face

hi,
my skin tone is not even.i am dark colour.I want a even and bright look.Can any one help me.

tks in advance
vino

வினோ,முகத்தின் நிறம் கூட ,தினமும் பப்பாளி சாப்பிடுங்கள். அது தரும் பள பளப்பை விரைவில் கண்டு கொள்வீர்கள். உருளைக் கிழங்கை அரைத்து முகத்தில் தடவுங்கள். அது ஒரு இயற்கை ப்ளீச். கண்ணின் கருவளையம் கூட மறைந்து விடும். இரவு தூங்கும் முன் முகம் கழுவி Fade Out என்ற க்ரீம் கடைகளில் விக்கும். அதனை தடவிக் கொள்ளுங்கள். அது கிடைக்காவிடில் Olay Total White Cream for Fairness என்று கிடைக்கும். அதுவும் நல்ல பலன் தரும். வெயிலால் கருத்த முகமென்றால் அலோவேரா ஜெல் தடவலாம். தினமும் ஒரு ஸ்பூன் தயிர் + 1/2 ஸ்பூன் சந்தனம் + 1/4 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் + 1/2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து முகம் ,கழுத்து தடவி 1/2 மணி நேரம் கழித்து குளியுங்கள். வித்தியாசம் தெரியும். மிகவும் கருத்த சருமமாக இருந்தாலும் பள பளப்புடன் even ஆக இருக்கும். பருவும் வராது.

எனக்கு ஸ்கின் ரொம்ப sensitive இருக்கு. வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் வியர்க்குரு பயங்கரமாக வந்துள்ளது. shower to shower powder யூஸ் பண்ணுறேன். அப்படி இருந்தும் பயனில்லை. நான் என்ன செய்வது தண்ணீர் நிறைய குடிக்கிறேன். அடிக்கடி முகம் கழுவுகிறேன். தோழிகளே நீங்கள் தான் பதில் கூற வேண்டும்.

கௌதமி
நீங்க நிறைய பழச்சாறு குடியுங்கள்.வியர்க்குரு வராது.இது அனுபவத்தில் கண்ட உண்மை.

மிக்க நன்றி. பலச்சாறு என்றால் எந்த பழம்? மேலும் ஸ்கின் பளப்பளபாக இருக்க என்ன செய்ய வேண்டும்? உங்கள் நேரத்தை ஒதுக்கி பதிவிட்டதற்கு மிக்க நன்றி

மேலும் சில பதிவுகள்