சின்ன சின்ன வீட்டுகுறிப்புக்கள்

அடுப்பின் மேல் அலுமினியம் பாயில் போட்டு மூடி வைக்கவும்.பர்னருக்கு மட்டும் துளையிட்டுகொள்ளவும்.இதனால் அடிக்கடி க்ளீன் பண்ணும் பிரச்சனை இல்லை.

காய்களை வெட்டி தண்ணீரில் போடுவதால் தண்ணீரில் கறையும் வைட்டமின்கள் கரைந்துபோய்விடும்.காய்களை நன்றாக கழுவியபின் தண்ணீரில் போடுவதை தவிர்க்கவும்.

சுடான தண்ணீரில் விம் அல்லது சோப்பு போட்டு கழுவினால் எண்ணை பிசுபிசுப்பு விரைவில் போகும்.

உருளைகிழங்கை தோலுடன் சமைப்பது நல்லது.

பருப்பு, அவித்த உருளைகிழங்கு மீதமானால் குளிர்சாதனபெட்டிலில் வைத்து திரும்ப சாம்பார் மற்றும் பொரியலில் உபயோகிக்கலாம்.அவசரமாக செய்வதற்கும் இப்படி முன்னரே வேகவைத்து குளிர்சாதனபெட்டிலில் வைத்துக் கொள்ளலாம்.

மீதமான பாஸ்மதி சாதத்தை பிரைட் ரைஸ் செய்ய உபயோகப்படுத்தலாம்.

சப்பாதி மிருதுவக வர மாவு பிசையும் போது கொஞ்சம் தயிர் சேர்த்துக்கொள்ளவும்.

எலுமிச்சையில் இருந்து சாறு பிழிவதற்கு முன் சிறிது நேரம் தண்ணீரில் போட்டு எடுத்தால் அதிகமான சாறு கிடைக்கும்.

சமைக்கும் உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உருளைகிழங்கை வெட்டி போட்டால் அது உப்பை குறைக்கும்.

கடையில் வாங்கும் பழங்கள் பழுக்காமல் இருந்தால் அதை காகித பையில் போட்டு வெளிச்சம் குறைவான இடத்தில் வைத்தால் பழுத்து விடும்.

காய்ந்துபோன காய்களை சிறிது நேரம் உப்பு கலந்த தண்ணீரில் போட்டு எடுத்தால் நன்றாக இருக்கும்.

முட்டை கெட்டுபோனதை அறிந்துகொள்ள அதை ஒரு தண்ணீர் நிறம்பிய பாத்திரத்தில் போட்டால் தெரியும்.முட்டை மிதந்தால் அது கெட்டுபோனது.பாத்திரத்தின் அடியில் சென்றால் அது நல்ல முட்டை.

இஞ்சி பூண்டை அரைத்து கொஞ்சம் எண்ணை கலந்து குளிரூட்டியில் வைத்து கொண்டால் அவசரத்திற்கு எடுத்து உபயோகிக்கலாம்.

இதுமாதிரி உங்களுக்கு தெரிந்த குறிப்புகளை எழுதுங்க.

குறிப்புதான் குடுக்கல இதிலாவது எதாவது எழுதுங்க.வெட்டியா எவ்வளவு நாள்தான் ஓட்றது.கூட்டாஞ்சோறு பக்கம் போய் பாருங்க நாங்கல்லாம் எவ்ளோ கொடுத்திருக்கோனு தெரியுதா??

உங்க பதிவை யாரும் குத்தி காமிக்கிற பதிவா எடுத்துக்க கூடாதேன்னு அவசர அவசரமா உங்களை கிண்டல் பண்ற மாதிரி பதில் கொடுத்துட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க.

