கா,இந்த ரெசிப்பியின் சொந்தக்காரர் ஓமப்பொடி சேர்க்கசொல்லலை,ஆனால் நாம் சேர்த்துக்கலாம் இல்லையா?அக்கா இது என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் டிஷ்.யாருக்குத்தான் பிடிக்காது பேல் பூரி,டில்லியில் இதுக்குனே பைத்தியம் பிடித்து அலைவார்கள்,அங்கு இதையும் பானி பூரியும் ஸ்பெஷலான ருசியில் செய்வார்கள்.ஆஹா...நாக்கு ஊறுதே,அதை நினைக்கையிலே ....

இருங்க கே .ஆர் நான் ஈசியா முறையில் சொல்லி தறேன், என்னா அம்மணிக்கு மசக்கையா?
ஜலீலா

Jaleelakamal

அட அக்கா,எதோ சாபிடனும் போல இருக்கு.
ஒரே ஜோக் தான் போங்க,உங்களோடு.akka,i will see ur easy recipe tomorrow,as it is 9.30 here.

பூரி கிரிஸ்பியாக இருக்க ஒரு பங்கு ரவைக்கு இரண்டு பங்கு மைதா சிறிது உப்பு சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய வட்டங்களாக இட்டு முள்கரண்டியால் குத்தி எண்ணையில் மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்---ஸாதிகா

arusuvai is a wonderful website