ஹேமா தப்பா எடுக்க மாட்டாங்கனுதான் அவங்களுக்கு மட்டும்னு எழுதினேன்.நானும் எதுவும் எழுதுவதில்லைனு தெரிந்திருக்கும்.நீங்க எழுதினதை நீக்க தேவையில்லை.நான் எதுவுமே நினைக்கவில்லை.உண்மையில் ரொம்ப நேரம் சிரித்து விட்டுதான் பதிலே எழுதினேன்.என்னுடைய பல பதில்களில் இருந்து தெரிந்திருக்குமே?நான் உங்களின் நகைச்சுவையை ரசிப்பவள்.மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் வேண்டவே வேண்டாம்.இந்த தழிழ் என்னிடம் ரொம்ப கஷ்டப்படுது.வாயமூடிட்டு சும்மா இருந்திருக்கலாம்.ஹேமா இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.

ஹாஹா அட்மினன்னா..இப்ப எனக்கு ஒன்னு நியாபகம் வருது..இப்படி தான் அன்னக்கி நீங்க பால் பாட்டில் மறக்கதிக்க தமாஷ் பதில் குடுத்தப்ப நான் உங்களைக் காப்பாதப் போய் எதுவோ எழுதிட்டேன்...நீங்களும் என்ன மாதிரி தானா...நான் அத படிசிட்டேன்..தப்பா நினகிர மாதிரி நீங்க எதுவும் எழுதலயே...உங்களுடைய்ய திறமைய்யே அதுதான் யாரயும் கஷ்டபடுத்தாத மாதிரி எழுதுவீங்க....என்ன ரோஸ் தன்டனை எல்லாம் குடுக்கரதில்லையா???வ.ம.ச வை வருத்தப் படாதவர்கள் சங்கம் நு மாத்தி அதில அட்மினையும் சேத்துடுங்க:-)

அட்மின் ஏன் யூசெர் ப்ரொஃபைல்ல ஒன்னும் எழுதல?

இப்ப விடுகதை படம் பாத்தேன்..நல்ல தான் இருக்கா இல்லையானே ஜட்ஜ் பன்ன முடியாத படமா இருக்கே...மனிவன்னன் காமெடி நல்ல யோசிக்கவெக்கரமாதிரி இருக்கு...இதயம் இதயம் பாட்டு நல்ல இருக்கே

ரூபீனா நீங்க முழு படமும் பாத்தீங்களா

அன்புடன்
ரீஹா :-)

சகோதரி தளிகா அவர்களுக்கு,

அட்மின் என்ற பெயருக்கு profile கொடுக்கவில்லை. காரணங்கள்:

1. நான் பாபு (babu) என்ற எனது நிஜப் பெயரில் உறுப்பினராக பதிவு செய்து இருக்கின்றேன். அந்த பெயருக்கு profile கொடுத்துள்ளேன்.

2. அட்மின் என்ற பொறுப்பில் இது நாள் வரை நான் இருந்து வந்தாலும், நாளையே அந்த பொறுப்பிற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அட்மின் என்பது அறுசுவை இணையத்தை பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவருக்கான பொதுப் பெயர். அது எப்போதும் நானாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நாளடைவில் பலர் அதை பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான் எனது தனிப்பட்ட கருத்தை கூறும்போது அட்மின் பெயரில் வராமல், பாபு என்ற பெயரில் வருவேன். இருந்தாலும் பல நேரங்களில் logout செய்து login செய்ய அலுப்புப்பட்டுக்கொண்டு அட்மின் என்ற பெயரிலேயே பதிவுகள் செய்துவிடுகின்றேன்.

Hi thalika,
என்னோட பதிலையும் படிச்சீங்களா?(சாதம் ஊட்டிகொண்டே ஒரு கையில் அடித்தது).அதையும் சேர்த்து எடுத்துவிட்டார்.நடந்தது தெரிந்திருந்தால் எனக்கு உதவிக்கு வந்திருக்கலாமே?பால்பாட்டில் விஷயத்தில் நீங்க மளையாளப் பொண்னுன்னு தப்பிக்க வழி சொல்லிகொடுத்தேனே மறந்தீட்டீங்களா???எனக்கும் அதே விஷயம்தான் ஞாபகம் வந்தது.
இன்னோர் விஷயம்.உங்களோட ஒபனிங் செரமனி என்னாச்சு??

மேலும் சில பதிவுகள்